ஒன் மூவி வொண்டர், flash in a pan என்றெல்லாம் சொல்வார்களல்லவா - அதைப்போன்று தங்கள் திறமையால் நடிப்பு, இயக்கம், இசைத்துறைகளில் இரண்டு, மூன்று படங்களில் நம்மைத் திரும்பிப்பார்க்க வைத்த பிரபலங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நம்மை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். சிலர் திரையுலகிலிருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களில் சிலரைப்பற்றி ஒரு ரவுண்ட் வருவோம்.
முதலில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா
வாசுதேவநல்லூரில் பிறந்து தன் 31வது வயதில் 1999ம் ஆண்டு வாலி படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்த படம் குஷி. வாலி படத்தில் கூட சாலிடான கதை இருந்தது. ஆனால் குஷி படத்தின் துவக்கத்திலேயே இவங்க 2 பேரும் தாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று சொல்லிவிட்டார். எனவே எந்த விதமான திருப்பங்களுக்கும், சஸ்பென்ஸ்களுக்கும் இடமில்லை. திரைக்கதைதான் பேசியாக வேண்டும். இந்நிலையில் மாலை கோர்ப்பது போல் திரைக்கதையைக் கோர்த்து என்ன ஒரு அருமையான வெற்றிப்படத்தைக் கொடுத்தார். திரைக்கதையில் பாக்யராஜுக்கு அடுத்து ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மிகப்பாஸிட்டிவான ரெவ்யூக்கள். நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துவதோ, எழுதுவதோ கஷ்டமில்லை. ஆனால் மனவுணர்வுகளைக் காட்சிப்படுத்துவதும், வார்த்தைகளாக்குவதும் மிகக் கடினம். அதை சர்வசாதாரணமாக குஷியில் செய்து காட்டினார். இப்படி இவர் இயக்குனராகவே தொடர்ந்திருக்கலாம். கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று இவர் எடுத்த முடிவு தவறு என்றே நினைக்கிறேன்.
இருப்பினும் இவர் ஹீரோவாக நடித்த நியூ படம் முதல் நாள் 1 கோடி ரூபாய் வசூலித்ததாம். இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் சாதனை. அதிலிருந்து துவங்கியது இவருடைய வீழ்ச்சி. இவருடைய டயலாக் டெலிவரி தவிர்க்க முடியாமல் நகைச்சுவை நடிகர் பாண்டுவை நினைவுறுத்துகிறது. கதாநாயகனுக்குரிய பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி இவரிடம் இல்லை.
தன்னை இயக்குனராகவே அடையாளப்படுத்திக்கொண்டு அந்தப்பாதையிலேயே இவர் தொடர்ந்திருக்கலாம். பரவாயில்லை. இட்ஸ் நாட் டூ லேட். வாலி, குஷி போன்ற மிக அருமையான கதை, திரைக்கதை உடைய படங்களை இவர் தருவார் என்று நம்புவோம்.
இன்னும் சில பிரபலங்கள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில்..........
3 comments:
எஸ்.ஜே.சூர்யா - நிறை குறைகள் - நல்ல அலசல்...
தொடர்கிறேன்...
@ Dindigul Dhanapalan - Thank u Dhanapalan fr taking time to read n comment
இயக்குனராகவே தன் பயணத்தை தொடருவார் S .J .சூர்யா என நம்புவோம்.
Post a Comment