Wednesday, July 26, 2017

தாயாரின் மறைவிற்கு அழாத பிரிட்டிஷ் இளவரசர்கள்

மறைந்த  பிரிட்டிஷ் இளவரசியின் இருபதாம் நினைவு நாள் ஆகஸ்ட்டில். இளவரசர்கள் வில்லியம், ஹாரி தங்கள் தாயார் பற்றிய பெர்சனலான நினைவுகளை முதன்முறையாக ஒரு தொலைக்காட்சி சானலில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இளவரசர் ஹாரி இதுவரை இருமுறை மட்டுமே தன் தாயாரின் மறைவுக்காக அழுதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 20 வருட துக்கம் இன்னும் எக்கச்சக்கம் மீதமிருக்கிறது என்கிறார். Coincidental ஆக  ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமலஹாசன் தன் தாயார், தகப்பனாரின் மறைவின் போதோ அல்லது மிகச்சமீபமாக அவர் சகோதர்ரின் மறைவின் போதோ வாய் விட்டு அழுததெல்லாம் இல்லை. மாறாக சம்மந்தமேயில்லாமல் ஒரு சூரிய உதயத்தைப் பார்க்கும்போது அழுகை பீறிட்டுக்கிளம்பியது என்கிறார்.

யோசித்துப்பார்க்கும் பொழுது, இன்று வரை என் தகப்பனாரின் மறைவுக்கு நான் அழுததே இல்லை. அவர் மறைந்த போது என் வயது எட்டு. ஏன் அழவில்லை - சத்தியமாகத் தெரியவில்லை. மிச்ச வாழ்க்கையைத் தகப்பனில்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்ற மகா திகில் முன் அழுகை வரவில்லையோ???

வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் untimelyயாகப் பிடுங்கிக்கொள்ளப்படும்போது எஞ்சுவது ஒரு மிகப்பெரிய ஷாக் மட்டுமே. புலன்கள் செயலிழந்து விடுகின்றன. என்று அந்த வலியும், ஷாக்கும் குறைகிறதோ அன்று தான் அதற்காக அழ முடியும். 

ஒரு மறைவிற்கு உங்களால் அழ முடிந்தால் நீங்கள் பாக்கியவான்கள். Vent out பண்ண முடியவில்லையென்றால் you are yet to overcome the shock. Before falling into depression, psychological help எடுத்துக்கொள்ளலாம் தவறில்லை. இளவரசர் ஹாரி செய்ததும் அதைத்தான்.

5 comments:

Unknown said...

Ungalin thukkam en thondaikuzhi adaikirathu !!.u have surpassed Kamal and Harry williams...As far as my memory lane goes my sister never cried for my dad's demise..Though younger to her I cried.The most probable reason was I couldnt stand my moms tears..I was seven when I lost him physically..My dad is still living in my dreams....

Unknown said...

Ungalin thukkam en thondaikuzhi adaikirathu !!.u have surpassed Kamal and Harry williams...As far as my memory lane goes my sister never cried for my dad's demise..Though younger to her I cried.The most probable reason was I couldnt stand my moms tears..I was seven when I lost him physically..My dad is still living in my dreams....

மாலா வாசுதேவன் said...

May be elder ones begin thinking about shouldering the responsibilities I guess irrespective of age and gender

மாலா வாசுதேவன் said...

Thank you very much for taking time to read and comment

தனிமரம் said...

அழுகை மூலம் உணர்ச்சிகள் தளர்வு பெறுகின்றது. அழுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட குண இயல்பு என்றும் எண்ணமுடியும்!

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes