Saturday, December 15, 2012

ரியல் அஞ்சாநெஞ்சன் அஜித்

                              வயதும் புறத்தோற்றமும்  பிரதானமான விஷயங்களாக இருக்கும் திரைத்துறையில் அஜித் ஒரு ஆச்சர்யம். அவருடைய சால்ட் அன் பெப்பர் லுக்கைப் பார்க்கும் போது உண்மையில் ஆச்சர்யமாக இருக்கிறது. வயதை இவ்வளவு வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடிகரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். விக்ரமிடம் ஒரு பேட்டியில் அவர் வயதைக் கேட்டபோது தெரிவிக்க மறுத்துவிட்டார். இது வரையில் அவர் பிள்ளைகளின் போட்டோவையும் வெளியிட்டதில்லை (உத்தேசமாக அவர் வயதைக் கணக்கிட்டு விடலாம் அல்லவா).                             ...

Friday, November 30, 2012

மனீஷா கொய்ராலாவிற்கு கான்சர்

பிரபல நடிகை மனீஷா கொய்ரலாவிற்கு கான்சர். சில நாட்களுக்கு முன் ஒரு சமூக வலைத்தளத்தில் புட் பாய்சனிங்கால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தான் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டிற்காக நேபாளில் தங்கியிருக்கும் மனீஷா இரு தினங்களுக்கு முன் சுயநினைவை இழந்து கீழே விழுந்திருக்கிறார். அது வரை புட் பாய்சனிங் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவரை மும்பை கொண்டு வந்திருக்கின்றனர். ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுள்ள அவர், இச்செய்தியை மிகத் தைரியமாக எதிர்கொண்டதாக அவரின் தோழி தெரிவிக்கின்றார். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள...

கௌதம் மேனன், மணிரத்னத்துக்குப் படம் எடுக்கத் தெரியாது - தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்

சமீபத்தில் மணிரத்னத்தின் பல்வேறு பேட்டிகள் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டியில் தான் இயக்கியதில் தனக்குப் பிடிக்காத படம் இதயக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத்தம்பி டென்ஷனாகிவிட்டார். முதல் படம் தோல்வியடைந்த ஒரு புது இயக்குனருக்கு, அடுத்த படம் வாய்ப்புக் கொடுக்க எந்த தயாரிப்பாளர் முன்வருவார்? அந்த நிலையில் இருந்த மணிரத்னத்திற்கு அவர் வாய்ப்பு கொடுத்ததே பெரிய விஷயம்.  Beggars cannot be choosers என்பதை உணர்ந்துதான் மணிரத்னமும் இன்னொருவரின் கதையை இயக்கித்தருவதற்கு ஒப்புக்கொண்டிருப்பார். அப்போது அவருக்கு அந்த வாய்ப்பே பெரிய விஷயமாக இருந்திருக்கும். இதே போல்தான் கௌதம் மேனனும். லேப்டாப்பை வைத்துக்கொண்டு கதை சொல்வதற்கே தடுமாறியதாக காக்க காக்க திரைப்படத்தின் தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால் படம் வெற்றியடைந்த பிறகு தயாரிப்பாளரைபற்றி...

Saturday, November 17, 2012

சொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா?

ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பெர்சனல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்கிறார் நிர்மலா பெரியசாமி. இந்நிகழ்ச்சியில் வரும் முக்கால்வாசி பிரச்சினைகள் முறையற்ற காதல் என்று சொல்லப்படுபவைதான். முறையற்ற காதல் என்று சொல்லப்படுவது எது? ஒரு திருமண பந்தத்தில் இருக்கும் ஆண் அல்லது பெண், வேறொரு பெண் அல்லது ஆணின்பால் ஈர்க்கப்படுவதை முறையற்ற / கள்ளக்காதல் என்கிறோம்.  இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் ஏராளம். அந்த ஷோவுக்கு வந்த ஒரு பெண் சொல்கிறார் தன் கணவரைப்பற்றி - தினமும் தண்ணி போடுறார்ம்மா. வீட்டுக்கு, பிள்ளைகளுக்குச் செலவுக்குக் காசே குடுக்குறதில்ல. எந்த நேரமும் அடி, உதைதான். (இன்னொரு ஆணைச் சுட்டிக்காட்டி) அந்த நேரம் இவரு தான்ம்மா ஆறுதலா இருந்தாரு. இந்த ஷோவுக்கு வரும் பெண்கள் சொல்லும் சில விஷயங்களை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு வக்ரங்கள், குரூரங்கள்....

Friday, November 16, 2012

லக்சுரி அப்பார்ட்மென்ட் வாங்குவது புத்திசாலித்தனமா?

ரியல் எஸ்டேட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் - லக்சுரி அப்பார்ட்மெண்ட்ஸ். ஓஎம்ஆரில் லொக்கேட்டட்; ஜிம், ஸ்விம்மிங் பூல், க்ளப் ஹவுஸ், ஜாகிங் ஏரியா, டென்னிஸ் கோர்ட், பிள்ளைகளுக்குப் ப்ளே ஏரியா எல்லாம் இருக்கு என்று கேட்கும்பொதே மெய் சிலிர்த்து விடும் நம் மேல் மத்திய தர வர்க்கத்தினருக்கு. நாம் அனுபவிக்காததை நம் பிள்ளைகள் அனுபவிக்கட்டும் என்று தான் நாம் முக்கால்வாசி விஷயங்களை வாங்குகிறோம்.        ஆனால் லக்சுரி அப்பார்ட்மெண்ட்டுகளின் மெயின்டெனென்ஸ் காஸ்ட்டைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறோம். சுமாராக 5200 ரூபாய் வரை ஒரு 1200 ச.அடி ப்ளாட்டுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது ரூ.3.50 ச.அடிக்கு + வாட்டர் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட்டுக்கு ரூ.600 + குடிநீருக்கு ரூ.400. க்ளப்ஹவுஸ் இருந்தால் இதோடு சேர்த்து ரூ.1500. மொத்தம் ரூ.7000.    ரூ.60000 டேக்ஹோம் பே உள்ள...

Thursday, November 1, 2012

மதபோதகர்களின் பிடியில் ஆந்திர சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்

சிடிஎஸ்ஸில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணைக் கட்டாய மதமாற்றம் செய்ததாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த உலகளாவிய மதமாற்றத்தின் பின்னணியில் பெரும் வணிக, அரசியல் நோக்கங்கள் உள்ளன என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதிரியான எஸ்டாபிளிஷ்ட் நிறுவனங்களைப்பற்றி நாம் பேச வேண்டாம். மாறாக நான் தெரிந்து கொள்ள விரும்புவது, நம் பக்கத்து வீட்டு டெய்ஸி அக்கா, ஆபிஸில் நம்முடன் பணிபுரியும் பெட்ஸி முதலானோர் ஏன் யாரோ ஒருவரை மதமாற்றுவதைப் பெர்ஸனல் அச்சீவ்மென்ட்டாகக் கருதுகிறார்கள்? ஏ தோவொரு தெய்வீக நொடியில் ஏற்படும் வார்த்தைப்படுத்தமுடியாத இறையுணர்வால் ஆட்கொள்ளப்பட்டு ஏசுவே தேவன் என்று அவர் கொள்கைகளைப் பின்பற்றுவது வேறு. மாறாக, நீங்க கும்புடறெதெல்லாம் கல்லு. அதால பேச முடியுமா? என்று அபத்தமாக அமெச்சூராகப்...

Tuesday, October 23, 2012

முக்தா சீனிவாசனை முறைத்துக்கொள்ளும் கமல்

கமலுக்கு லீகல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் முக்தா சீனிவாசன். பழம்பெரும் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் 1947ம் ஆண்டு முதல் தமிழ்த்திரையுலகிலிருக்கிறார். இவர் இயக்கிய முதலாளி திரைப்படத்திற்காக ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய விருது பெற்றவர். திரையுலகின் ஜாம்பவான்களான டி.ஆர்.மகாலிங்கம், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், பாலச்சந்தர், மு.கருணாநிதி போன்ற பலரோடும் பணிபுரிந்திருக்கிறார். கமலின் நாயகன் உட்பட சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், அந்தமான் காதலி முதலிய ஏராளமான படங்களின் தயாரிப்பாளர். இவ்வளவு அனுபவம் மிக்க தயாரிப்பாளர், இயக்குனரைத்தான் வம்புக்கிழுத்திருக்கிறார் கமலஹாசன்.             நாயகன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருப்பதை ஒட்டி ஹிண்டு நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் கமல். அதில் நாயகன் படத்தயாரிப்பாளரைப் பற்றி எக்கச்சக்க...

Tuesday, October 16, 2012

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள்-2

இந்தத் தொடர் பதிவில், இந்த வாரம் இயக்குனர் மணிரத்னத்தைப் பற்றி பகிர விருப்பம். மணிரத்னத்தின் படம் திரையுலக சுஜாதா நாவல். மிக அழகான நடை.அழகே அழகான விஷுவல்ஸ்.லைட் மூவிஸ் வரிசையில்- மௌனராகம், அக்னிநட்சத்திரம், அலைபாயுதே, கமர்சியல் ஹிட்டாக நாயகன், தளபதி, கொஞ்சம் ஹெவி சப்ஜக்ட்டில் அஞ்சலி, ரோஜா, பம்பாய் இவைகள் மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில், என்ன ஒரு அருமையான காட்சிகள், நடிப்பு, இசை - மௌனராகம் கார்த்திக் இன்று வரை ஒரு துறுதுறுவென இருக்கும் ஹீரோவின் அடையாளம்.(இப்போதைய கதாநாயகிகளும் கதாநாயகனை உனக்கென்ன மௌனராகம் கார்த்திக்னு நெனப்பா என்று கேட்கிறார்கள்). இப்படி என்றும் இனிமையாய் இருக்கும் படங்களைத் தந்த மணிரத்னத்தின் சமீபத்திய 2, 3 தமிழ்ப் படங்கள் - டிஸாஸ்ட்ரஸ்.  கடைசியாக வெளிவந்த ராவணன் - எந்த தமிழ் கிராமத்தில் இப்படியெல்லாம் டான்ஸ் ஆடுகிறார்கள், எந்த தமிழ் கிராமம் பார்ப்பதற்கு அவர்கள் காண்பித்த...

Saturday, October 6, 2012

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய தமி்ழ் சினிமா பிரபலங்கள் - 1

ஒன் மூவி வொண்டர், flash in a pan என்றெல்லாம் சொல்வார்களல்லவா - அதைப்போன்று தங்கள் திறமையால் நடிப்பு, இயக்கம், இசைத்துறைகளில் இரண்டு, மூன்று படங்களில் நம்மைத் திரும்பிப்பார்க்க வைத்த பிரபலங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நம்மை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். சிலர் திரையுலகிலிருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களில் சிலரைப்பற்றி ஒரு ரவுண்ட் வருவோம். முதலில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரில் பிறந்து தன் 31வது வயதில் 1999ம் ஆண்டு வாலி படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்த படம் குஷி. வாலி படத்தில் கூட சாலிடான கதை இருந்தது. ஆனால் குஷி படத்தின் துவக்கத்திலேயே இவங்க 2 பேரும் தாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று சொல்லிவிட்டார். எனவே எந்த விதமான திருப்பங்களுக்கும், சஸ்பென்ஸ்களுக்கும் இடமில்லை. திரைக்கதைதான் பேசியாக வேண்டும். இந்நிலையில்...

Friday, October 5, 2012

ராசிக்கு ஆறாம் இடத்திலிருக்கும் சனிபகவான் அதிர்ஷ்டம் தருவாரா?

ஒவ்வொரு கிரகங்களும் பெயர்ச்சி ஆகும்போது, சனிப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள், ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்துத் தள்ளுவது தமிழர்களின் ஒரு பொதுவான குணம். ஏதாவது ஒன்று நடந்து நமக்கு நல்லகாலம் பிறந்துவிடாதா என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. நாலாப்பக்கமும் வாழ்க்கை நசுக்கும்போது வெளியேற வழிதேடுவது மனித இயல்பு. இதைத்தான் நம் பகுத்தறிவு சிங்கம் கருணாநிதியும் செய்திருக்கிறார். குருபகவான் அருள் பெறுவதற்காக மஞ்சள் துண்டு அணிந்தவர், தற்போது கறுப்புக்கு மாறியிருக்கிறார். காரணம், இவர் ரிஷப ராசிக்காரர். ரிஷப ராசிக்கு இப்போது ஆறாமிடத்தில் இருக்கிறார் சனிபகவான். ஜோதிட ரீதியில் இது ஒரு நல்ல அமைப்பாம். கறுப்புச்சட்டை அணிந்தால் ரொம்ப விசேஷமாம்.ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? அதனால் ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு கறுப்புச்சட்டை. இது தெரியாமல் தொண்டர் படையும் கறுப்புச்சட்டை...

Friday, September 28, 2012

தாண்டவம் படப்பிரச்சினை - அமீர் உள்ளிட்ட 8 இயக்குனர்கள் ராஜினாமா

இயக்குனர் விஜய்யின் தாண்டவம் படத்தின் ஸ்கிரிப்ட் யாருடையது என்ற பிரச்சினை பெரிதாகியுள்ளது. பொன்னுசாமி என்பவர் படத்தின் ஸ்கிரிப்ட் என்னுடையது என்கிறார். அவருடைய சார்பில் வாதாடிய அமீர் - எப்படியாவது பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று போராடிப்பார்த்தேன். ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பொன்னுசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து நான் இயக்குனர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன் - என்கிறார்.            நாம் செய்த வேலையை யாரோ தான் செய்தது போல் காண்பித்துக்கொள்வது, நாம் செய்த வேலையை அது ஒன்றுமே இல்லாதது போலவும், அந்த வேலை எதற்குமே தேவை இல்லை என்பது போலவும் நடந்து கொண்டு பின்னர் அதையே அவர்கள் பயன்படுத்திக்கொள்வது, என்ன வேலை  செய்திருக்கிறோம் என்பதையே பார்க்காமல் மேம்போக்காக அவமானப்படுத்துவது போன்றவற்றைப்...

Thursday, September 27, 2012

விகடன் குழுமத்திலிருந்து புதிய வார இதழ் - விகடன் என்ற பெயர், விகடன் தாத்தா இல்லாமல்

ஆண்டிற்கு ரூ.150 கோடி டேர்ன் ஓவர் இருப்பதாகச் சொல்லப்படும் விகடன், தமிழ்க் குடும்பங்களி்ன் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். இக்குழுமம் வெளியிட்ட  மாத, வார இதழ்கள் ஏராளம். (அவள் விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், சுட்டி விகடன், மோட்டார் விகடன், சக்தி விகடன்). ஆனால் இன்று வரை விகடன் என்ற பெயர் இல்லாமலும், விகடன் தாத்தாவின் படம் இல்லாமலும் ஒரு இதழை இவர்கள் ஆரம்பித்ததில்லை. இப்போது முதன்முறையாக விகடன் குழுமத்திலிருந்து அக்டோபர் 6 முதல், டைம்பாஸ் என்ற வார இதழ், விகடன் என்ற அடைமொழி இல்லாமலும், விகடன் தாத்தா மாஸ்காட் இல்லாமலும் வர இருக்கிறது. இதன் விலை ரூ.5. வீட்டுப்பெரியவர்களின் ரெஸ்பான்ஸ்             நல்ல வேளை. விகடன்ற பேர விட்டுட்டாங்க. எப்பேர்ப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் வெளியிடப்பட்டது ஒரு காலத்துல. இன்னக்கி சினிமாக்காரங்க...

Monday, September 24, 2012

கோயம்புத்தூர் காதல் கொலைகளின் பின்னணி

கடந்த  2 நாட்களாகத் தமிழ்நாட்டில் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருப்பது இந்தக் கோயம்புத்தூர் காதல் கொலைகள் தான். 21 வயது இளைஞன் தன் சக மாணவி, அவரது தாயார் இருவரையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வளவு கொடூரமான க்ரைம் ஸீனை நான் பார்த்ததில்லை என்கிறார் வடவள்ளி இன்ஸ்பெக்டர். மற்றொரு சம்பவத்தில் 9ம் வகுப்பு சிறுமியை ஒரு இளைஞன் கொலை செய்துள்ளான். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இந்தக் கண்மூடித்தனமான கோபம்தான் காதலா? காதல் பெயரால் நடக்கும் அபத்தங்கள் எத்தனையெத்தனை? திருமணமானவர்களில் கணவனோ, மனைவியோ வாழ்க்கைத்துணையிடம் உன் நல்லதுக்காகத்தானே சொல்கிறேன், நான் உன் மேல் பொஸஸிவாக  இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் - இதுவா காதல்? தளைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும் இடத்தில் காதல் வராது. கட்டற்ற சுதந்திரம்தான் காதல். நம்மை...

Sunday, July 29, 2012

மணிரத்னத்தால் முடியாதது செல்வராகவனால் முடியுமா?

 கல்கியின் பொன்னியின் செல்வனை ஒவ்வொரு பத்தாண்டு காலகட்டத்திலும் (in every decade) யாராவது ஒரு திரையுலகைச் சார்ந்த பிரபலம் திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அந்நாவலைத் திரைப்படமாக்க ஆசைப்பட்டதாக என் பெரியம்மா சொல்வார்கள். அப்போதே சிவாஜி ரசிகர்கள் - எம்.ஜி.ஆர் அதைத் திரைப்படமாக்கி நாவலைக் கெடுத்துவிடக்கூடாது என்பார்களாம். அதற்குப்பிறகு கமல் அதே ஆசையை வெளிப்படுத்தினார் - நடக்கவில்லை. பின்னர் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம் அதையே சொன்னார். எங்கள் வீட்டுப்பெரியவர்கள் எல்லோரும் மணிரத்னம் அக்கதையைப் படமாக்கப் போகிறார் என்றவுடன் அலறிவிட்டார்கள்.   இப்போது செல்வராகவன் பொன்னியின் செல்வனைப்படமாக்கப்போகிறேன் என்று கிளம்பியிருக்கிறார். பொதுவாக அனேக கொலைவெறிகளைச் சமாளிக்கும் நானே இதைக்கேட்டவுடன் அலறிவிட்டேன். பின்ன - ஆயிரத்தில் ஒருவன் பார்த்தீர்கள்...

Monday, July 16, 2012

உலகத்துல இருக்குற எல்லா அம்மாக்களும் இதே வசனத்த தான் வேற வேற மாதிரி பேசுறாங்க

நிச்சயம் பின்னாடி வரும் எல்லா வசனத்தையும் உங்க அம்மா, உங்க வீட்ல ஒரு தடவயாவது பேசியிருப்பாங்க. நீங்களே ஒரு அம்மான்னா - நீங்களும் நிச்சயமா இது எல்லாத்தயும் பேசியிருப்பீங்க ;) பல் தேச்சுட்டியா? இன்னுமா தேய்க்கல புக் ஏன் கீழ கிடக்கு - தூக்கி ஷெல்புல வை யார் எடுத்தான்னு நான் கேக்கல. தூக்கி வைன்னு தான் சொன்னேன் இந்த டிரஸ்ஸ போட்டுக்கிட்டு வெளில வரக்கூடாது. டிரஸ்ஸ மாத்து ஆர்க்யூ பண்ணாத பின்னாடி தள்ளி வா. இவ்வளவு பக்கத்துல உக்காந்து பாக்கக்கூடாது அவன அடிக்காத ஏதாவது சொல்லணும்னா பக்கதுல வந்து சொல்லு. கத்தாத போதும். இப்ப தான ஒரு பெரிய bowl fullஆ சாப்பிட்ட சீக்கிரம் கிளம்பு. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங் பாத்ரூம் போய்ட்டு வந்துட்டியா? கட்டாயம் பாத்ரூம் போய்ட்டுதான் கெளம்பணும் பரவால்ல. try பண்ணு. வரும் அர்ஜன்ட்டா வருதா கொஞ்ச நேரம் கன்ட்ரோல் பண்ணிக்க முடியுமா? ஒரு பீஸ் சாப்ட்டு பாரு. பிடிச்சா சாப்பிடு....

Wednesday, July 11, 2012

மத்திய தர மக்களை அவமதிக்கும் சிதம்பரம்

ரூ.15க்கு குடிதண்ணீரும், ரூ.20க்கு ஐஸ்க்ரீமும் வாங்கத் தயங்காத மத்திய தர மக்கள் அரிசி விலையை உயர்த்தினால் கூச்சலிடுகின்றனர் என்கிறார் செல்வச்சீமான் சிதம்பரம்.  மத்தியதர மக்கள் தினமும் 3 வேளை ஐஸ்க்ரீம்தான் சாப்பிடுகிறார்களா? குடிதண்ணீருக்காக 15 ரூபாயை செலவழிக்கிறோம் என்கிறார் வெட்கம் கெட்ட மத்திய அமைச்சர். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் மக்களின் அடிப்படைத்தேவையான சுத்தமான குடிநீரை வழங்க இயலாத கையாலாகாத அரசின் அங்கமான இவர் விலை உயர்வைப்பற்றி என்ன கவலைப்படப்போகிறார்? 30 சதவீதம் வரி செலுத்தும் இந்த மத்தியதரத்தின் பணம் எங்கே போகிறது? அந்த பணத்தைக்கொண்டு அரசு அவர்களுக்கு என்ன வசதி செய்து தரப்போகிறது? வளர்ந்த நாடுகளில், வரி செலுத்தும் மக்களுக்கு மருத்துவம் இலவசம், தரமான கல்வி இலவசம். இங்கே புழுத்த அரிசியும், குவார்ட்டரும் கோழி பிரியாணியும்தான் இலவசம். மத்திய தரத்தின் வருமானத்தில்...

Wednesday, June 27, 2012

கனிமொழிக்கு மீண்டும் சிறை

அதிமுக அரசின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து, திமுக வரும் நான்காம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜாமீன் பெற முயற்சிக்காமல் சிறையிலேயே இருப்பவர்களுக்குக் கட்சியில் பதவியும் தரப்போகிறாராம் ஸ்டாலின். கருணாநிதிக்கு எதில் யார் வாரிசோ என்னவோ தெரியாது - ஆனால் அவரைப்போல் காமெடி பண்ணுவதில் அவருடைய வாரிசு நிச்சயம் கனிமொழிதான். சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சிபிஐயிடம் சிறப்பு அனுமதி வாங்கப்போகிறாராம். மக்களை அடிமுட்டாளாக எண்ணும் கருணாநிதி மற்றும் குடும்பத்தாரின் போக்கு சொல்ல முடியாத அளவு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. மேடம் கனிமொழி - நீங்கள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சிறையை நிரப்ப அனுமதி வாங்குவதற்குப் பதிலாக, திகார் சிறையையே நிறைத்திருக்கலாம் அல்லவா - வெளியே வந்தவுடன் உங்கள் சகோதரர் உங்களுக்குக் கட்சியில் பதவியும் கொடுத்திருந்திருப்பார், நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஜாமீனுக்குச்...

Thursday, June 21, 2012

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெண்களுக்கு ஒரு அலர்ட்

நடுத்தரக் குடும்ப மற்றும் டெக்னிக்கல்லி ஸ்கில்டு, க்வாலிபைடு பெண்கள் பலரும் குழந்தை பேற்றுக்குப்பின் வேலையை விட்டுவிடுவது மிகப் பரவலாக க் காணப்படும் ஒரு சாதாரண ட்ரண்ட். பிள்ளையப் பாத்துக்கிறதுக்காக ரூ.40000 வேலய விட்டுருக்கா - என்று ஒரு பாராட்டுப்பத்திரமும் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பின்னடைவுகளைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது ( http://uk.finance.yahoo.com/news/can-you-afford-to-be-a-stay-at-home-mum.html ). வேலையை விட்டுவிடுவதன் சாதக பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார்கள்.  இதைப்படிக்கும்போது மாபசான் எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது. ஒரு குடிசைப்பகுதியில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 பிள்ளைகள். ஒரு கனவானும், அவர் மனைவியும் தினமும் அந்தப்பகுதியைக் கடந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே...

Wednesday, June 20, 2012

பஸ்ஸில் பயணம் செய்து பல்பு வாங்கிய தேனி எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியின் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=489928. பஸ்ஸில் பயங்கர கூட்டம் போலும் - உட்கார இடம் கிடைக்கவில்லை. கண்டக்டரிடம் - நான் எம்எல்ஏங்க என்று சொல்லியிருக்கிறார். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. அவர்  பாட்டுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்து விட்டார். எம்எல்ஏ நொந்து போய் போக்குவரத்துக் கழகத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது இன்றைய செய்தி. இச்செய்திக்கு இரண்டு விதமான ரெஸ்பான்ஸ்கள் வந்திருக்கின்றன.  முதல் டைப் ; எம்எல்ஏக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடிதான் பயணம் செய்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சீட் பிடித்துக் கொடுப்பதா கண்டக்டரின் வேலை? இரண்டாவது டைப் (இது என் கருத்து) ; இதே எம்எல்ஏ கொத்துக் கொத்தாக...

Thursday, May 31, 2012

பாலாஜிசக்திவேலை வறுத்தெடுத்த பாக்யராஜ் - காரணம் என்ன?

வழக்கு எண் 18 9 திரைப்படத்தின் வெற்றிவிழா மற்றும் பாலாஜிசக்திவேலுக்கான பாராட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் அழைக்கப்பட்டிருந்திருக்கிறார். பேசுவதற்காக மைக்கைப் பிடித்த பாக்யராஜ், வழக்குஎண் திரைப்படத்தில் இந்தக்காட்சி சரியில்லை, அந்தக்காட்சியில் லாஜிக் இல்லை என்று சகட்டுமேனிக்குக் குறை சொல்லித் தள்ளி இருக்கிறார். பாராட்டி உரையாற்றவேண்டியவர் இப்படி காய்ச்ச, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி உட்பட மேடையிலிருந்த அனைவரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நெளிந்திருக்கின்றனர். பாராட்டுவிழாவில் விமர்சனம் செய்யவேண்டிய அவசியமென்ன? படம் குறைகள் நிறைந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தால் தலைமையேற்க முதலிலேயே நாகரிகமாக மறுத்திருக்கலாமே. ஆக்சுவலி காதல் திரைப்படத்தில் நடிக்க சாந்தனுவைத்தான் முதலில் அப்ரோச் செய்திருக்கிறார் பாலாஜி - இது பாக்யராஜே முன்பு ஒரு பேட்டியில்...

Monday, May 28, 2012

மனைவி சொன்னதைக் கேட்டாலும் பிரச்சனை கேட்காவிட்டாலும் பிரச்சனை - தவிக்கும் தனுஷ்

3 படம் ஆரம்பித்ததிலிருந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. கொலவெறியின் மெகா ஹிட், படம் பிரமாண்ட ப்ளாப், கஸ்தூரி ராஜா- நட்டி பிரச்சினை, ரஜினியிடம் நஷ்டத்தைத் திரும்பக்கேட்டது மற்றும் அனைத்திலும் ஹைலைட்டாக தனுஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி என நாளொரு செய்தியும், பொழுதொரு பிரச்சனையுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.   கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில், தனுஷ் ஐஸ்வர்யா இடையே பிரச்சனை என்பது உண்மைதான். எல்லா கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனை போல தான் இதுவும். தனுஷ் ஸ்ருதியோடு மிகவும் நெருக்கமாக நடித்தது ஐஸ்வர்யாவுக்கு வருத்தத்தைத் தந்தது என்கிறார்.             இதில் என் சந்தேகம் என்னவென்றால் - படத்தின் இயக்குனர் சொன்னதை நடிகர் செய்திருக்கிறார். அப்புறம் இயக்குனரே ஏன் இப்படி நடித்தாய் என்றால் நடிகர் என்ன செய்வார் பாவம்.           ஐஸ்வர்யா...

Tuesday, May 22, 2012

சென்னை - பிரபல சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணங்கள்

இது ஸ்கூல் அட்மிஷன் சீசன். பிரபல பள்ளிகளில் அட்மிஷனுக்காகப் பெற்றோர்கள் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர். தன் பிள்ளைகளுக்குச் சிறந்ததை வழங்குவதே ஒவ்வொரு பெற்றோரின் ஆவலாக இருக்கிறது. இதற்காக தம் சக்திக்கு உட்பட்டதையும், அப்பாற்பட்டதையும் செய்ய பெற்றோர் சித்தமாக இருக்கின்றனர். மேலும் இன்ன பள்ளியில் என் பிள்ளை படிக்கிறான் என்று கூறிக்கொள்வது ஒரு முக்கியமான ஸ்டேட்டஸ் சிம்பல். பத்மா சேஷாத்திரியில் மூன்றாம் வகுப்பு வரை ஒரு வருடத்திற்கு 1,25,000 ரூபாய், டிஏவியில்ரூ. 40000 , செயின்ட் பிரிட்டோவிலும் இதே ரேன்ஜ். என் பிள்ளைகளையும் அனேக வருடங்கள் ஸ்டேட் ரேங்க் எடுக்க வைக்கிற ஒரு பிரபல சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து விட்டு, தற்சமயம் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன் - காரணம் வொர்க் லோட் மற்றும் படிப்பைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமை. பள்ளிகளும், கல்லூரிகளும்...

Thursday, April 19, 2012

இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு கொள்வீர்களா - என்ன சொல்கிறார்கள் வெளிநாட்டவர்கள்

உலகப்பொருளாதாரம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியப்பொருளாதாரம் நிலையாகவே இருந்தது. உலகில் பல்வேறு வங்கிகள் மூடப்பட்ட போது எஸ்.பி.ஐ யின் லாபம் உச்சத்திலிருந்தது. இந்த அடிப்படை பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பயன்படுத்தி அன்னிய முதலீட்டாளர்களை நம் பக்கம் ஈர்க்க நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் - காமன் வெல்த் கேம்ஸ். அது முடிந்து நாம் பட்ட கேவலம் - சந்தி சிரித்தது எல்லாம் பழைய கதை. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதன் அவசியம் என்ன? காரணம் ரிக் பிர்ச்.காமன் வெல்த்தின் ஓப்பனிங் செரிமனி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.(www.youtube.com/watch?v=jZOhfEJc2e8 )மிக அருமையான லேசர் ஷோ, வாண வேடிக்கைகள். இதனை வடிவமைத்து செயல்படுத்தியவர்தான் ரிக் பிர்ச். இவர் 6 ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் செய்தவர். இவ்வளவு அனுபவம் வாய்ந்த இவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிபிசி ரேடியோ சமீபத்தில் ஒரு கேள்வியை எழுப்பியது...

Tuesday, April 3, 2012

பிஹெச்டி மாணவர்கள் தீஸிஸ் எப்படி எழுதுகிறார்கள்

இன்றைய செய்திகளில் ஒன்று இது - ஹங்கேரிய பிரதமர் பால் ஸ்மித் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். காரணம் இவர் தனது பிஹெச்டி தீஸிஸைக் காப்பியடித்து எழுதி சப்மிட் செய்துள்ளார். இதனால் இவரது டாக்டர் பட்டத்தையும் பல்கலைக்கழகம் பறித்துக்கொண்டது. இதை கேள்விப்படும்போது நம் நாட்டு பிஹெச்டியின் தரத்தைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.பிஹெச்டி செய்வதற்கு PG டிகிரி முடித்திருக்கவேண்டும். M.Phil முடித்திருந்தால் பிஹெச்டி 2 வருடத்தில் முடித்துவிடலாம். இல்லாவிட்டால் 3 வருடம். நம் ஆராய்ச்சி மாணவர்களின் தரம் எந்த அளவில் இருக்கிறது? ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பல்வேறு ஸ்காலர்ஷிப்புகள் availableஆக இருக்கின்றன. JRF க்ளியர் செய்பவர்களுக்கு மாதம் ரூ.14000 scholarship. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.14000 ராஜீவ்காந்தி fellowship, இவை தவிர தனிப்பட்ட மனிதர்கள் வழங்கும் endowment scholarship அனைத்தும்...

Saturday, March 31, 2012

அபிராமி மெகா மால் - ஒரு ரெவ்யூ

குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை விட்டாயிற்று. எங்கயாவது கூட்டிட்டுப் போங்க என்ற பிள்ளைகளின் நச்சு ஆரம்பித்திருக்கும். சென்னையில் சின்ன பிள்ளைகளுக்கு ஏற்ற இடம் என்று பார்த்தால் - பீச், ஜூ, கிண்டி ஸ்நேக் பார்க் - இவை தான் (வேறு ஏதாவது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் நண்பர்களே). இப்போது அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்திருப்பது அபிராமி மெகாமால். எப்படியிருக்கிறது இது? கொடுக்கப்படும் விளம்பரம் வொர்த்தி தானா? பார்ப்போம்.பிள்ளைகளுக்கு ஒரு 3டி ஷோ இருக்கிறது. அதற்கு நுழைவு கட்டணம் ரூ.120. ஷோ 20 நிமிடங்கள் நடக்கிறது. ரூ.120 கட்டணம் வொர்த்தி என்று தான் நினைக்கிறேன்.ஷோவைப் பிள்ளைகள் மிகவும் ரசித்தனர்.மேஜர் அட்ராக்ஷனாக அவர்கள் பிரமோட் செய்வது ஸ்நோவேர்ல்ட். நாங்கள் போன நேரம் ரெனவேஷனுக்காக அது பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இவர்களின் விளம்பரங்களில் இல்லை. பிள்ளைகள் மிகுந்த...

Monday, March 19, 2012

பேஸ்புக் பின்விளைவுகள்

பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளத்தில் இன்றைய தேதிக்கு நமக்குத் தெரிந்த 4 பேரில் கட்டாயம் 3 பேர் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். அதை ரெகுலராக அப்டேட்டும் செய்கிறார்கள். ஒரு அமெரிக்கத் தன்னார்வ நிறுவனம் சமீபத்தில் நடத்திய சர்வேயின்படி (நன்றி-டைம்ஸ் ஆப் இண்டியா), ஒரு வாரத்தில் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக பேஸ்புக்கில் இருப்பவர்கள், தங்களை விட தங்கள் நண்பர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக இருப்பதாகக் கருதுகிறார்களாம். மேலும் மற்ற அனைவரும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்களாம். இந்த சர்வே முடிவுகளுக்கு நாம் அமெரிக்கா வரை போகத்தேவையில்லை. நாமே சில நேரங்களில் இப்படியொரு நினைப்பிற்கு ஆட்பட்டிருப்போம். கணவரின் தோளில் தலை சாய்த்தபடி சிரிக்கும் தோழியின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, தவிர்க்க முடியாமல் அன்று நம் வீட்டில் நடந்த அல்ப காரணத்துக்காக நடந்த சண்டை நினைவில்...

Saturday, March 10, 2012

சூர்யா தோல்வி

பெரிய திரை சூப்பர் ஸ்டார்கள் சின்னத்திரையிலும் தலைகாட்டுவது அனைத்து இந்திய மொழித்தொலைக்காட்சிகளிலும் நடக்கும் ஒரு நிகழ்வு. அமிதாப், ஷாருக், சல்மான் முதல் நம் சரத், சூர்யா வரையில் கேம் ஷோக்களில் தலை காட்டிவிட்டனர். இதில் பாலிவுட் நடிகர்களில்அமிதாப், ஷோவை சூப்பர் ஹிட்டாக்கினார். சல்மான் நடத்தும் போதும் டிஆர்பி ரேட்டிங் நன்றாகவே இருந்ததாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆனால் ஷாருக்கால் டிஆர்பியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.விஜய் டிவியின் கேம் ஷோவைப் பார்க்கும்போது மிகுந்த அலுப்புத் தட்டுகிறது. டிஆர்பி ரேட்டிங்கும் சரியில்லையாம். ஒரு கேம் ஷோவை சுவாரசியமாக்குவது அதில் கேட்கப்படும் கேள்விகள், ஷோவை நடத்தும் ஹோஸ்ட், பார்வையாளர்களுக்கு ஷோவில் இருக்கும் பங்கு. இவற்றில் அனைத்திலுமே இந்த ஷோ பெயிலியர்தான். முதலில் இதில் கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம் - ராமனின் தாயார் யார்? - பதிலுக்கான சாய்ஸ்களில் ஒன்று...

Monday, March 5, 2012

நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது

என் இனிய வாசக நண்பர்களே நமது பிளாகிற்கு லீப்ஸ்டர் விருது வழங்கியிருக்கிறார் நண்பர் கவிப்ரியன். இந்த பிளாகிற்குக் கிடைத்துள்ள இவ்விருது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. எந்தவொரு வேலைக்கும் கிடைக்கும் அங்கீகாரமே அந்த வேலையைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.. இந்த விருது 200க்கும் குறைவான பின்தொடர்பவர்களை உடைய புதிய தளங்களுக்கு அளிக்கப்படுகிறது. என்னுடைய தளத்தையும் வாசித்து அதற்கும் அங்கீகாரம் அளித்த நண்பர் கவிப்ரியனுக்கு நன்றி.இதற்கு பின் நான் ஏதாவது 5 வலைப்பூக்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். ஒன்று எனக்கு இதை அளித்த கவிப்ரியன் அவர்களின் வலைப்பூவிற்கு. மற்றவை மற்ற வலைப்பூக்களை மேய்ந்து பார்த்தபின் ;). வாசித்து ஊக்கப்படுத்தும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்...

Thursday, March 1, 2012

நடிகர் ஜீவா செய்வதை உங்களால் செய்ய முடியுமா?

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், குறிப்பிடக்கூடிய சில நல்ல படங்களில் நடித்தவருமான நடிகர் ஜீவா, விஜய் டி.வி நண்பன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சொன்ன ஒரு விஷயம் இது - எனக்கு தற்சமயம் நடிக்கப் பிடித்திருக்கிறது. அதனால் நடிக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டுமென்பது என் விருப்பம். இன்னும் சில வருடங்களில் நடிப்பது எனக்கு பிடிக்காமல் போகுமேயானால் நடிப்பை விட்டுவிட்டு எனக்குப் அந்நேரம் பிடித்த தொழிலைச் செய்ய கிளம்பிவிடுவேன்.இவரது இந்த கருத்து மேம்போக்காக பார்க்கும்போது சாதாரணமாயிருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் ஜீவா கொடுத்து வைத்தவர் என்றே தோன்றுகிறது. பிடித்த தொழிலைச் செய்வது என்பது பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஐ.டி துறையிலிருந்து கொண்டு கல்லூரி ஆசிரியராக இருப்பதைப் பற்றி கனவு காண்பவரையும் (சம்பளம் ஒரு தடை - மேலும் பிழைக்கத்தெரியாதவன், திறமையில்லாதவன் என்று பல பெயர்கள் கிடைக்கும்),...

Wednesday, February 15, 2012

டீன் ஏஜ் ப்ரக்னன்ஸியைத் தவிர்க்க இங்கிலாந்து அரசின் திட்டம் - கொதிக்கும் பெற்றோர்

உலக அளவில் டீன் ஏஜ் கருத்தரித்தல் அதிகமாக இருப்பது ஐரோப்பாவில். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் என்கிறது சர்வே. இதைக்குறைப்பதற்காக சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம் பெற்றோரின் கடும் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. இங்கிலாந்து சவுத்தாம்ப்ட்டன் பகுதியில் சுமார் 9 பள்ளிகளைச் சேர்ந்த 13வயதான பெண்குழந்தைகளுக்கு கருத்தடை சாதனத்தைப் பொருத்தியுள்ளது அரசு.பெற்றோரிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை. தற்செயலாக வெளியே வந்துள்ள அவ்விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீன் ஏஜ் கருத்தரித்தலைக் குறைப்பதற்கு நிச்சயம் இதுவல்ல வழி. முறையான உடலியல் அறிவும், பாலியல் விழிப்புணர்வுமே சரியான வழியாகும். பெற்றோருக்கே தெரியாமல் ஒரு 13 வயது குழந்தைக்கு கருத்தடை சாதனம் பொருத்துவது குழந்தைகளுக்கு எதிரான குரூரமான...

Saturday, January 28, 2012

சிம்புவின் எக்ஸ்ட்ரா க்ளாஸஸ்

என் பையனைப் பொறுத்தவரைக்கும் ஸ்கூலிலிருந்து வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு,ஸ்கூல் வொர்க் பண்ண,ஸ்டடி பண்ண ஒரு ட்யூஷன், தமிழுக்கு ஒரு டியூஷன் - இப்படி 3 ட்யூஷன் போறான். கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு, ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்பு, தலைகீழா நடப்பான், சம்மர்ஸால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். சனி ஞாயிறில் சினிமா பைட்டிங் கத்துக்கறான். கம்புச்சண்டை, மான் கொம்புச்சண்டை, குத்துச்சண்டை அதுக்கான மாஸ்டர் வச்சு கத்து தர்றேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு. ----- 1990ல் குமுதத்தில் டி.ராஜேந்தரின் பேட்டி. இந்த அளவுக்கு ஒரு பிள்ளையை வதைக்க வேண்டுமா? இவர் நார்வேயில் இருந்திருந்தால் சிம்புவை அரசுதான் வளர்த்திருக்கும். சமீபத்தில் நார்வேயிலிருக்கும் ஒரு இந்தியத்தம்பதியின் குழந்தைகளை அவர்கள் சரியாக வளர்க்கவில்லை என்று சொல்லி (3 வயது பையன் இன்னும் அப்பாவோடு தூங்குகிறான், கையால்...

Friday, January 20, 2012

ஈஸ்ட்மேன் கோடக் நிறுவனம் திவாலாகும் நிலையில்

கோடக் நிறுவனம் ஜார்ஜ் ஈஸ்ட்மேனால் 1880ம் வருடம் நிறுவப்பட்டது. கைக்கேமரா, புகைப்பட நெகட்டிவ், தற்சமயம் முழுக்க முழுக்கப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் காமெரா அனைத்தும் இவர்களின் கண்டுபிடிப்பே. 1100க்கும் அதிகமான பேடன்ட்டுகளையும் இவர்கள் வைத்துள்ளனர். புகைப்படத்துறையிலும், திரைப்படத்துறையிலும் கோலோச்சியவர்கள் இவர்கள். எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களை ஈஸ்ட்மேன் கலரில் என்று விளம்பரம் செய்த காலம் ஒன்றுண்டு. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்தபோது தன்னுடன் ஒரு கோடக் காமெராவைத்தான் எடுத்துச்சென்றார். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 64000 தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்த நிறுவனம் இன்று 17000 தொழிலாளர்களுடன் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதன் சந்தை மதிப்பும் சரிந்துவிட்டது. இதன் வீழ்ச்சிக்குக் காரணமாக சொல்லப்படுவது, லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு விரைவாக அடாப்ட் ஆகாததேயாகும். உதாரணமாக இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட டிஜிட்டல்...

Thursday, January 19, 2012

சீரக சம்பாவும் கோதுமையும் போதுமா? மல்லியும் ரோஜாவும் வேண்டாமா?

ஒரு கேள்வி கேட்கும் ட்ரெண்ட் இருக்கிறது. வாழ்க்கையின் சகல அங்கத்திலும் இது பரவியுள்ளது. சாப்பிடுவது, பார்ப்பது, கேட்பது, படிப்பது, எதையாவது கற்றுக்கொள்வது என்று அனைத்திலும். அது என்னவென்றால் - இதால் என்ன யூஸ் என்ற கேள்வி. தொடர்ந்து blog எழுதுகிறாயே - இதால் என்ன யூஸ்? அந்த நேரத்தில் இதை செய்யலாமே, அதை செய்யலாமே. பிள்ளைகள் பாடப்புத்தகம் தவிர மற்றதைப் படிப்பதால் என்ன யூஸ் - அதற்கு ஒலிம்பியாட்டுக்கு கோச் பண்ணலாமில்லையா? ப்ரண்டுடன் பேசிக்கொண்டிருந்தாயா - சரி, என்ன புதிதாக கற்றுக்கொண்டாய்? ப்ரெஞ்ச் படிக்க ஆசைப்படுகிறாயா - ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா அதிலிருந்து?நாம் செய்யும் அனைத்துமே வயிற்றுப்பாட்டையும், சர்வைவல் திறனையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமென்றால் கலையும், அழகும், இசையும் எதற்கு? வெறும் நெல்லை மட்டும் பயிரிட்டால் போதுமா? இவ்வுலகை அழகாக்க, மனதை மணமுள்ளதாக்க மல்லி வேண்டாமா? எதைச்...

Wednesday, January 18, 2012

தனுஷின் ஹைப்பர்கேமி பிரச்சனைகள்

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தனுஷ் ஆகியோர் ரஜினியின் புகழைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய முற்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதில் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவை சொல்வது சரிதான். ரஜினியின் மகள் என்ற பேனர் இல்லாமல், ஐஸ்வர்யாவால் டைரக்ஷன் சான்ஸ் வாங்கமுடியுமா? அல்லது சவுந்தர்யாவால்தான் இந்த அனிமேஷன் வாய்ப்புகளைப் பெற முடியுமா?ஆனால் தனுஷின் நிலையே வேறு. அவர் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்வதற்கு முன்பே 3 ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டார். நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கும் திறமையான நடிகர். இவற்றுக்கும் இவர் ரஜினியின் மருமகன் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் அவர் இல்லை. இருப்பினும் அவர் ரஜினியின் மருமகனாக பார்க்கப்படுவதான உணர்வு அவருக்கு எப்போதும் இருக்கிறது. (சினிமாவில்...

Tuesday, January 17, 2012

எப்போதும் சந்தோஷமாயிருக்க எளிய வழிகள்

கற்கால மனிதர்களின் வாழ்வியல் சூழல் - எப்போதும் ஆபத்து நேரலாம். அதனால் எந்நேரமும் தயாராயிருக்க வேண்டும் - என்ற மனநிலையிலேயே அவர்களை வைத்திருந்தது. இயற்கைச் சீற்றங்களால், வனவிலங்குகளால், நோய்களால், உணவு பற்றாக்குறையால் என்று அவர்கள் எப்போதும் மனதளவில் பிரச்சனைகளை எதிர்நோக்க தயாராயிருக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர். இப்போது வாழ்வியல் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் உடல் மாற்றம் அடைந்திருக்கிறது - மனம்? நிச்சயமாக இல்லை. எல்லாம் நிறைவாக இருக்கும் வேளையிலும் மனம் ஏதோவொரு முகம் தெரியா ஆபத்தைப் பற்றிய கற்பனை பயத்தில், கவலையில் உழல்கிறது. மனம் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டெரியும் சூழ்நிலையிலும், கவலை மேகங்கள் அதைச் சூழ ஒரு நொடி போதும். மனதை அடக்கி அதனை எப்போதும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்ய எளிய வழிகள் இவை - 1. ஒப்பிடாதீர்கள் - பேஸ்புக் ஸ்டேட்டஸில் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திலிருந்து,...

Friday, January 13, 2012

சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹிட்டன் காஸ்ட்டுக்கு பில்டர்களின் புது டெக்னிக்ஸ்

சென்னையின் ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். சென்னை இப்போது க்ரேட்டர் சென்னையாக மாறியதால் புறநகர்களில் நிறையப் பகுதிகள் சிட்டி லிமிட்ஸுக்குள் வந்து விட்டன. அதனால் தென்சென்னை பகுதியில் புழுதிவாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் போன்ற ஏரியாக்களில் அப்பார்ட்மெண்ட்டுகளின் விலை எகிறிவிட்டது. 20,25 வருடங்களுக்கு முன் அங்கே நிலம் 1 கிரவுண்டு ரூ.10000-20000 என்று வாங்கிப்போட்டவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்கள். இப்படிப்பட்ட நில உரிமையாளர்களும் இன்று திடீர் பில்டர்களாக அவதாரம் எடுத்து அப்பார்ட்மெண்ட் கட்டி விற்க துவங்கிவிட்டார்கள்.வீடு வாங்குபவர்கள் ப்ரொபஷனல் பில்டர்களிடம் வாங்காமல் இப்படிப்பட்ட திடீர் பில்டர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்றால் தொலைந்தோம். சில ப்ரொபஷனல் பில்டர்களிடமும் ட்ராபேக்ஸ் இருக்கலாம். ஆனால் இது என் மற்றும் என் நண்பர்களின் சொந்த அனுபவம்....

Monday, January 9, 2012

ஒரு நற்செய்தி - புத்தகக்கண்காட்சியில் பூந்தளிர் அமர்சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது

35ம் புத்தகக்கண்காட்சி சென்னையில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மிக மகிழ்ச்சியைத் தந்த விஷயம் - கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் அமர் சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது. அந்தப்புத்தகங்களின் அட்டையைப் பார்க்கும்போது, நாம் படித்த கல்லூரிக்கு செல்லும் போது , ஆத்மார்த்தமான நண்பனை நீண்ட நாட்கள் கழித்துப்பார்க்கும்போது, நம்முடைய ஆதர்ச எழுத்தாளரை நேரில் சந்திக்கும்போது ஆகிய தருணங்களில் எல்லாம் ஏற்படும் நெகிழ்வு ஏற்பட்டது. என்ன தான் ஆங்கில அமர் சித்திரக்கதையைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து, விநாயகரை கணேஷா என்றும், இராவணனை ராவணா என்று பிள்ளைகள் படிப்பதைப் பார்த்தாலும் பிள்ளைகள் நம் புராணங்களை நம் தாய்மொழியில் படிப்பதையே நான் விரும்புகிறேன். கும்பகர்ணனின் கதையைப் படித்து குழந்தைகள் சிரித்து சிரித்து குதூகலிக்கும்போது ஆங்கிலத்தில் இதையே அவர்கள் படித்திருந்தால்...

Thursday, January 5, 2012

இஞ்சிக்கு பேட்டன்ட் - இங்கிலாந்து கம்பெனி வாங்கிய பல்பு

இங்கிலாந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜான் லார்கின்ஸ் என்ற கம்பெனி நுரையீரல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கான ட்ரீட்மெண்ட்டில் இஞ்சியின் பயன்பாட்டைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், அது தங்களுடைய அரிய கண்டுபிடிப்பு என்பதால் அதற்கு பேட்டன்ட் வழங்க வேண்டும் என்றும் யு.கே. பேட்டன்ட் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது.இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக இருமலுக்காகவும், ஜலதோஷத்துக்காகவும் நாம் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் நமக்கு இருமல் இருந்தால் சின்ன வயசில் அம்மாவின் இஞ்சிக் கஷாயம், கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் டீன் ஏஜ் ஸ்டேஜில் கஷாயம்லாம் குடிக்க முடியாது என்று சொல்லும் பருவத்தில் சரி இஞ்சி டீயாவது குடி என்பார்கள் தாய்மார்கள். அப்புறம் இஞ்சி மொரப்பா என்று ஒரு இஞ்சி மிட்டாய், மும்பையில் அட்ரக் சாய் என்ற பெயரில் இஞ்சி டீ- சளித்தொல்லைக்காக இவற்றையெல்லாம் காலங்காலமாக நாம் சாப்பிட்டு...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes