Tuesday, August 25, 2015

லீகல் டெரரிஸம்

      1961ஆம் ஆண்டு வரதட்சணை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது நிச்சயம் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டப் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்திருக்கும். இப்போதும் வரதட்சணை எல்லா மறைமுக வடிவங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. பொண்ணுக்குப் போடறதெல்லாம் உங்க இஷ்டம் என்று மாப்பிள்ளை வீட்டார்கள் சொன்னார்கள் என்றால் பெண்வீட்டாரின் வசதி, சொத்து நிலவரம் எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். விழிகள் விண்மீன்களோடு விளையாடினாலும், விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான் என்று கவிஞர்கள் மணமாகாத இளம்பெண்கள் குறித்து எழுதிய கவிதைகள் இன்றும் ரெலவன்ட். அதனால் வரதட்சணை ஒழிப்புச்சட்டம் எந்த நோக்கத்துக்காக இயற்றப்பட்டதோ அது நிறைவேறியதாகத் தெரியவில்லை. மாறாக இந்தச்சட்டம் ஏகப்பட்ட வழிகளில் பெண்களால் மிஸ்யூஸ் செய்யப்படுகிறது. 
         
          தற்சமயம்  செக்ஷன் 498ஏ  இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெயில் கிடையாது. இது ஒரு நான்-பெயிலபிள் அஃபன்ஸ். உடனடியாகக் கைது செய்நுவிடுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. ஒருவேளை பாதிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் பெண்களால் குற்றத்தை நிருபிக்க முடியாமல் போகுமானால் அவர்கள் ரூ.1000 ஃபைன் கட்டினால் போதும். 
                 
         1000 ரூபாயோடு விஷயம் முடிந்துவிடும் என்பதால் பெண்கள் கணவரோடு பிரச்சனை வரும்போது அவர்கள் குடும்பத்தையே உள்ளே தள்ளி விடுகிறார்கள். வெறும் ஆயிரம் ரூபாய்க்கு கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் எல்லோருக்கும் கூட்டமாகச் சிறைத்தண்டனை என்பது இப்பெண்களுக்கு ஒரு நல்ல ஆஃபராகத் தெரிகிறது. 60களில் இருக்கும் மாமனார், மாமியார், கல்யாணம் முடிந்து வேறோரு வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாத்தனார் என்று அனைவர் வாழ்க்கையையுமே இவர்களின் பொய்யான ஒரு குற்றச்சாட்டு புரட்டிப்போட்டுவிடுகிறது.
     
      கணவர் குடும்பத்தோடு சேர்ந்து என்னை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தினார். அவருடைய தம்பி என்னை அடித்தார் என்று ஒரு பெண் புகார் கொடுத்தார். விசாரணையில் அந்தக்கொழுந்தன் அப்பெண் சொன்ன தேதியில் வீட்டிலேயே இல்லை. மும்பை சென்றிருந்தார் என்று நிரூபிக்கப்பட்டது. அப்பெண் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு வீட்டுக்குப்போயிருந்திருப்பார். கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் கணவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் என்ன பதில். தீர்ப்பளித்த நீதிபதி இது தீவிரவாதத்தின் ஒரு வடிவம் -  லீகல் டெரரிஸம் என்று கடுமையாகத் தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். இது போல் எண்ணற்ற கேஸ்கள். சமீபத்தில் பேஸ்புக்கில் பெண்களை மோசமாகச்சித்தரித்த ஒரு படத்துக்கு ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் லைக் போட்டார் என்று கேஸ். ஆனால் அப்படத்தில் அஃபென்ஸிவாக எதுவுமேயில்லை. விசாரணையில் மனைவி தன் கணவனை மிரட்டுவதற்காகப் போட்ட கேஸ் இது என்று தெரிய வந்துள்ளது. ஆக்சுவலாக சொத்துப்பிரச்சனை.

இது போல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது லீகல் டெரரிஸம் தான். எனவே 489ஏ சட்டத்திருத்தத்திற்கு உட்படுத்தவேண்டும் என்று கோர்ட் பரிந்துரைத்துள்ளது. ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.


0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes