Wednesday, October 6, 2010

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்வேளச்சேரியில் உள்ள உணவகங்களில் உங்கள் வீக் எண்டைச் சுவையான உணவோடு கழிக்க எந்த உணவகம் ஏற்றது என்பதற்கு ஒரு கைட்லைன் கொடுக்க விருப்பம். இங்கு சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட் துவங்கி (Noodle house), Parfait 3 Bistro, Pizzaurant, Dominoes, McDonald என உலகை ஒரு வலம் வந்து, Kumarakom (Kerala Speciality), Kalinga Court (Andhra), The Dhaba (Punjabi) என்று இந்திய மாநிலங்களில் புகுந்து புறப்பட்டு, Nalas, அஞ்சப்பர், காரைக்குடி, ரத்னா கபே என்று கடைசியாக ஆனந்த பவன் என்று நம் அடையாறில் வந்து முடிகிறது (அதாங்க நம்ம அடையார் ஆனந்தபவன் :) ) இவைகளில் கிடைக்கும் உணவு வகைகள், அவற்றின் சுவை மற்றும் Hospitality ஐப் பற்றி ஒரு report இதோ :


முதலில் The Dhaba: இங்கு சென்றவுடன் முதலில் ஒரு மண் குடுவையில் ஏதோ ஒரு பானம் தருகிறார்கள். கிட்டத்தட்ட புளித்தண்ணி மாதிரி. கடைசி வரை புளியைத் தவிர அதில் வேறென்ன போட்டிருக்கிறாருகள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ரசத்தைக் கொதிக்க வைக்காமல் பச்சையாக குடித்தது போல் ஒரு feel. இதோடு ஒரு சுட்ட அப்பளமும் ஒரு சட்னியும் வேக்கிறார்கள். அந்தச் சட்னி சும்மா சொல்லக்கூடாதுங்க, செம டேஸ்ட். ஸ்டாட்டருக்கு சிக்கன் கபாப் ஆர்டர் செய்தோம். Melts in your mouth என்று சொல்வார்களே அதைப் போல் வாயில் போட்டவிடன் கரைகிறது. நன்றாக வெந்து, மசாலா சரியாக எல்லா பாகத்திலும் பரவி, ஓரத்தில் மெலிதாக கருகி, வெங்காயம், முட்டைக்கோஸ் துருவல்களுடன், அந்த சட்னியும் சேர்த்து - அடாடா கபாப் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். main courseக்கு கார்லிக் நான், பட்டர் சிக்கன் - நான் நன்றாக இருந்த்து. பட்டர் சிக்கனும் பெயருக்கேற்றார் போல் வெண்ணையாக இருந்த்து. சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்திருந்தோம் (இனிமேல் செய்ய மாட்டோம் ;) ). வெயிட்டர்கள் நன்றாக கவனிக்கிறார்கள் - நம் அருகே நின்று plateஐயே முறைத்துக்கொண்டிருப்பது இல்லை. அதே நேரம் நமக்குத் தேவையான சமயம் கரெக்டாக அங்கேயிருக்கிறார்கள். என்ன ஒரேயொரு பிரச்சனை - தயாரித்து, பரிமாற இவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம். ஆர்டர் கொடுத்து மிக மிக நேரம் கழித்தும் யாரும் பரிமாற வரவில்லை. பிறகு அந்தப்பக்கம் போய்க்கொண்டிருந்த வெயிட்டரைக் கூப்பிட்டு - பாஸ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆர்டர் கொடுத்தோமே, அத ஆர்டரா எடுத்துக்காமா requestஆ எடுத்துக்கிட்டு தயவு செஞ்சு சாப்பாட்ட கொண்டு வாங்க என்று கெஞ்சிவிட்டோம் கெஞ்சி.நம்ம நளாஸ் ஆப்பக்கடை - இங்க ஆப்பம் ரொம்ப famous என்றார்கள். சீஸ் ஆப்பம், சில்ட்ரன் ஸபெஷல் ஆப்பம், முட்டை ஆப்பம் இப்படி பல. எனக்கென்னவோ இங்கு ஆப்பம் authentic ஆப்பம் போலில்லை என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட தோசைக்கும் ரியல் ஆப்பத்துக்கும் நடுவே இருக்கிறது இங்கு தரப்படும் ஆப்பம். ஆனால் சிலோன் சிக்கன் பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை நன்றாக இருக்கின்றன. பிரியாணி not upto the mark. ரேட் ரொம்பவே நாமினல் என்பதால் சரியான கூட்டம். once in a while போகலாம்.வேளச்சேரி அஞ்சப்பருக்கு, பெசன்ட் நகர் அஞ்சப்பரை நினைத்துக் கொண்டு சென்றால் - மன்னிக்கவும் நீங்கள் நிச்சயம் ஏமாறுவீர்கள். பெசன்ட் நகரில் சாப்பிட்ட மென்மையான வெங்காய ஊத்தப்பம், சிக்கன் குழம்பு, மீன் தந்தூரி இவற்றை நினைத்து சப்புக்கொட்டிக்கொண்டு வேளச்சேரி அஞ்சப்பருக்கு சென்றோம். கடவுளே - தந்தூரி சிக்கன் வேகவில்லை. மசாலா அப்படியே இருந்த்து வேகவேயில்லை. பிரியாணி மிகச் சாதாரணம். யார்மேலயாவது நமக்கு கோவம்னா இங்க கூட்டிட்டு வந்து treat கொடுத்துவிடுவோம் என்றார் வாசு. நிச்சயம் நல்ல யோசனை. இந்த comment காரைக்குடி ரெஸ்டாரன்ட்டுக்கும் பொருந்தும்.

பிரியாணி என்றால் நேரே கலிங்கா கோர்ட்டுக்குச் சென்று விடுங்கள். மசாலா நெடி இல்லாமல் அதே நேரம் நல்ல மணத்துடன், மிக நீண்ட பாசுமதி அரிசியில் தயாரான, கறி நன்கு வெந்து, மிதமான மசாலா சுவையுடன் கூடிய அருமையான ஆந்திர பிரியாணி. ஆனால் நான்வெஜ் மீல்ஸ் ஆர்டர் செய்ய வேண்டாம் - மிகவும் காஸட்லி. கொடுக்கும் காசுக்கு மதிப்பு கம்மி. இங்கு ஒரேயொரு பிரச்சனை - தெலுங்கு பாட்டை ஒலிக்க விடுகிறார்கள். ஆனால் அந்த பிரியாணியின் சுவைக்கு பாட்டுக்கொடுமையைச் சகித்துக்கொள்ளலாம்.
Noodle House - இங்கு ஸ்டார்ட்டருக்கு ஃபிஷ் ஃபிங்கர், சீ ஃபுட் ப்ளாட்டர் ஆர்டர் செய்தோம். ஃபிஷ் ஃபிங்கர் உண்மையில் ரொம்ப டேஸ்ட்டி - வெளியே க்ரிஸ்ப்பியாகவும், உள்ளே ஜூஸியாகவும். சீ ஃபுட்டை ரொம்ப deep fry செய்து விடுகிறார்கள். ருசியே தெரியவில்லை. இங்கே soup மிகவும் நன்றாக இருக்கிறது. நூடுல்ஸில் fried noodles, Mee Goreng இவை நன்றாக இருக்கின்றன. ஆனால் இவர்களிடம் consistency இல்லை. ஒரு முறை ஒரு ஐட்டம் நன்றாக இருக்கிறது என்று அடுத்த முறை ஆர்டர் செய்தால் - Disastrous. யோசித்துச் செல்லுங்கள்.குழந்தைகளுக்கு இருக்கவே இருக்கிறது McDonalds. Nuggets, fries, cola, burger என்று எதை வாங்கிக்கொடுத்தாலும் கம்மென்று சாப்பிட்டுவிடுகிறார்கள்.(ஆனால் வீட்டில் என் அம்மா செம திட்டு - கண்டதையும் வாங்கிக்கொடுக்கிறோம் என்று). Dominos Pizzaவும் நல்லா இருக்கும். ஆனால் வாசு சீஸ் டூத் பேஸ்ட் போலிருக்கிறது என்பார். Parfait 3 Bistro வில் ambience ரொம்ப நன்றாக இருக்கும். Chicken Alfredo - இது ஒரு Pasta வகை அருமை. chicken and caesar என்று சாலட் பெயரைப் பார்த்து ஆர்டர் செய்தேன் (Caesar dressing என்னுடைய favourite). ஆனால் இது வேறேதோ சீசர் போலும். சகிக்க முடியவில்லை. எங்க வீட்டு சீசர் கூட சாப்பிட முடியாது.

ரத்னா கபேயின் கொடுமை தாங்கவில்லை. மஷ்ரும் 65 ஆர்டர் செய்தோம். மஞ்சூரியன் செய்ய தயாரித்திருந்த காளானை வைத்து 65ஐத் தயாரித்துவிட்டனர். மேலும் இரவு 9 மணிக்கு மேல் இங்கு சென்றால் நம்மை வெளியே துரத்துவதில் குறியாய் இருக்கின்றனர். ஸ்டார்ட்டருக்கு முன் காபி வந்துவிடும். சுகாதாரம் கிடையாது. Ambience பற்றி பேசவே கூடாது. Name Boardல் since 1948 என்று எழுதியிருக்கிறார்கள். 48லிருந்தே இவனுங்க torture ஆரம்பிச்சிருச்சு போல.


இருக்கிறதுலேயே பெஸ்ட் அடையார் ஆனந்தபவன்தான். எதை வேண்டுமானாலும் தைரியமாக ஆர்டர் பண்ணலாம். நிச்சயம் ருசியாக இருக்கும். self service தான் இங்கே ஒரே பிரச்சனை. சரியான கூட்டம். இப்போது expand பண்ணி கட்டியும் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. ஆனால் பொறுமையாக queueவில் நினைறால் நல்ல சாப்பாடு சாப்பிடுவது நிச்சயம்.

17 comments:

jothi said...

வேளச்சேரியில் எல்லா கடைகளையும் சுவைத்தாச்சு,.. காரைக்குடி முதல் 100ft roadல் இருக்கும் மிர்ச்சி வரை,... எல்லாம் சுமார்தான்,.. நீங்கள் சொன்ன மாதிரி ஆனந்தபவனை தவிர எதையும் நம்பி சாப்பிட முடியாது,.

இதற்கு வேளச்சேரி பஸ் ஸ்டாப்பில் தண்டிஸ்வரன் மெயின் ரோட்டில் உள்ள ஒரு சாதாரண கடையில் காலை, மாலை உளுந்த வடை கிடைக்கும்,... ம்ம்ம்ம் ருசின்னா அது ருசி,.

தகவல்களுக்கு மிக்க நன்றி, வேளச்சேரி தரமணி ரோட்டில் உள்ள காரைக்குடி செட்டினாடு போய் காசு அழுத கதை ஏதும் கிடையாதா???,..

மாலா வாசுதேவன் said...

ஆமாங்க ஜோதி காரைக்குடிலயும் காசு அழுதிருக்கோம். அதனாலதான் எங்க enemies யாருக்காவது treat குடுக்க அந்த ஹோட்டல ரிசர்வ்ல வச்சிருக்கோம். உங்க commentக்கு மிக்க நன்றி

லெமூரியன்... said...

HELLO.........இப்படி சொல்லாம கொள்ளாம சடார்னு வலைப்பூ முகவரி மாத்துனா எப்படி????

நானும் 2 நாளா ஆளையே காங்கலையே? அப்டீன்னு தீவிரமா வலைல வலை விரிச்சு வெச்சி காத்திருந்தேன்.......! :(
இப்போதான் மறுபடியும் கண்டுபிடிச்சேன்.
அடுத்த தடவை எதாவது அதிரடி பண்ணனும்னா முன்னமே ஒரு மின்னஞ்சல் செஞ்சிட்டு ஆரம்பிங்க..! :)
சரியா?? :) :) :)

twinkle said...

Veetla samaikarathey kedaiyathanga! Vasu is very Lucky i guess!!!!. I miss you in Bangaluru. Very nice descriptions with Colorful pictures.

மாலா வாசுதேவன் said...

ஆமாங்க ட்விங்கிள். சனி ஞாயிறுன்னா வாசு ரொம்பத்தான் சந்தோசமா ஆயிடுறார் ;)

vidya said...

hi mala,
very interesting info.Very useful tips and it would really help me to find better restaurants based on ur opinion in velacherry. We r planning to visit india /chennai(velacherry) this month end and would really lookin fwd to try mouth-watering stuffs.oru kai parkaporen:)
take care
vidya.

S.V.SAIBABA said...

வேளச்சேரியில் இவ்வளவு உணவகங்கள?
அம்பத்தூரில் இருந்து பெருமூச்சுடன்
சாயிபாபா

Anonymous said...

Hi... indeed its all yummy..
u forgt to mention abot "UGADHI" an Adhnra Restaurant (above Adyar Bakery)

Its one our favr andra kitchn in town..do give a try if you havent


Regards,
J
http://mycreationz.wordpress.com

மாலா வாசுதேவன் said...

வணக்கம் சாய்பாபா. வேளச்சேரி பக்கம் வந்தால் இவற்றை விசிட் செய்து பாருங்கள். கமெண்ட்டிற்கு நன்றி :)

மாலா வாசுதேவன் said...

hello j, havent tried ugadhi till date. vl try it out. thank u fr reading n commenting

ந.தெய்வ சுந்தரம் said...

தங்களுக்கு எழுத்து மிக நன்றாக வருகிறது. ரசித்தேன். விரைவில் புத்தகங்களாக வெளியிடவும். வாழ்த்துகள். தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்பு எந்த நிலையில் உள்ளது? தலைப்பு - வேளச்சேரியின் உணவகங்கள். சரிதானே.

ந. தெய்வ சுந்தரம்

தருமி said...

நன்ற் .. கிடைத்த தகவல்களை மகளுக்கு அனுப்பணும்.

கல்லூரிப் பதிவிலிருந்து வந்தால் இங்கே 'லெமூரியன்' இருக்கிறார். என் பதிவில் பார்த்தவராச்சே!

மாலா வாசுதேவன் said...

lemurian nam kalluri maanavara dharumi?

பிரேமா said...

மாலா உங்க எல்லா பதிவுகளிலும் நான் ரொம்ப ரசித்தது இந்த பதிவு தான்......உங்க வலையை திறக்கும் போதெல்லாம் இதை நான் படிக்க தவறுவதில்லை....
அன்பு தோழி பிரேமா...

தருமி said...

lemurian nam kalluri maanavara dharumi?//

தெரியாதே.

தருமி said...

வேளச்சேரி பஸ் ஸ்டாப்பில் தண்டிஸ்வரன் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பிரியாணி வெய்ட் போட்டு தருவார்களே.. நல்ல கூட்டமா இருக்குமே?

மாலா வாசுதேவன் said...

Dharumi i thought you are from Madurai - aren't you? then how come u know in and out of velachery??? Dharuminu paer vachalae kalakkiruvangalo???? :)

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes