Saturday, September 17, 2011

பாலுமகேந்திராவின் மனைவி

நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை - படப்பெட்டி சினிமா இதழ் வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா வெளியிட்டுப் பேசியது.தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்; தனது பெரும்பான்மையான படங்களில் (மீண்டும் கோகிலா, மறுபடியும், ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி) கணவன் வேறொரு பெண்ணை நாடிச் செல்லுவதில் உள்ள சிக்கல்களையும், மனைவிக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சலையும், நியாயமான கோபத்தையும் அழகுற, ஆழமாக காட்சிப்படுத்தியவரின் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணை நாடும்போது அந்த மனைவி எவ்வளவு வருத்தமுறுகிறாள் என்பதை மிக நன்றாக ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து புரிந்து கொண்டு அதை மிகச்சரியாகவும் படம் பிடித்த ஒரு ஆண்மகன் தன் மனைவியை அதே போன்றதொரு சோகத்தில் ஆழ்த்துவது எப்படி சாத்தியம்? படைப்புகள் என்பவை ஒரு படைப்பாளனின் பிரதிபலிப்பு இல்லையா? உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று பாடிய பாரதியால் தன் மகளை வெறுக்க முடியுமா? அப்படி வெறுத்தால் அவனுடைய படைப்பு போலியானது இல்லையா? உண்மை மட்டுமே என்றும் நிலைக்கும். சதிலீலாவதியில் ஒரு காட்சியில் கமல் கதாநாயகனைப் பார்த்துச் சொல்வார் - கார் வாங்கி குடுத்தானாம், வீடு வாங்கி குடுத்தானாம், ஃப்ரிட்ஜ் வாங்கி குடுத்தானாம் (சின்ன வீட்டுக்கு). உன் மனைவி குடுத்ததுதானடா உங்கிட்ட இருக்குறது எல்லாம். என்னவொரு அருமையான வசனம். இதை எழுதியவரே இதை உணராமல் போவது எவ்வளவு பெரிய சோகம்.

பாலுமகேந்திராவின் மனைவியைப் பற்றி அவருடைய சிஷ்யர்கள் தங்கள் நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கின்றனர். பாலா ஆனந்தவிகடனில் எழுதிய தொடரில் கூட பாலுமகேந்திராவின் மனைவியின் மென்மையான சுபாவத்தைப் பற்றி கூறியிருப்பார். அத்தகைய மனத்தை மவுனிகா என்னும் வலிய ஆயுதம் கொண்டு தாக்குவது எவ்விதத்திலும் சரியில்லை.

அதே போல் எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பல நாவல்களில் பெண்ணியம் பேசுவார். அவருடைய பயணிகள் கவனிக்கவும் என்ற நாவலில், கதாநாயகனது infatuation பற்றியும், பின்னொரு நாளில் அவன் உண்மையான காதலில் ஈடுபடுவதையும் அழகாகச் சுட்டுவார். காதலைப் பற்றி இவ்வளவு அழகாக எழுதுபவர், வாழ்க்கைத்துணையைப்பற்றி சிலாகித்துப் பேசுபவர் எப்படி இன்னொரு திருமணம் செய்தார்?? இதில் இரு மனைவியரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று பெருமை வேறு. படைப்புகள் படைப்பாளிகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அது நான் வடித்த ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் அப்படி நடந்து கொள்ளும். அதற்கு நான் என்ன செய்வது என்று ஒரு படைப்பாளன் சொல்லுவானேயானால் then he is a hypocrite. இந்த வசனத்தை ஒரு நடிகன் வேண்டுமானால் சொல்லலாம் (உதாரணம்: ரஜினி- குசேலன் படம்). ஏனெனில் நடிகன் ஒரு கருவி மட்டுமே. ஆனால் ஒரு இயக்குனர், ஒரு எழுத்தாளர் கர்த்தா. அவன் இப்படிச்சொல்லுவது பேடித்தனம்.

முடிவாக, தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. துரோகங்களுக்கு அல்ல.

Friday, September 16, 2011

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன் - பார்ட் II

வேளச்சேரியில் உள்ள உணவகங்களின் சுவை, சர்வீஸ் மற்றும் விலை பற்றிய தொடர் பதிவு இது. முதலில் 100 அடி ரோட்டில் உள்ள சங்கீதா வெஜ் ரெஸ்ட்டாரண்ட். பொதுவாக எங்கள் வீட்டில் யாரும் வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டை, ரெஸ்ட்டாரண்ட்டாகவே கருதுவதில்லை ;). இருப்பினும் அந்த ஏரியாவின் மற்ற நான்-வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போக அன்று மனதில் தெம்பு இல்லாததால் (ஹிஹிஹி) இங்கு சென்றோம். சும்மா சொல்லக்கூடாது - நல்ல ஆம்பியன்ஸ். சீட்டிங் அரேன்ஜ்மென்ட்டும் வசதியாக உள்ளது. ஒரே டேபிளில் இந்தப்பக்கம் ஒரு குடும்பத்தையும் அந்தப்பக்கம் மற்றொர் முன்பின் தெரியாத குடும்பத்தையும் அமர வைப்பதில்லை.


நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு பெரிய பவுல் நிறைய சின்ன அப்பளம், வடகம் கொண்டு வந்து வைக்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஜாலிதான். starter க்கு சில்லி பன்னீர் க்ரேவி, மஷ்ரும் 65 ஆர்டர் செய்து கொண்டோம். மிக சாஃப்ட்டான டேஸ்ட்டியான, மிதமான மசாலா கொண்ட பன்னீர் துண்டுகள். மஷ்ரூம் 65 ஒரு துளி எண்ணெயில்லை. மிக அருமை. இங்கு இட்லி, தோசை வகைகள் not up to the mark. இட்லி பிய்க்க 4 விரல்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சிறிது புளிப்பாகவும் இருக்கிறது. மற்றபடி சூப், fried rice ஆகியவை மிக அருமை.


KFC Restaurantன் ரிஸோ ரைஸ், பக்கெட் சிக்கன், பர்கர் அனைத்தும் நன்றாக உள்ளன. இவற்றை நம் இந்திய நாவிற்கு ஏற்ற முறையில் spicy யாகத் தருகிறார்கள். ஆனால் இங்கு உள்ளே நுழைந்தவுடன் குப்பென்று வீசும் துர்நாற்றம் நாம் இன்னொரு முறை அங்கே செல்ல வேண்டுமா என்று யோசிக்க வைக்கிறது. எவ்வளவோ அருமையான air freshenerகள் இருக்கின்ற நிலையில் ஏன் இப்படியொரு துர்நாற்றம்??? Im surprised. இந்தப்பிரச்சினையை இந்த ரெஸ்ட்டாரண்ட் காரர்கள் கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது நிறைய விளம்பரங்களுடன் துவங்கப்பட்ட திண்டுக்கல் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்ட். விளம்பரங்களால் எதிர்பார்ப்பும் மிக அதிகம். இவர்கள் ஹைலைட் செய்தது இவர்களின் பிரியாணி, மற்றும் கரண்டி முட்டை. அதையே ஆர்டர் செய்தோம். பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி, சீரக சம்பா அரிசியில் செய்கிறார்கள். அருமையான ருசி. மிதமான மசாலா, நன்கு வெந்த கறித்துண்டுகள். அந்த வகை அரிசியினாலே ஒரு தனி ருசி நிச்சயம் கிடைக்கிறது. மற்றவை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இங்கே இவர்களது சீட்டிங் arrangement very very uncomfortable. Ergonomyயைக் கன்ஸிடர் பண்ணவே இல்லை.


Flamingo வுக்கு ஒரு மதியம் 2.30 போல் சென்றோம். இவர்களது நேரம் காலை 11 முதல் இரவு 11 வரை என்று குறிப்பிட்டிருந்தாலும் நாங்கள் சென்ற நேரம் எதைக்கேட்டாலும் இல்லையென்றார்கள். எந்த starter ம் இல்லை. அது இல்லை, இது இல்லை - ஸ் அப்பா. சாம்பார் சாதமும் தயிர் சாதமும் மட்டும் இருக்கிறது என்றார்கள். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் (ரொம்பவே) காஸ்ட்லி. Hot Chips அவ்வளவு திருப்திகரமாக இல்லை.


மொத்தத்தில் இம்முறை முந்துவது சங்கீதா ரெஸ்ட்டாரண்ட்தான். நல்ல சர்வீஸ், வசதியான இருக்கைகள், சுவையான உணவு, மிதமான விலை. try பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Wednesday, September 14, 2011

விருதுநகர் புரோட்டா சால்னா

ஆரம்பிக்கும் முன் ஒரு சின்ன க்விஸ். கீழ்க்காணும் விருதுநகர் புரோட்டாவில் காணப்படும் பிழைகள் என்ன? விடைகள் கடைசியில்.விருதுநகர் காமராஜர் பிறந்த ஊர் என்பதற்கு அடுத்தபடியாக அதன் புரோட்டா சால்னாவிற்குத்தான் ஃபேமஸ். 60 வருடங்களுக்கு முன் தெப்பத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால், சுற்றியுள்ள புரோட்டா கடைகளில் ஊர் முதலாளிகள் (TKSP, VVR, MSP - ஊர் பெரிய மனிதர்களின் பெயர்ச்சுருக்கம்) அனைவரையும் பார்த்துவிடலாம் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள். ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் ஏகபோக உரிமையாக இருந்த புரோட்டா சால்னா இப்போது அனைவரும் புசிக்கக் கூடியதாக மாறிவிட்டது.


சாயங்காலம் 5 மணி முதல் எல்லா புரோட்டா கடைகளிலும், புரோட்டா கிடைக்கத் துவங்கும். முன்பெல்லாம் பெண்கள் கடைக்குச் சென்று சாப்பிடமாட்டார்கள். வீட்டு ஆண்கள் வாங்கி வருவதற்காகக் காத்திருக்க வேண்டும். எங்கள் மயில் அண்ணன் வயர்க்கூடை சகிதம் புரோட்டா வாங்கக் கிளம்பிய தினங்கள் இன்றும் பசுமையாய். இப்போ trend மாறி விட்டது. முக்கால்வாசி கடைகளில் family room வந்து விட்டது.இன்றும் என்று விடுமுறைக்கு ஊருக்குச் சென்றாலும் வாசு கட்டாயம் எங்களை கடைக்கு கூட்டிச் சென்று விடுவார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பர்மா கடை, கமாலியா, அசன் கடை, அல்லா பிச்சை கடை என்று எந்த கடைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். எல்லாக் கடையிலும் அதே சுவை கிடைக்கும்.மொறு மொறுவென்று புரோட்டா. அதற்கு தொட்டுக்கொள்ள சால்னா. சீக்கிரம் சென்றால் மட்டுமே கிடைக்கும் மட்டன் சுக்கா. இதைச்சாப்பிடுவதில் ஒரு டெக்னிக் இருக்கிறது. புரோட்டாவைச் சால்னா தொட்டு சாப்பிடக்கூடாது. சர்வரே பிய்த்துப்போட்டு மேலே சால்னா ஊத்தி எடுத்து வருவார். உங்கள் முகத்தைப் பார்த்தால் வெளியூர்க்காரர் என்று தெரிந்தால் பிய்த்துப்போடமாட்டார் - hygiene reasons க்காக நீங்கள் மறுக்கலாம். ஆனால் அவரே பிய்த்துப் போட்டு தருவதில்தான் டேஸ்ட் அடங்கியுள்ளது. அந்த மட்டன் சுக்கா - அடேங்கப்பா - டிவைன் என்பார்களே அந்த ரகம். சான்ஸே இல்லை. அண்ணாச்சீ அந்தக்கறிய எப்டிண்ணாச்சி வேக வக்கிறீங்க?? saute, marinate என்று என்னென்னவோ சொல்கிறார்களே - அனைவரும் பிச்சை வாங்க வேண்டும். அந்த மசாலா எதைக்கொண்டு தயாரிக்கிறார்கள் - அடேங்கப்பா. முட்டை வழியல் என்று ஒரு ஐட்டம். முட்டை ஆம்லேட் ஒரு பந்து மாதிரி இருக்கும். அதைப்பிய்த்தால் உள்ளே வெங்காயம், மிளகு எல்லாம் கலந்து அரைவேக்காடாக இருக்கும். என்ன ஒரு ருசி. அதை நினைத்துக்கொண்டு இங்கே நம்ம சென்னையில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி restaurantல் கரண்டி முட்டை ஆர்டர் செய்தோம். menu cardல் photo லாம் பயங்கர அழகா போட்டிருந்தாங்கன்னு நம்பி ஆர்டர் பண்ணிட்டோம் - அவ்வ்வ்வ்வ். அப்படியொரு roughஆ ரப்பர் மாதிரி இருந்துச்சு.track மாறிட்டேன் sorry.இன்னொரு விஷயம் அங்கே காணப்படும் கஸ்டமர் சர்வீஸ். அரைமணி நேரம் ஏன்னு கேக்க ஆளில்லாம திருதிருன்னு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க அவசியமில்லை. அதே போல் சும்மா சும்மா சால்னா கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம். நாம் சால்னா கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'தம்பி அக்காக்கு சால்னா ஊத்து' என்பார் அண்ணாச்சி. ஆனா என்ன ஒரு சின்ன விஷயம்னா அண்ணாச்சிக்கு 50, 60 வயசு இருக்கும். ஆனால் எல்லா வயதினரும் அக்கா, அண்ணாச்சி தான் அவருக்கு.

எங்கள் ஊர்ப்பக்கம் சென்றால் புரோட்டா கடைக்குப் போகாம வந்துராதீங்க. ஜென்மம் சாபல்யம் அடையாது ;)


புதிர் விடைகள்


1. புரோட்டாவின் சைஸ் - படத்தில் மிகப்பெரிதாக உள்ளது

2. சைட் டிஷ் - பட்டாணி, உருளக்கியங்கு குருமா தொட்டு சாப்பிடுறதுக்குப் பேசாம வீட்லயே பால் சோறு சாப்ட்டு படுத்துருலாம்ங்க.

Tuesday, September 13, 2011

குட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள்

பின் வருபவை 6 வயது அக்கா மற்றும் 4 வயது தம்பியின் பதில்கள், விளக்கங்கள் ;)  1. காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் கேள்விக்கணைகள் - மீன் பல் தேய்க்குமா?; ரைனோசரஸுக்கு வால் இருக்குமா? (அவன் கேட்டவுடன் எனக்கே சந்தேகம் வந்துவிடும்); மழை பெய்யும்போது வானத்தில் ஏரோப்பிளேன் நனையுமே! யார் குடை பிடிப்பா?; tenக்கு அப்புறம் tenone தானே, ஏன் elevenனு சொல்றீங்க(பிள்ளை கேட்பதும் correct தானங்க. twentyக்கப்புறம் twentyone தான?) - இப்படி இடைவிடாத கேள்விகளில் நாம் பொறுமையிழந்து தொண தொணன்னு கேள்வி கேக்காதடா என்று அலறும் போது அக்குழந்தை உண்மையிலேயே குழம்பி - நான் கேள்வி கேக்கல அம்மா. பதில் கேக்குறேன் - என்று சொல்லும் குழந்தைத்தனத்தில் இறைவனைக் காணலாம்.
  2. Chips packet ஐ தலைகீழாக கவிழ்த்து விளையாடும் பிள்ளையிடம், ஏய் என்ன பண்ணிக்கிட்டிருக்க? அறிவு கெட்டது - என்று சொன்னவுடன் - நான் அறிவு கெட்டது இல்லம்மா - அறிவு நல்லது என்று ரெஸ்பான்ஸ் (ரொம்ப நல்லவன்டா நீ அவ்வவ்வவ்வவ்வ்)
  3. Chota Bheem POGO வில் இப்போது தமிழில் வருவதைப்பற்றி அக்காவும் தம்பியும் டிஸ்கஷன் - என்ன பப்பு பீமும் காலியாவும் தமிழ்ல பேசுறாங்க? ஆமா தம்பு, அவுங்க தமிழ் டியூஷன் போயிருப்பாங்கன்னு நெனக்கிறேன். (அடுத்து அனேகமாக Mr.Beanம் தமிழ் டியூஷன் போயிருவாருன்னு நெனக்கிறேன் ;) )
  4. Real Juice 1 ltr carton ஐத் தலைகீழாக கவிழ்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையிடம் - எதுக்கு இப்படி கவுத்துற?. பிள்ளையின் பதில் - juice இருக்கா தீந்து போயிருச்சான்னு பாக்குறேன். (அவரு பாத்து முடிக்கிறதுக்குள்ள juice நெஜமாவே தீந்திருக்கும் :) )


  5. அக்காவிடம் தம்பி - missக்கு A B C தவிர வேற ஒண்ணுமே தெரியல பப்பு. daily அதே தான் சொல்லிக்கொடுக்குறாங்க.

Saturday, September 3, 2011

சூப்பர் சீன்ஸ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் இடம்பெறுபவை காதல் காட்சிகள். இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை, எப்போது நினைத்து பார்த்தாலும் மனதில் இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும் காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்


நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்


திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்


சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்


என்று காணுமிடமெல்லாம் தன் காதல்துணையையே காணும் இனிமையன்றோ காதல். கமலஹாசனைக் காதல்மன்னன் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே எனக்குப்புரியவில்லை. கமல் தன்னுடைய முக்கால்வாசி படங்களில் தன் மேல் காதல் வெறி கொண்ட கதாநாயகிகளுக்கு தமிழ் பண்பாட்டைக் கற்றுத்தருகிறார் அல்லது தன் வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கு காதலிக்கு தன் ட்ரேட்மார்க் முறையில் சொல்லிக்கொடுக்கிறார் - சகலகலாவல்லவன், காக்கிச்சட்டை, சிங்காரவேலன், குருதிப்புனல், தேவர்மகன், மகாநதி என்று என் நினைவில் தோன்றும் கமலின் அனைத்துப்படங்களிலுமே இதே நிலைதான். விஜயகாந்த், சத்யராஜ் என்று அந்த பீரியட் நடிகர்களின் அனைத்துப்படங்களுக்கும் இது தான் நிலை. கார்த்திக் துறுதுறு காதலனாகத் தோன்றி இளம் மனங்களைக் கொள்ளை அடித்தார்.


விஜய் காதல் காட்சிகளைப் பற்றி பேச ஒன்றுமேயில்லை. பத்தாம்பசலித்தனமான வசனங்களும் காட்சிகளுமே காதல் என்ற பெயரில் இடம் பெறுகின்றன. விஷால், சிம்பு, தனுஷ் முதலிய இன்றைய கதாநாயகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் - நண்பர்களிடம் சவால்விட்டு பெண்களை மடக்குவது போன்ற காட்சிகளைப் பெண்கள் நிச்சயம் ரசிப்பதில்லை.


கம்மிங் டு த பாய்ண்ட் - எனக்குப் பிடித்த காதல் காட்சி - ஜானி திரைப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி இடையேயான காட்சி - ரஜினி முதலில் கரும்பு ஜூஸ் 2 டம்ளர் வாங்கி வருவார். ஒரு டம்ளரில் இருப்பது சிந்திவிடும். நிறைய இருக்கும் டம்ளரை ஸ்ரீதேவியிடம் கொடுப்பார். ஸ்ரீதேவி அதை வாங்க மறுத்து குறைவாக இருக்கும் டம்ளரையே தனக்கும் கேட்பார். என்ன ஒரு அருமையான ரொமான்ஸ்.


ஒரு நல்ல, இனிமையான உணவை ரசித்து உண்ணும் போதும், அருமையான புத்தகத்தைப் படித்துக் கரையும்போதும் இதை ரசிக்க நம்மோடு அவன்/ள் வேண்டுமே, இந்த அருமையான உணவின் சுவையை அவனும்/அவளும் சுகிக்க வேண்டுமே என்ற நினைவுதானே, கரிசனம் தானே காதல். தனக்கு குறைவானதை எடுத்துக்கொண்டு நிறைவானதைத் தன் துணைக்குத் தருவது தானே காதல். அதே திரைப்படத்தில் இன்னொரு காட்சி. ஸ்ரீதேவி எதற்கோ அழுவார். அதை ரஜினியால் துளியும் சகித்துக்கொள்ள முடியாது. 'ஏன் ஏன் அழுறீங்க கண்ண தொடச்சிக்கோங்க" - தன் மனதிற்கினியவள் துயருறும் போது அதைக் காணவும் சகியாத மனம் தானே காதல் நிறைந்தது. அந்தக்காட்சியில் நீங்க அழுதா என்னால தாங்க முடியாது என்று வசனம் பேசியிருந்தால் that scene would have fell flat. எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா? பேசாத வெற்றிடத்தையும் நிரப்புவது தானே காதல். இதற்கு இணையான ஒரு காதல் காட்சியை இன்று வரை நான் காணவில்லை. அதே படத்தின் சென்யோரிட்டா பாடலில் கற்பனை காகம் கதாநாயகியின் மேல் அசிங்கம் செய்துவிடும். ரஜினி அதை துரத்துவார். அதில் தெரியும் அக்கறை - சான்ஸே இல்லை. இன்னொன்றையும் இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ரஜினி போல் பவர்ஃபுல் ஸ்கிரீன் பிரஸன்ஸ் கொண்ட நடிகர் இன்று வரை யாரும் இல்லை. power packed performance என்பார்களே அது - மற்றும் அந்த manliness. அதனால் தான் அவர் அன்றும் இன்றும் என்றும் SuperStar.


முன்னால் கண்ணாடிக்கதவைத்திறந்து கொண்டு கணவன் கடைக்குள் நுழைய பின்னால் குழந்தையுடன் வரும் மனைவி கதவைப்பிடிக்கத் தடுமாறுவதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். அக்கறைதான் காதல், பகிர்தல் தான் காதல். இதை அருமையாக சித்தரித்த ஜானிக்கே என் ஓட்டு.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes