கோடக் நிறுவனம் ஜார்ஜ் ஈஸ்ட்மேனால் 1880ம் வருடம் நிறுவப்பட்டது. கைக்கேமரா, புகைப்பட நெகட்டிவ், தற்சமயம் முழுக்க முழுக்கப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் காமெரா அனைத்தும் இவர்களின் கண்டுபிடிப்பே. 1100க்கும் அதிகமான பேடன்ட்டுகளையும் இவர்கள் வைத்துள்ளனர்.
புகைப்படத்துறையிலும், திரைப்படத்துறையிலும் கோலோச்சியவர்கள் இவர்கள். எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களை ஈஸ்ட்மேன் கலரில் என்று விளம்பரம் செய்த காலம் ஒன்றுண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்தபோது தன்னுடன் ஒரு கோடக் காமெராவைத்தான் எடுத்துச்சென்றார். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 64000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்த நிறுவனம் இன்று 17000 தொழிலாளர்களுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதன் சந்தை மதிப்பும் சரிந்துவிட்டது.
இதன் வீழ்ச்சிக்குக் காரணமாக சொல்லப்படுவது, லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு விரைவாக அடாப்ட் ஆகாததேயாகும். உதாரணமாக இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட டிஜிட்டல் காமெரா தயாரிப்பில் இவர்களே முழுமூச்சாக ஈடுபடவில்லை. தற்சமயம் தங்கள்வசமிருக்கும் 1100 பேடண்ட்டுகளை விற்று நிலைமையைச் சமாளிக்க முயன்றுகொண்டிருக்கிறது இந்நிறுவனம்.
மாற்றம் ஒன்றே மாறாதது. இதை உணர்ந்து, ஏற்க மறுத்தால் ஜாம்பவன்களாய் இருந்தாலும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதே கோடக் நமக்கு சொல்லும் பாடம்.



8:40:00 AM
மாலா வாசுதேவன்
Posted in:
2 comments:
/*மாற்றம் ஒன்றே மாறாதது. இதை உணர்ந்து, ஏற்க மறுத்தால் ஜாம்பவன்களாய் இருந்தாலும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என்பதே கோடக் நமக்கு சொல்லும் பாடம்.*/
அருமையான பதிவு....உபயோகமான தகவல்கள் நன்றி மாலா...
பிரேமா
Thank u Prema
Post a Comment