Tuesday, October 23, 2012

முக்தா சீனிவாசனை முறைத்துக்கொள்ளும் கமல்

கமலுக்கு லீகல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் முக்தா சீனிவாசன். பழம்பெரும் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் 1947ம் ஆண்டு முதல் தமிழ்த்திரையுலகிலிருக்கிறார். இவர் இயக்கிய முதலாளி திரைப்படத்திற்காக ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய விருது பெற்றவர். திரையுலகின் ஜாம்பவான்களான டி.ஆர்.மகாலிங்கம், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், பாலச்சந்தர், மு.கருணாநிதி போன்ற பலரோடும் பணிபுரிந்திருக்கிறார். கமலின் நாயகன் உட்பட சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், அந்தமான் காதலி முதலிய ஏராளமான படங்களின் தயாரிப்பாளர். இவ்வளவு அனுபவம் மிக்க தயாரிப்பாளர், இயக்குனரைத்தான் வம்புக்கிழுத்திருக்கிறார் கமலஹாசன்.
            நாயகன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருப்பதை ஒட்டி ஹிண்டு நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் கமல். அதில் நாயகன் படத்தயாரிப்பாளரைப் பற்றி எக்கச்சக்க குறைகள் சொல்லியிருக்கிறார். பம்பாயில் படமெடுக்க தயாரிப்பாளர் தயாராக இல்லை, அவர் சினிமாவை வியாபாரமாக ட்ரீட் செய்தார், கலை வடிவமாகப்பார்க்கவில்லை - இது கட்டுரையின் சாராம்சம்.  
                     சரி, கமல் தயாரிப்பாளராக இருந்த படங்களின் லிஸ்ட் கீழே உள்ளது - அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, விருமாண்டி, விக்ரம். மேற்சொன்ன படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் மெகாஹிட்.  இவரது கலை மற்றும் டெக்னாலஜி தாக சோதனை முயற்சிகள் - பேசும் படம், ஆளவந்தான், தசாவதாரம் ........ இதில் ஏதாவது ஒன்று அவருடைய தயாரிப்பா? ஆளவந்தான் தந்த அடியிலிருந்து இன்னும் கலைப்புலி தாணு மீண்டதாகத் தெரியவில்லை. இதே கமல் அவரது தயாரிப்பில் செய்த சோதனை முயற்சி - குணா, உன்னைப்போல் ஒருவன், மும்பை எக்ஸ்பிரஸ் ... இந்தப்படங்களுக்கு மிஞ்சி மிஞ்சிப்போனால் என்ன செலவாயிருக்கும்?? தான் தயாரிப்பாளராயிருக்கும் போது ஒரு பட்ஜட், மற்றவர் தயாரிப்பாளராயிருக்கும்போது வேறொரு பட்ஜட். இதுவே கமலின் நிலைப்பாடு. அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் ஒரு பழம்பெரும் 82 வயது இயக்குனர், தயாரிப்பாளரை இவர் அவமானப்படுத்துகிறார்?
எல்லோரும் பணம் சம்பாதிக்கத்தான் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுகின்றனர். கமலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரெல்லாம் உங்களை வைத்துப் படமெடுத்ததால்தான் இன்று நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள் ஐயா. பழசை மறக்க வேண்டாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆரம்பம் ஆச்சா..?

/// அவரெல்லாம் உங்களை வைத்துப் படமெடுத்ததால்தான் இன்று நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள் ஐயா. பழசை மறக்க வேண்டாம். ///

தகவலுக்கு நன்றி...

பிரேமா said...

மாலா ,

நாம் வெளியில் இருந்து கொண்டு இது தான் சரி இது தான் தவறு.... என்று விமர்சிப்பது சரியல்ல என்று தோன்றுகிறது..
முக்தாவுக்கும் கமல்லுக்கும் என்ன உட்கட்சி பூசல் இருந்ததோ நமக்கு எப்படி தெரியும்...

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes