Friday, May 25, 2018

Drop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா

இன்றைய மாணவர்களிடம், நல்லா படிங்கப்பா. படிச்சா தான் லைஃப்னு சொன்னா - நீங்க எப்டி மேம் அப்டி சொல்றீங்க. எவ்வளவோ ஃபீல்டு இருக்கு மேம், பெரிய அளவுல அச்சீவ் பண்ணவங்கலாம் Drop outs தான் மேம் அப்டின்னு நமக்கு அட்வைஸ் பண்றான். ஆ,ஊன்னா பில் கேட்ஸ் காலேஜ் முடிக்கலன்னு சொல்ல வேண்டியது.
ஆனால், இவங்க கவனிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. பில் கேட்ஸ் drop out தான். ஆனா செலவுக்கு வீட்ல பணம் வாங்கிட்டு சுத்தல. His SAT score was 1590/1600 when he was 18 and got a seat in Harvard. He devised an algorithm for a problem posed by his professor, which remained the fastest algorithm for 30 years.
அப்புறம் இருவது வயசுல மைக்ரோசாப்ட் கம்பனிய ஆரமிச்சாச்சு. நம்ம பசங்க க்ளாசுல உக்காந்துகிட்டு ஒரு Focus இல்லாம பில் கேட்சுன்னு ஆரமிச்சா செம கடுப்பாகுது.
சரி அமரிக்கா வர போக வேணாம். நம்ம காமராசர் - படிக்காத மேதை - school க்கு போல. எல்லாம் கரக்ட் தான். ஆனா நாட்டோட விடுதலைக்குப் போராடணும்ங்கிறது அவரோட aim.      இருவது வயசுல அரசியல்ல Full time involved. கொடி சத்யாக்கிரகத்த லீட் பண்ணிட்டு இருந்தார்.

உன் aim என்னனு முடிவு பண்ணிட்டியா? Girl/boy friend கிடைக்கணும், commit ஆகணும் - இதத் தவிர என்ன discuss பண்ற? (Exceptions are there. You can feel free to imagine yourself to be one among them. I don't mind 😜)

நம்ம என்ன செய்யப் போறோம்னு ஒரு தெளிவு இருக்கணும். அத நோக்கி வேல செய்ற மனத்திண்மை இருக்கணும். படிப்பு தேவயிலலன்னு சொல்றது ஒரு அரைவேக்காட்டு வாதம்.Even kamal hassan, dhanush have in many stages expressed their regrets over not completing their education though they are very successful in their professions.

Youngsters first ஒழுங்காப் படிங்க. Drop out ஆன Few handfuls கூட உங்கள Compare பண்ணிக்காதீங்க. சச்சின் டென்த்தோட படிப்ப விட்டுட்டு அம்மா கிட்ட பணம் வாங்கிட்டு ஊர் சுத்தல. நேரா பாகிஸ்தான் மேட்சுக்கு Ground போயாச்சு. அந்த அளவுக்குத் திறமயா இருந்தா மட்டும் அவங்க கூடலாம் உங்கள கம்பேர் பண்ணிக்கோங்க.

லவ் ஃபெயிலியரா - இதப் படிங்க

நம்மில் அனேகர் பதின் பருவங்களில் அழகான காதல் அல்லது காதல் போன்ற ஒன்றைக் கடந்து வந்திருப்போம்     (அவளும் சுண்டு விரல்ல நகம் பெருசா வளக்குறா, நாங்க ரெண்டு பேருமே ரெட் கலர்ல பிரஷ் வச்சிருந்தோம், இத்யாதிகள். என்ன ஒரு காதல் இணை    😜) ஆனால் அந்த வயதில் இது போன்ற  ஒற்றுமைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தெரிந்தன.
  ஒரு வேளை நம் காதல் சம்மந்தப்பட்ட ஆணாலோ பெண்ணாலோ  நிராகரிக்கப்பட்டிருக்கலாம் இல்லையெனில் வேறு ஏதோ காரணங்களால் திருமணத்தில் முடியாமல் போயிருக்கலாம்.  Anyway, life must go on. You could have ended up with a different life partner. But ஒரு கட்டத்தில் உங்கள் மனங்கவர்ந்த எல்லா பாடல்களின் நாயகன்/நாயகியாக உங்கள் வாழ்க்கைத்துணையே மாறுவார். எந்தப் புள்ளியில் இந்த ரசவாதம் ஏற்படுகிறது என்று புலப்படாமலே இந்த மிக அழகான transformation நடக்கும். இதற்குப்பின் உங்களுக்கு மிகப்பிடித்திருந்த (ஒரு காலத்தில் வேறொருவர் ஆக்கிரமித்திருந்த) பாடல் வரிகள் நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்  , உன் பேர் சொல்ல ஆசைதான், என் இன்பம், என் துன்பம் எல்லாமே நீ அன்பே   etc etc எல்லாவற்றிலும் your life partner will be sweetly occupying. நிராகரிப்பின் வலி, that immense pain you've undergone would have vanished forever. Karthik gets kicked out and Mohan occupies the throne, till your death.
So my dear youngsters, ஒரு வேளை காதல் தோல்வியிலோ, நிராகரிப்பிலோ மனம் வேதனையுற்றிருந்தால் அல்லது தீராத தனிமையில் வெந்து கொண்டிருந்தால், don't worry. One fine day, you will reach your wonderful destiny. At that time, your today's sufferings will become a distant past memory 😃

IAMKவும் இளைய தலைமுறையும்

இப்போ சென்னைல ஒரு படம் செமயா ஓடிக்கிட்டு இருக்கு. இத main stream porn movie னு பேரு வச்சு கூப்டுக்கிட்டு இருக்காங்க. இளைஞர்கள் கூட்டமாம் தியேட்டர்ல. எதுவுமே டபுள் மீனிங் கெடயாது, எல்லாமே ஸ்ட்ரைட் மீனிங்தான் அப்டீனு படக்குழுவினர் பெருமயா பேட்டி குடுக்குறாங்க.

என்   க்ளாஸ்  பசங்க நெறய பேர் வாட்சப் ஸ்டேடஸ்,  Fb Status ல groupies போட்டு,Watching IAMK னு tag போட்டுட்டிருக்காங்க. கஷ்டப்பட்டது வீணாப் போகல. டிக்கெட் கெடச்சிருச்சு அப்டீன்னு ஒரு செல்ஃபீ. Where are we heading towards?

இளம் வயதினருக்கு ஒரு curiosity இருக்கும் சில விசயங்கள தெரிஞ்சுக்கிறதுக்கு. தப்பில்ல. முந்தைய தலைமுறையும் பிட்டு படம் கட்டாயம் பாத்திருப்பாங்க. ஆனா பெரியவங்களுக்குத் தெரிஞ்சிரக்கூடாதுன்னு நெனச்சாங்க. சின்னதா ஒரு பயம் இருந்துச்சு. இன்னக்கி எந்த ஒரு பயமோ குற்ற எண் உணர்ச்சியோ இல்லாம Status update - யார் வேணா பாத்துக்கோ எனக்கென்ன.Is this fair youngsters?

ஏற்கனவே பெண் என்பவள் ஆணுக்காகப் படைக்கப்பட்ட ஒரு உடல் என்பதைத் தாண்டி யோசிக்க முடியாத   ஒரு சமுதாயத்தில் இது போன்ற படங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஆசிரியைகள் எங்கள் பாடத்தில் வரும் கணினி சார்ந்த டெக்னிக்கல் வார்த்தைகளை வகுப்பறை யில் சொல்வதற்குக் கூசுகிறோம் (எல்லாத்துக்கும் இன்னொரு மீனிங் இருக்காம். We encounter ugly grins) இந்த மாதிரியான சூழலில் டபுள் மீனிங்கே கெடயாது எல்லாம் ஸ்ட்ரைட் மீனிங் தான்னு இவங்க சொல்றத கேட்டாலே பயமாருக்கு.

12,13 வயது பிள்ளைகள் I'm in love with your body, oh I Oh I னு பாடும்போது, இன்னும் அதிகமான ஒரு retrogressive சமூகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. உடலை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு கலை வடிவங்கள் வெளியாகும்போது நிர்பயாக்களும் தஸ்வந்த்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது.

கலை வடிவங்கள் மண்ணில் உழலும் மனதை உயர்த்த வேண்டும். நம்முள் பொதிந்திருக்கும் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டும் விசயங்களைத் தவிர்ப்பது ஒரு சமுதாயமாக நாம் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருக்கும். யோசிங்க youngsters!!! 

தென்மலை ஈகோ டூரிசம் - ஆனைகளின் அருகே

வெகேஷன் எங்கயாவது இந்த வருசம் போயே ஆகணும்னு ஒரு தீர்மானம்  (வருசம் போன போக்கு அந்த மாதிரி - மண்ட காஞ்சிருச்சு). இங்க அங்கனு கொழப்பி தென்மலைனு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் ட்ரிப் அட்வைசர் பாத்து ரிசார்ட்டும் புக் பண்ணியாச்சு. ஆல் செட்.

செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் நெறய பாக்கேஜ் தருகிறார்கள் . அதிலிருந்து குறுந்தொட்டில் ஃபாரஸ்ட் கேம்ப்பிங் ஆப்ட் செய்திருந்தோம். The day has arrived and we went to Shendureney tourism office . இது கேரள வனத்துறையினரால் ஆர்கனைஸ் செய்யப்படுகிறது . சென்றவுடன் ஒரு ஃபாரம் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். டிபிக்கல் கவர்ன்மென்ட் ஆஃபிஸ் சாணித்தாள் . பாதி எழுத்து என்னனே தெரியல. சாராம்சம் இது தான் - ஒங்க உசுருக்கு எதுவும் ஆனா நாங்க பொறுப்பில்ல . எங்க கிட்ட நஷ்ட ஈடு கேக்க கூடாது. நல்ல  வேள எல்லா எழுத்தும் தெரியல. இன்னும் பீதியாயிடும். Formalities முடிச்சுட்டு வெளிய வந்தோம் .( கேஷ் மட்டும் தான் அக்சப்ட் பண்றாங்க) ஜீப் ரெடியா இருந்தது . டிரைவர் ஜோஸேட்டன் ( ஜோஸ் சேட்டன் - ரொம்ப ஃப்ரண்ட்லி, 19 வருசம் காட்ல காரோட்றார்). ஒரு கைட், ஒரு ஹெல்ப்பர், ஒரு குக் இவர்களுடன்  பயணம் தொடங்கியது .

ஒரு நாலு கிலோமீட்டர் தார் ரோட்ல ஓட்டுனார். அப்புறம் காட்டுப்பாதை ஆரம்பித்தது. எலும்புகள் பார்ட் பார்ட்டா கழன்றும் போல . பத்து வருஷம் முன்னால வந்துருக்க  வேண்டிய ட்ரிப்ப வயசானக்கப்புறம் வந்துட்டோமோன்னு யோசிக்கி முடிக்கிறதுக்குள்ள கேம்ப் ஷெட் வந்துருச்சு இறங்குங்கனு சொன்னார் சேட்டன் .  கைட் ஜீப்பிலிருந்து ஒரு முப்பதடி தூரத்துல யான நிக்கிது வாங்க பாப்போம்னு கூப்டார் . உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கச் சொல்றார். பூனை பாதம் வைத்து ஒரு பத்தடி தூரத்தில் அடர்ந்த காட்டில்  நின்று யானை சிறு மரக்கிளையை உடைத்து உடைத்து சாப்பிடுவதைப் பார்க்க திகிலாக இருந்தது . ஜோஸேட்டன் , வாசு - என் கணவர், இரு பிள்ளைகள்- 11, 13 வயது அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருக்க, நான் பயம் தாங்க முடியாமல் ஜீப்பருகே சென்றேன் . கைட் பிள்ளைகளைக் கூப்பிடுங்க. ஆனெ கேறி வந்தெங்கில் பெரியவங்க ஓடிரலாம். ஆனா சின்னவங்களால ஓட முடியாதுன்னார் . என்னாது ஆனெ கேறி வருமா - அவ்வ்வ்வ், முடியல. இவங்கள எப்புடி கூப்டறதுன்னும் தெரியல .நான் இவங்கள கூப்டு ஆன வந்துருச்சுன்னா???!!!!!. அப்றம் இப்டி அப்டின்னு ஏதோ கேணத்ததனமா சைகைலாம் பண்ணி பசங்க ஒரு வழியா என்னப் பாத்துட்டாய்ங்க.நான் வா வான்னு ரொம்ப விகரஸா கூப்ட்றத பாத்துட்டு தல தெறிக்க ஓடி வர்றாய்ங்க . அட டேய் சத்தம் கேக்காம ஓடி வாங்கடா. யானக்கி கேட்ற போவுது. அதுக்குள்ள ஆனெ வாசுவயும் ஜோஸேட்டனயும் பாத்துட்டு காட்டுக்குள்ள சர சரன்னு எறங்கி போயிருச்சு. கைட்  சொன்னார்
காட்டெருமையும், கரடியும் தான் மனுசங்கள தொரத்துமாம் . கொல்லாம வுடாது அப்டீன்னு மலையாளத்துல சொன்னார் சேட்டன். ஆனா
யான மேக்சிமம் மனுசங்கள அவாய்ட் பண்ண தான் ட்ரை பண்ணுமாம். புலியும் அதே. அப்பாடி. இப்ப டாப் ஹட்குள்ள போயிரலாம். நம்ம தங்கப்போற Top hut, jeep நின்ன எடத்துல இருந்து பசுமையான    ஒரு முப்பதடி பள்ளத்துல இருக்கு. சுத்தி ஒரு எலக்ட்ரிக் ஃபென்ஸ். ஜீப் கிட்டயிருந்து பாத்தா இப்டி ஒரு Hut இருக்குறதே தெரியல. இவ்ளோ ஸ்டீப்பா எறங்கிலாம் யான வராதுனு டிஸ்கவரி சேனல் ரேஞ்சுக்கு கத வுட்டான் என் மகன். சந்தோசமா நடந்து வந்தேன்.    பாத்தா   ஃபென்ஸ் பக்கத்துல யானச் சாணம். மகள் மகனை நல்லா சாத்துனா . எனக்கு திருப்பி பயம் கெளம்பிருச்சு.

குடில்ல போய் செட்டில் ஆயாச்சு. நம்ம குக் சேட்டன் கட்டன் சாய் குடுத்தார் . Imagine அடர்ந்த காடு, அதன் நடுவே ஏழே ஏழு பேர், காட்டின் பேரமைதி, திடீரென்று அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கிளம்பும் ஏதோவொரு பறவையின் கூவல், பின்னர் சில்வண்டுகளின் ஒலி, தொலைவில் ரிசர்வாயர், தண்ணீர் பருக வரும் வனவிலங்குகள் - Amazing it was.

குடிலைச் சுற்றி இருக்கும் Fence ஐ ஒட்டிய மரஞ்செடிகள் மிதிபட்டு கிடக்கின்றன. ஆனெ  சவட்டி எறிஞ்சு நேத்து அப்டீன்னார் நம்ம கைட் சேட்டன் . மறு நாள் காலை இன்னும் அடர்ந்த காட்டுக்குள் ட்ரெக்கிங். இதுதான் நம்ம பேக்கேஜ். ஜீப்பிலிருந்து Hutக்கு வந்ததே எனக்கு ரொம்ப அட்வன்ச்சரஸ் . இதுல காட்டுக்குள்ள அஞ்சு கிலோமீட்டரா?? ஒரு நிமிசம் தல சுத்திருச்சு 😜.
 ட்ரெக்கிங் வந்தா ஆனெ பயம் வரமாட்டேன்னு சொன்னா வாசு பயம் - என்னடா இது மதுரக்கி வந்த சோதன . ஓகே எவ்வளவோ பண்ணிட்டோம் .இதப் பண்ண மாட்டோமா. காலைல சாப்ட்டு போவோம்னு சொன்னார் நம்ம ஹெல்ப்பர். டிஃபன் பாசிப்பயறு புட்டு வாழப்பழம் அப்பளம் சீனி . எத எதுல போட்டு சாப்டுறதுன்னு ஒரு Confusion ல எல்லாத்தயும் கலந்து அடிச்சாச்சு. Then came the moment of the day. Trekking into the dense forest. சேட்டா கரடி வராதுல . ஒரு சிரிப்பு - வரும், எது வேணா வரும் . அது வீட்டுக்குள்ள தான நம்ம போறோம் அப்டீனார் . சேட்டன்மார் அநியாயத்துக்கு உண்ம பேசுறாங்கப்பா. கெளம்பியாச்சு . நாங்க நாலு பேர் நடுல, முன்னாடி ஒரு கைட், பின்னாடி ஒருத்தர் கைல கட்டாரியோட .

கட்டாரி எதுக்குன்னு கேக்கல. அப்றம் காட்டெரும கொல்ல வந்தா தேவப்படும்னு சொன்னாலும் சொல்லுவாரு. இது தேவயா நமக்கு😳. வழியெல்லாம் யானை உரித்த மரப்பட்டைகள், அப்போது போட்ட சாணம், நம்ம சேட்டன் வேற இங்க தான் ஆனெ ரெண்டு பேர சவட்டிக் கொன்னுச்சுன்னு Explanation.


சேட்டா ஆனெ தொரத்துனா எந்தா செய்யின்னு? செர்ரிய மரத்தில் ஏறில்லா . ஆனெ ஒடைக்கும் .ஓட வேண்டியதுதான் ஏதெங்கிலும் தெசயில். Bear grylls இந்த மாதிரி Situation ல என்ன செஞ்சுருப்பார், செருப்பு வாங்கி ஒரு வருசம் ஆயிருுுுச்சே

இந்த பிரச்சனை எல்லாம் யான வந்தா பாத்துக்கலாம் . அது வரை இயற்கையின் அந்தப் பேரழகு, சிட்டுக்குருவி அளவில் பட்டாம்பூச்சி , ததும்பி நிற்கும் ஏகாந்தம் , கணந்தோறும் தோன்றும் வியப்புகள் - கண்ணிரண்டு போதவில்லை . வாழ்வின் மறக்க முடியாத 5 கிலோமீட்டர். மகன் மெதுவாக என்னிடம் கேட்டான் Are you scared? Yes I am scared , fascinated , thrilled . But enjoying and loving  every step of this trail - just like life .

Just like life என்று முணுமுணுத்துப் புன்னகைத்துக் கொண்டான் என் மகன்


( இரண்டு காட்டு யானைகள், மலபார் அணில், கருங்குரங்கு இதெல்லாம் பாத்தோம் If you're particular about it 😊)

Friday, February 9, 2018

மிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக


     வேலன்டைன்ஸ் டே நெருங்கி விட்டது. காலேஜ் வாசலில் ஃபுல்லும் ரெட்ரோஸ் விற்பனை. காலேஜ் காண்டீனில் கேட்பரி சில்க் தான் ஜாஸ்தி விற்பனையாவதாகத் தகவல் .
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே,
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்
 என்றான் பாரதி.
    அடலஸன்ட் வயதில் ஒரு மிகக் கொடுமையான தனிமை ஒன்று வந்து மனதில் கவிந்திருக்கும். அன்பான பெற்றோர், சகோதரன், சகோதரி, ஆகச்சிறந்த நண்பர்கள் எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போன்ற ஒரு துக்கம் மனதை அரிக்கும். சில நிமிடங்கள் தனித்திருந்தாலும், இத்துக்கம் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதே நேரம் ஃபிஸிக்கலி தனித்திருக்கவேண்டும் என்றும் தோன்றும்.
'Solitude has soft, silky hands, but with strong fingers it grasps the heart and makes it ache with sorrow.' – கலீல் கிப்ரான்
மனமெனும் மண்டபம் மவுனமாய் உள்ளது, யாரது யாரது மாயாஜாலமாய் உள்ளது, என்னவள் என்பவள் யார் என்று தேடித் தவிப்பது இந்நிலை.
தண்டவாளத்தில் தலைசாய்த்திருக்கும் ஒற்றைப்பூ நான் – நீ
நடந்து வருகிறாயா அல்லது
ரயிலில் வருகிறாயா (கவிஞர் – யாரோ)
என்று மனம் தடதடக்கக் காத்திருந்து, அவனோ, அவளோ நடந்து வந்துவிட்டால் (ரயிலில் வந்துவிட்டவர்களைப் பற்றி அடுத்துப் பேசுவோம்), மனம் முழுக்க சாரல் மழைதான் – வாவ் வாவ், இந்த ஸ்டேஜில் நாம் நாமே இல்லை – நானே நானா யாரோ தானா – உலகம் வண்ணமயமாய்ப் பூத்துக்குலுங்கத் துவங்கும். மணிக்கணக்கில் நீளும் தொலைபேசி அழைப்புகளும், பிரிந்திருக்கும் நேரமெல்லாம் காணத் துடிப்பதும், ஒன்றாக இருக்கும் மணித்துளிகள் சர்க்கரையாய் கரைவதும், அடேங்கப்பா. வளாகத்தின் ஸ்டோன் பென்ச்சுகளில் அமர்ந்திருக்கும் காதலர்களின் உலகிற்கும் நம்முடைய உலகிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
அப்புறம் ஒற்றைக்கால், இரட்டைக்கால் எல்லாவற்றிலும் நின்று அவனை/ளைத் திருமணமும் செய்துகொண்டுவிடுகிறீர்கள். இனிமேல்தான் இருக்கிறது உங்கள் ஆசிட் டெஸ்ட். நமக்கு சுத்தமாகத் தெரியாத, நாம் இதுவரைப் பார்த்தறியாத முகமும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை உணரத்துவங்குவோம். அப்பா, அம்மா சொன்னத கேட்டுருக்கலாமோன்னு நெனச்சுட்டீங்கன்னா, you are a failure. You could have watched the movie “What happens in Vegas”. This is what the judge says to the couple
Listen, I've been married for twenty five years to the same wonderful, infuriating woman. And granted there are days when I want to light her on fire but I don't, because I love her. And that would be illegal. And you know something, and I might be old fashioned but when I said those vows, I meant them.
சில நேரம் கோபத்தில் எரித்து விடலாம் என்று தோன்றுகிறதாம். நீங்களும் என்னடா பொழப்பு இது. பெரிய தப்பு பண்ணிட்டோமோன்னு நெனக்கலாம். சில நேரம் தோண தான் செய்யும். தப்பில்ல. But, always remember, this is the person you loved with all your heart. குறைகளும் கொண்டவர்தான் உங்களது வாழ்க்கைத்துணை. நீங்களும் அப்படியே. Don’t ever allow a third person between you two – your parents, siblings, friends. காதலித்தவர்களை மணக்காமல் சந்தர்ப்பவசத்தால் வேறு யாரையாவது மணந்தவர்களின் மணவாழ்க்கையிலும், சிறு ஏமாற்றங்கள் வந்தால் கூட போதும் – பழைய உறவுகளைப் புதுப்பிக்க முயல்கிறார்கள்.
Listen, Dinosaurs had their shot, and nature selected them for extinction. – Jurassic park dialogue. Similarly, your previous relationships were also meant to be extinct. You are destined to be with your present partner (Unless and otherwise, the partner is too abusive are anything like that).
சுய-கழிவிரக்கத்தில் தன் பழைய காதலன்/காதலியையோ தேடிப் போவது இப்போது மிகச்சாதாரணமாகவும் சுலபமானதாகவும் மாறிவிட்டது நம்முடைய சோஷல் மீடியாக்களின் புண்ணியத்தில். Men and women in their 40s come to a mid-life crisis and all the hells break loose. A known devil is better than an unknown satan. Remember this.
உங்கள் வாழ்க்கைத்துணையிடம் எதுவெல்லாம் இல்லையென்று நீங்கள் நினைத்து வேறு யாரையாவது நாடுகிறீர்களோ, அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்காத வேறு சாத்தான் ஒளிந்திருக்கலாம்.
For all the married couple out there, get old together. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காது இருக்கட்டும். உங்களின் காதல் தீரா நதியாக உங்களின் ஆன்மக் கரைகளுக்குள் அலை பாயட்டும். என் மனம் நிறைந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes