Friday, December 16, 2011

கொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலைகொலவெறி பாடல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பற்றாளர்கள் கொலைவெறியோடு சுற்றுகிறார்கள் பாடலாசிரியரைப் பின்ன வேண்டுமென்று (நம்ம தனுஷ்தான்). இந்த ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடும், கலாச்சாரம் தகர்ந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. தமிழ் மொழி இந்த மைனர் glitches க்கெல்லாம் தகர்ந்துவிடக்கூடிய பலவீன மொழியல்ல.விஷயம் இப்பாடலின் இசையமைப்பாளருக்கு நம் தமிழ் திரையுலகம் தந்துள்ள cold response ஐப் பற்றியது. ஆனந்த விகடன் பேட்டியில் அவ்விசையமைப்பாள இளைஞன் தெரிவித்துள்ளார் தமிழ்த்திரையிசையுலகில் இருந்து யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ பாராட்டவோ இல்லை என்று. ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் இசையிலேயே உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளான் என்பது நிச்சயம் அங்கீகரிக்கப்படவேண்டிய விஷயம். தகவல் தொடர்பு மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்ட இக்காலத்தில் ஒரு எஸ்எம்எஸ் மூலம் கூட தம் வாழ்த்தைத் தெரிவிக்கலாம்.ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியபோது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றார். இது நடந்த ஓரிரு வாரத்திற்குள்ளாக இளையராஜா ஒரு பேட்டியில் - இப்ப எல்லாரும் எல்லாப்புகழும் இறைவனுக்குன்னு சொல்றாங்க. இறைவன் அனைத்தையும் கடந்தவன். அவனுக்கு எதுக்குங்க புகழ் - என்கிறார். என்ன ஒரு அற்பத்தனமான கமண்ட். தன் வெற்றியை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஒரு சக கலைஞனைக் காயப்படுத்தும் விமர்சனம் இது. சூட்டோடு சூடாக உலகம் இப்போ எங்கோ போகுது என்று ஒரு பாடல் வேறு. இளையராஜாவின் மாஸ்டர் பீஸான ஜனனி ஜனனி பாடலால் தன் மகளுக்கு ஜனனி என்று பெயர் சூட்டிய நிறைய பேரை நான் அறிவேன். தன் இசையால் ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட ஒரு மகா கலைஞன் தன் சக கலைஞனை மதிக்கவோ வாழ்த்தவோ ஏன் துணிவதில்லை?டிஎம்எஸ்ஸின் சில ஆண்டுகளுக்கு முந்தைய தற்கொலை முயற்சி மற்றுமொரு அதிர்ச்சி. அவரின் சாகாவரம் பெற்ற பாடல்களை இன்றும் நாம் நம் பக்தி நிமிடங்களிலும்(தேவனே என்னைப் பாருங்கள், ஆறு மனமே ஆறு), தத்துவ பொழுதுகளிலும், மனம் உற்சாகததில் துள்ளும் போதும் (அன்று வந்ததும் அதே நிலா, அதோ அந்த பறவை) ............................. மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து மகிழ்கிறோம். இப்பேர்ப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தனக்குரிய அங்கீகாரம் தனக்கு அளிக்கப்படவில்லை என்ற அவரது புலம்பல் எரிச்சலையே அளிக்கிறது. இப்படிப்பட்டவர்களை நாம் நம் சொந்தக்காரர்களில், பணியிடங்களில் என்று பல இடத்தில் சந்திக்க முடியும்.நாம் வியந்து போற்றும் சாதனையாளர்கள் பலரும் தன் மேலும் தன் திறமை மேலும் நம்பிக்கையில்லாமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. தன் மேல் நம்பிக்கை இருப்பவன் ஒருபோதும் பிறனை அவமானப்படுத்த மாட்டான். திறமைகள் எங்கிருந்தாலும் அங்கீகரிக்கத்தவறமாட்டான். தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் திருப்தி உடையவனாய் நிச்சயம் இருப்பான்.

8 comments:

DeEpAK KaRtHiK (420) said...

super ah soninga, Ilayaraja apdi than " THALAIGANAM " :(
http://deepakkarthikspeaks.blogspot.com/2011/12/and-of-sociabilis.html

Abi said...

Well said mam

mala vasudevan said...

Thank u fr ur comments Deepak n Abi. continue reading n commenting :)

PREMA WROTE..... said...

மாலா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை....எல்லா புகழும் இறைவனுக்கு என்பதில் இப்படி ஒரு சூட்சமமான அர்த்தம் இருப்பது இப்பொழுது தான் புரிகிறது.கண்டிப்பாக ரஹுமானது தாழ்மை மிகவும் பாராட்டதக்கது..

எனது கருத்து என்னவென்றால் இவ்வளவு அங்கீகாரம் கிடைத்தும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றால்,அதன் காரணம் நம் கண்களுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாக கூட இருக்கலாம் அல்லவா?

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு fingerprint உள்ளவன் மாலா..உங்களுக்கு திருப்தி தருகின்ற ஒரு விஷயம் எனக்கு தராமல் இருக்கலாம்..

”தன் மேல் நம்பிக்கை இருப்பவன் ஒருபோதும் பிறனை அவமானப்படுத்த மாட்டான்”
100/100 மாலா..

உங்களது பதிவுகளின் தீவிர ரசிகை...PREMA.

sridev said...

exactly padma..

mala vasudevan said...

Thank u prema n sridev for ur comments. its encouraging n gives me a spirit to right more. thank u once agn. continue reading n commenting :)

mala vasudevan said...

@Prema: TMS attempted suicide vth his everlasting pulambals - no one has recognised my work. MGR, Sivaji songs got fame only bcos of me etc etc... he bcame quiet only after the TN govt gave him some post. anyway v dnt recognise him fr his post. i dnt even remember wat post is dat. bt i remember only his everlasting songs. dats wat i meant to say Prema. thanks fr reading n commenting

உமாதேவி said...

பிறரது வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்வதற்கே நல்ல மனம் வேண்டும்(இக்காலத்தில்). அதைப் பாராட்டவேண்டுமென்றால்? அந்த மனம் மிகவும் பக்குவப்பட்டிருக்கவேண்டும்... அக்கா இது நல்ல பதிவு.

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes