Wednesday, August 28, 2013

ஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்

சுமார் 20 வருடங்களுக்கு முன், எம்.சி.ஏ சீட் கிடைத்தவர்கள், கடவுளர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். முடித்தவுடன், அரசுக்கல்லூரிகளில் பெர்மணன்ட் வாத்தியார் வேலைக்குச் சென்றவர்களும், ஐ.டி. துறையில் வேலைக்குச் சென்றவர்களும் பிழைத்தனர். மாறாக, ப்ரைவேட் என்ஜினியரிங் கல்லூரிகளில் வேலைக்குச் சென்ற வாத்தியார்களின் நிலை தான் இப்பதிவின் பாடுபொருள்.

முதலில், தகுதியற்றவர்கள் தான் வாத்தியார் வேலைக்கு வருவார்கள் என்ற பிம்பத்தை எப்பாடுபட்டும் உடைக்க இயலாது. நீங்கள் பல்கலைக்கழக முதல் மாணவராக இருந்தாலும் சரி, வாத்தியார் வேலைக்கு வந்து விட்டால் நீங்கள் மக்குதான். சரி அதாவது பரவாயில்லை. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தற்சமயப் பிரச்சினை என்னவென்றால், எம்.சி.ஏ கோர்ஸிற்கு மாணவர்கள் சேர்வதேயில்லை. 120 சீட் இருக்கும் கல்லூரியில் 20 பேர் சேர்கிறார்கள். காரணம் 6 வருடப் படிப்பு. அதனால் வேலையில் இருக்கும் வாத்தியார்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். தங்களுடைய லேட் 30களில் இருக்கும் வாத்தியார்கள், வேலையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களால் வேறு என்ன செய்யமுடியும். இனிமேல் ஐ.டி. துறைக்குள் நுழைவதென்பது இயலாத காரியம். மேலும், ஏற்கனவே ஐ.டி. யில் இருப்பவர்களே பயந்து கொண்டு இருக்கும் சூழ்நிலை இருக்கிறது (நோ ஜாப் செக்யூரிட்டி). எனவே அவர்களுக்கு ஆப்ஷன்ஸ் என்பதே இல்லை என்பது தான் நிதர்சனம்.

எனவே மாணவர்களும், பெற்றோரும் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கும் முன் நிதானிக்க வேண்டியது மிக அவசியம். ஏதாவது ஒரு கோர் சப்ஜக்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பொத்தாம்பொதுவான கோர்ஸுக்கு வேலை வாய்ப்பில்லாமல் போகும்போது, கோர் சப்ஜக்ட் படித்தவர்கள் கட்டாயம் பிழைத்துக்கொள்கிறார்கள். மாறாக டெம்ப்ரரி பூம் இருக்கும் கோர்ஸுகளைத் தவிர்ப்பதே நல்லது.

13 comments:

Ashok Ashok said...

yes.. thats absolutely correct madam..

மாலா வாசுதேவன் said...

Thank you very much for continuously reading and giving your comments ashok. Thanks again :)

Rajisiva said...

well said mam... same problem is going every where. many colleges closed this dept. but there is another option for the MCA staffs is, they can do ME and switch over to engg. departments.

மாலா வாசுதேவன் said...

Thank u Raji fr taking time to read n comment. as u said there is ME option. but evlo naal thaan nammalum padikkirathu :(

Anonymous said...

Engg guys go to other jobs nowadays: for e.g. among the applicants for bank clerk examinations more than 60 per cent are engg graduates.

The problem is not with engg as a subject or a job option. But with students who take the subject out of fashion or parental desire.

Raghav said...

ம்ம்.. சரிதான்.. நான் 2000 - 2003 MCA தொலைதூரக் கல்வி(வார இறுதியில் வகுப்புகள் இருக்கும்) மூலம் படித்த போது சுமார் 500 பேர் படித்தோம்.. இப்போது 50 பேர் கூட வருவதில்லை என்று கேள்விப்பட்டேன்.. 2003 லேயே வேலை கிடைக்க மிகவும் சிரமப்பட்டோம்.. இப்போ இன்னும் மோசம்.. இப்போதும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.. என்ன நீங்கள் மிகச் சிறப்பாக நேர்முகத் தேர்வில் செயலாற்றினால் தான் கிடைக்கும் என்ற நிலை.

மாலா வாசுதேவன் said...

Thank you raghav for reading and commenting. Continue to do so.

மாலா வாசுதேவன் said...

Hi anonymous thanks for your comments. Do come again

bandhu said...

//ஏதாவது ஒரு கோர் சப்ஜக்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பொத்தாம்பொதுவான கோர்ஸுக்கு வேலை வாய்ப்பில்லாமல் போகும்போது, கோர் சப்ஜக்ட் படித்தவர்கள் கட்டாயம் பிழைத்துக்கொள்கிறார்கள்.//
மிக நல்ல அறிவுரை.

kulandaivelu mohandas said...

ஒரு பொத்தாம்பொதுவான கோர்ஸுக்கு வேலை வாய்ப்பில்லாமல் போகும்போது, கோர் சப்ஜக்ட் படித்தவர்கள் கட்டாயம் பிழைத்துக்கொள்கிறார்கள். மாறாக டெம்ப்ரரி பூம் இருக்கும் கோர்ஸுகளைத் தவிர்ப்பதே நல்லது.
WONDERFUL

Prema V said...

paya pullainga MCA MCa nnu aasa kaatti aammathi puttongo.........

Prema V said...

Suitable Title for this Blog mala Hats off to u.....

Imayavaramban said...

ME-க்குப் போறதிலேயும் சிக்கல் இருக்கு! டைரெக்ட்டாக ME-க்குப் போறவங்களுக்கே வேலை கிடைப்பதில் சிக்கல்! ஆகவே, மாலா அவர்கள் சொன்னதுபோல் Core Subject எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes