Monday, September 13, 2010

மனிதம்?

ஒரு சாயங்கால வேளை. பிள்ளைகள் இருவரும் போர்ட்டிகோவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரின் சைக்கிள்களும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு பறந்து பொண்டிருந்தன. நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அம்மா பொம்மைகள் விற்றபடி வந்து கொண்டிருந்தார். தலையில் ஒரு கூடை. கூடையின் பார்டரில் நீளமான குச்சிகள் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு குச்சியின் உச்சியிலும் களிமண்ணாலான பொம்மைகள். பிள்ளையார், கங்கையைத் தலையில் தாங்கிய சிவபெருமான், பார்க்கடலில் பள்ளிகொண்ட நாராயணன், அம்மன் இப்படி பெரிய பொம்மைகள். நடுவே ஒரு டால்ஃபின் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தது. என் மகனின் ஃபேவரைட் இந்த மீன்கள். டிஸ்கவரி தொ.கா வில் எந்நேரமும் இதைத்தான் பார்ப்பான். பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளில் மட்டுமே விளையாடும் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு மண் பொம்மையில் விளையாடும் சுகம் தெரியவேண்டும் என்று நினைக்கிறேன். (எலக்ட்ரானிக் விளையாட்டு பொம்மையில் கற்பனைகளுக்கும் பாவனைகளுக்கும் இடமில்லை. இவ்வகை பொம்மைகள் ஆடுகின்றன, பாடுகின்றன, பேசுகின்றன and what not??? ஆனால் மண் பொம்மைகள் ஆடுவதாகவும், பாடுவதாகவும், பேசுவதாகவும் நாம் பாவிக்க வேண்டியிருக்கும். எனவே குழந்தைகள் அழகான ஒரு உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு அதில் விளையாடுவர்)

பொம்மை விற்பவரைக் கூப்பிட்டாயிற்று. உள்ளே குட்டி குட்டியாக - திராட்சைக்கொத்தைக் கடிக்கும் அணில், மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ஜோடிக்கிளிகள், ஜோடிப்புறா, கன்றை நக்கிக்கொண்டிருக்கும் தாய்ப் பசு, துள்ளிகொண்டிருக்கும் இரண்டு டால்ஃபின்கள், தும்பிக்கையை உயர்த்திக்கொண்டிருக்கும் யானை - அடேயப்பா மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன். பிள்ளைகளிடம் யார் யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கோங்க என்றேன். மகள் ஒரு ஒட்டக பொம்மையை எடுத்துப்பொண்டாள். மகன் டால்ஃபினைத் திரும்பிக் கூடப் paarkkavilallai.(பிள்ளைகளிடம் ஆச்சரியத்திற்குப் பஞ்சமேயிர்க்காது. இன்று மிகவும் பிடிக்கும் பொருள் நாளை தேவையே படாமல் போவதும், விடுமுறையை முழுவதும் கழித்த தாத்தா பாட்டியின் ஊர் ஞாபகம் அடுத்த விடுமுறைக்குள் மறந்து விடுவதும் சர்வ சாதாரணம்). வாங்கி முடித்து பணமும் கொடுத்தாயிற்று. அந்த அம்மா கூடையைத்தூக்க ஒரு கை கொடுக்கச் சொன்னார். ம்ஹும் ஒரு levelக்கு மேல் என்னால் தூக்க முடியவில்லை. சரியான கனம். ஒரு பக்கமா பிடிக்கிறம்மா. விழப்போகுது என்று என்னைப் பயமுறுத்திவிட்டார். நான் regularஆக காய் வாங்கும் பெண் காய்க்காரப்பெண் கூடையைத்தூக்கியபடி வந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் அடிக்கடி கூடையைத்தூக்கிவிடுவது, மாடி வீட்டாருக்கு காய் வேண்டுமா எனக் கேட்டுவருவது என்று நிறைய எடுபிடி வேலைகள் பார்த்துள்ளேன் அந்த நம்பிக்கையில் - 2 பேரா தூக்க முடியல இந்தக்கூடைய. நீங்க ஒரு கைபொடுங்களேன் என்றேன். அதெல்லாம் தூக்க முடியாது. எனக்கு காய வித்து முடிக்கணும் என்றபடி போயேபோய் விட்டார். திகைத்து நின்று விட்டேன். இன்னும் மீளவில்லை திகைப்பிலிருந்து - ஏனெனில் மறுநாள் காய்க்காரம்மா ஒன்றுமே நடவாதது போல் ஒரு கை குடும்மா கூடையத் தூக்க என்றார் என்னிடம்.

3 comments:

லெமூரியன்... said...

ம்ம்ம்....!
மனிதம் கர்ப்பத்தை மறந்து கொண்டே வருகிறோம்...!
ஆனால் ஒட்டுமொத்தமாக சொல்ல முடியாது .....சொல்லவும் கூடாது...!

(ராசா ராசா சோழன் பாராட்டு குழுவில் உங்களுக்கும் இடம் குடுத்தாங்களா??? :) :)
Pose லாம் பயங்கரமா இருக்கே...அதான் கேட்டேன்)

மாலா வாசுதேவன் said...

பழைய profile foto ரொம்ப கேவலமாக இருந்தது என்று தோழி சொல்லிவிட்டாள் லெமூரியன. அதனால்தான் இந்த foto

monica said...

mala,oru bomai vachi evlavu periya kathai eppadi solla unnal mudichichu really great unoda ezuthuku 'hats off',ethai nee X11 std entha kathai sollieruntha nee kandipa MBBS seat vangi erupa

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes