Thursday, April 19, 2012

இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு கொள்வீர்களா - என்ன சொல்கிறார்கள் வெளிநாட்டவர்கள்

உலகப்பொருளாதாரம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியப்பொருளாதாரம் நிலையாகவே இருந்தது. உலகில் பல்வேறு வங்கிகள் மூடப்பட்ட போது எஸ்.பி.ஐ யின் லாபம் உச்சத்திலிருந்தது. இந்த அடிப்படை பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பயன்படுத்தி அன்னிய முதலீட்டாளர்களை நம் பக்கம் ஈர்க்க நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் - காமன் வெல்த் கேம்ஸ். அது முடிந்து நாம் பட்ட கேவலம் - சந்தி சிரித்தது எல்லாம் பழைய கதை. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதன் அவசியம் என்ன? காரணம் ரிக் பிர்ச்.

காமன் வெல்த்தின் ஓப்பனிங் செரிமனி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.(www.youtube.com/watch?v=jZOhfEJc2e8 )மிக அருமையான லேசர் ஷோ, வாண வேடிக்கைகள். இதனை வடிவமைத்து செயல்படுத்தியவர்தான் ரிக் பிர்ச். இவர் 6 ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் செய்தவர். இவ்வளவு அனுபவம் வாய்ந்த இவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிபிசி ரேடியோ சமீபத்தில் ஒரு கேள்வியை எழுப்பியது - பிஸினஸ் செய்வதற்கு இந்தியா ஒரு மோசமான நாடா? இந்தக்கேள்வி எழும்பும் படியாக ரிக் பிர்ச் சொன்னது - கரஸ்பான்டென்ஸுகளுக்கு முறையான பதில் அளிப்பதில்லை. எனக்கு பாக்கி $ 3,50,000. இது போல் வெளிநாட்டைச் சேர்ந்த 30 கான்டிராக்டர்களுக்கு மொத்த பாக்கி - $ 80 மில்லியன். 2 கான்டிராக்டர்களுக்கு மட்டுமே முழுத்தொகையும் செட்டில் செய்யப்பட்டுள்ளது. INDIA - I'll Never Do it Again இப்படி கூறி முடிக்கிறார் ரிக் பிர்ச். அவமானம்.

பொதுவாக நம் மனப்பான்மை இத்தன்மையாதகவே இருக்கிறது. ஒரு வேலையை முடிப்பதாக நாம் ஒப்புக்கொண்டோமேயானால் அதை தலை போனாலும் செய்து முடிக்கவேண்டும் என்ற சின்சியாரிட்டி எல்லாம் இன்று காணக்கிடைக்காதவை. எங்கள் டீமுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. இதை 10 நாட்களில் முடித்துவிடுவீர்களா என்று கேட்டார் தலைவர். கட்டாயம் முடிப்போம் என்றார் எங்கள் டீம் லீடர். தலைவர் சென்ற பிறகு எப்டிங்க இத 10 நாள்ல முடிக்க முடியும். நீங்க பாட்டுக்கு சொல்லீட்டீங்க என்று என் டீம் லீடரைக் கேட்டேன். சும்மா சொல்ல வேண்டியது தான். 10 நாளுக்கப்புறம் பாத்துக்கலாம் என்றார். ஷாக். இட்ஸ் சீப். இதைத்தான் செய்யமுடியும். இதை செய்யமுடியாது என்று நேரடியாகச் சொல்லக்கூடிய தைரியமும், அடிப்படை நேர்மையும் ஏன் இல்லை? ஒரு பிரச்சினையை அந்த நேரம் தள்ளி வைத்தால் போதுமா? இப்படிப்பட்ட மனப்பான்மை நம் மீதான அடிப்படை நம்பகத்தன்மையைப் பாதிக்கிறதே.

ஒரு ஒப்பந்தந்திற்குள் செல்லும்முன் அதன் எல்லா கூறுகளையும் ஆராய்ந்து பின்னர் ஒப்புக்கொள்வோம். அப்படி ஒப்புக்கொண்டதை எப்பாடுபட்டேனும் செய்து முடிப்போம்.

எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

Thursday, April 12, 2012

கணவரோடு ஆன்சைட் போகிறீர்களா? - What to expect and what not

நடுத்தர குடும்பத்தில் பிறந்து, ஒரு சிறிய டவுனில் படித்து, ப்ரொபஷனல் டிகிரி வாங்கிய ஒரு பெண், ஐடி-யில் வேலை பார்க்கும் ஒருவரை மணம் முடித்து, டிப்பெண்டன்ட் விசாவில் வெளிநாட்டுக்குக் கிளம்பும்போது, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அதே அளவு வெளிநாட்டு வாழ்க்கை குறித்த குழப்பங்களும், சர்வைவல் சந்தேகங்களும் கொண்டவராகவே இருக்கிறார். ஒரு வேளை நீங்கள் முதன்முறை இவ்வாறு ஆன்சைட் செல்பவராக இருப்பின், உங்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

  • பாஸ்போர்ட், விசா, டிக்கெட் என்று எல்லாவற்றையும் முடித்து ப்ளைட்டில் ஏறி அமர்ந்தபின், விஸ்கி, பீர், பிராந்தி, ஜூஸ் ஆகியவற்றைக் கொண்டு வருகின்றனர் ஹோஸ்டஸ்கள். பக்கத்தில் சமர்த்தாக உட்கார்ந்து ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் கணவர், தனியாக வரும்போது என்ன குடித்திருப்பார்??? - ;)இங்கேயே ஆரம்பித்துவிடும்.
  • கணவரின் புகைப்படங்களில் அல்ட்ரா மாடர்னாகத் தோன்றும் இளைஞர்களும், இளைநிகளும் முக்கால்வாசி மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை என்று நம் போலவே நடுத்தரக்குடும்பத்திலிருந்து படித்து முன்னேறி வந்தவர்களே. அவர்களது பெற்றோரும் நம் பெற்றோர் போலவே - கல்யாணத்துக்கு தான்மா பாத்துக்கிட்டிருக்கோம். இன்னும் ஒண்ணும் அமையல. உனக்குத் தெரிஞ்ச பையன் இருந்தா சொல்லுமா - என்று சொல்பவர்களாகவே இருக்கின்றனர்.


  • இந்த மாடர்ன் இளைஞர்கள் பர்கர், பிட்சாவைத் தினசரி சாப்பிட அலறுகிறார்கள். நம் வீட்டு சகோதரர்கள் போலவே நம் சமையலைச் சாப்பிட்டுவிட்டு - நல்லா இருக்குங்க. பிரட்ட சாப்பிட்டு சாப்பிட்டு நொந்துட்டேன் - என்கிறார்கள். மொத்தத்தில் மிக ப்ரண்ட்லி. நம்மால் மிகவிரைவில் எளிதாக அவர்களோடு ஐக்கியமாகிவிட முடியும். (விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. சிலரோடு நம்மால் பழகவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் எல்லா இடத்திலும் உண்டு. எனவே இவர்களை - ஐ.டி. இளைஞர்கள் என்ற காரணத்தால் பழக முடியாது- என்று வகைப்படுத்த முடியாது.)


  • எல்லா பொருட்களும் - பார்லே-ஜி பிஸ்கட், கடலைமிட்டாய் முதற்கொண்டு தொக்கு வரை அனைத்தும் கிடைக்கும். எனவே கண்டதையும் தூக்கிக் கொண்டு அலையாதீர்கள். அரிசி மட்டும் சகலத்துக்கும் பாஸ்மதிதான். பொன்னி, பச்சரிசி எல்லாம் கிடைக்காது.


  • இந்திய ரெஸ்டாரண்ட்டுகள் தெருவுக்குத் தெரு இருக்கும். Manchesterல் Curry Mile என்றே ஒரு நீநீநீநீளமான தெரு இருக்கிறது. முழுவதும் இந்திய உணவகங்கள், துணி, நகைக்கடைகள். Meal for two என்று 30 பவுண்ட் வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் சகிக்க முடியாத சுவை. Really pathetic taste. இந்த பணத்துக்கு நாம் இங்கே Fortuneலேயே அருமையாகச் சாப்பிட்டுவிடலாம். ஆனால் சரவணபவன் அங்கும் நன்றாகத்தான் இருக்கிறது.


  • மிகவும் போர் அடிக்கும். மேலும் இங்கே பாத்திரம் கழுவ, வீடு துடைக்க, டாய்லெட் கழுவ என்று எல்லா வேலைக்கும் ஆள் வைத்துக்கொள்வோம். அங்கே அதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. போர் அடித்தால் பாத்திரம் கழுவ வேண்டியதுதான் ;)


  • பிள்ளைகளின் ஸ்கூல், அந்த கலாச்சாரம் - இவை பற்றி பின்னொரு சமயம் தனி பதிவாக எழுதுகிறேன். Bon Voyage Dear Girls

Tuesday, April 3, 2012

பிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்

இன்றைய செய்திகளில் ஒன்று இது - ஹங்கேரிய பிரதமர் பால் ஸ்மித் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். காரணம் இவர் தனது பிஹெச்டி தீஸிஸைக் காப்பியடித்து எழுதி சப்மிட் செய்துள்ளார். இதனால் இவரது டாக்டர் பட்டத்தையும் பல்கலைக்கழகம் பறித்துக்கொண்டது. இதை கேள்விப்படும்போது நம் நாட்டு பிஹெச்டியின் தரத்தைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

பிஹெச்டி செய்வதற்கு PG டிகிரி முடித்திருக்கவேண்டும். M.Phil முடித்திருந்தால் பிஹெச்டி 2 வருடத்தில் முடித்துவிடலாம். இல்லாவிட்டால் 3 வருடம். நம் ஆராய்ச்சி மாணவர்களின் தரம் எந்த அளவில் இருக்கிறது? ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்வேறு ஸ்காலர்ஷிப்புகள் availableஆக இருக்கின்றன. JRF க்ளியர் செய்பவர்களுக்கு மாதம் ரூ.14000 scholarship. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.14000 ராஜீவ்காந்தி fellowship, இவை தவிர தனிப்பட்ட மனிதர்கள் வழங்கும் endowment scholarship அனைத்தும் கிடைக்கிறது. லேப் வசதிகள், லைப்ரரி வசதிகள், போக்குவரத்தில் சலுகைகள் இவ்வளவும் கிடைக்கப்பெறுகிறார்கள்.

அனைத்தும் இருந்தும் ஒரு path breaking, innovative invention என்பது ஏன் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது? முக்கிய காரணம் - மாணவர்களின் சோம்பேறித்தனம், பொறுப்பெடுத்துக் கொள்வதில் காட்டும் சுணக்கம். அனைத்து வசதிகளையும் அரசிடம் இருந்து பெறும் ஆராய்ச்சி மாணவர்கள் உழைக்கப் பயப்படுகின்றனர். இவர்கள் படிக்கவோ, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளவோ ஆர்வம் காட்டுவதில்லை என்பது கசப்பான உண்மை. Exceptions - விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கிறார்கள். ஆனால் மிகக் கம்மியான சதவீதத்தில்.

2 வருடம் சும்மா பொழுதைப் போக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், 3வது வருடத்தில் தீஸிஸ் என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொடுத்து கடனைக் கழிக்கிறார்கள். இதை எழுதிக்கொடுக்கவென்று சென்னையில் மூலைக்கு மூலை நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் செய்வது cut and paste வேலைதான். பிற ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து அப்படியே சுட்டு அதை ஒரு அவியலாக்கி ஒரு ஆராய்ச்சி முடிவாகக் கொடுக்கிறார்கள்.

இந்த தீஸிஸ், வெளிநாட்டுப் பேராசிரியர்களின் ரெவ்யுவுக்காக வெளிநாடு செல்லும். ஒரு முறை இப்படி அனுப்பப்பட்ட ஒரு தீஸிஸ், அந்த ஆராய்ச்சி மாணவர் எந்தப் பேராசிரியரின் புத்தகங்களிலிருந்து காப்பியடித்தாரோ அவர் கைக்கே ரெவ்யுவுக்குப் போய்விட்டது. பலர் இதே வேலையைச் செய்தாலும் அம்மாணவரின் கெட்ட நேரம் - அவர் மாட்டிக்கொண்டார். மாட்டாத ஆயிரக்கணக்கானோர் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். பின்னர் அம்மாணவர் தண்டிக்கப்பட்டார்.

Plagiarism என்பது மிகப் பரவலாக ஆராய்ச்சி மாணவர்களிடையே உள்ளது. இதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் போதுதான் நம் நாட்டில் ஆராய்ச்சியின் தரம் உயரும்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes