Wednesday, June 20, 2012

பஸ்ஸில் பயணம் செய்து பல்பு வாங்கிய தேனி எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியின் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=489928. பஸ்ஸில் பயங்கர கூட்டம் போலும் - உட்கார இடம் கிடைக்கவில்லை. கண்டக்டரிடம் - நான் எம்எல்ஏங்க என்று சொல்லியிருக்கிறார். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. அவர்  பாட்டுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்து விட்டார். எம்எல்ஏ நொந்து போய் போக்குவரத்துக் கழகத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது இன்றைய செய்தி.
இச்செய்திக்கு இரண்டு விதமான ரெஸ்பான்ஸ்கள் வந்திருக்கின்றன.
  •  முதல் டைப் ; எம்எல்ஏக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடிதான் பயணம் செய்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சீட் பிடித்துக் கொடுப்பதா கண்டக்டரின் வேலை?
  • இரண்டாவது டைப் (இது என் கருத்து) ; இதே எம்எல்ஏ கொத்துக் கொத்தாக செயின் போட்டுக்கொண்டு ஸ்கார்ப்பியோவில் பத்து, பதினைந்து ஆட்களோடு வந்து பஸ்ஸை அரை மணிநேரம் நிறுத்திப்போட்டிருந்தால், கண்டக்டரும், பயணிகளும் பயந்து நடுங்கியிருப்பார்கள். ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஜனநாயக நாட்டில் சிறிய அளவில் மரியாதை தெரிவிப்பதில் ஒன்றும் தவறில்லை. 
எளிமையாக இருப்பவர்களைக் கேவலப்படுத்துவதும், தாம்தூமென்று குதிப்பவர்கள் முன் மிகப்பணிந்து செல்வதும் நம் இந்திய மனோபாவம். மாணவர்களோடு இறங்கிப் பழகும் ஆசிரியரை மாணவர்கள் மதிப்பதில்லை. சொந்தக்காரர்களில் நன்றாகப் பழகுபவரை யாரும் மதிப்பதில்லை. நன்றாகப் பழகினால் - இவனை/ளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் - என்றே நினைக்கிறார்கள். நம் இடத்தை விட்டு கீழே இறங்காமல் மெயின்டெயின் செய்துகொண்டு, நான் பணக்காரன்/ரி, படித்தவன்/ள், நல்ல நிலையில் இருக்கிறவன்/ள், பதவியில் இருக்கிறவன்/ள் என்று ஒவ்வொரு நிமிடமும் பறை சாற்றினால்தான் பிறரின் அவமதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். எளிமை கிளிமை எல்லாம் unaffordable ஆகி கொஞ்ச நாளாகிவிட்டது. கவிஞர் கண்ணதாசன் பாடலில்( பரமசிவன் கழுத்திலிருந்து) வருவது போல எல்லாம் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே என்பதுதான் சரி. 
மிஸ்டர் பெரியகுளம் எம்எல்ஏ உடனே போய் தொகுதி நிதியிலிருந்து ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்குங்கள்.

4 comments:

முனுசாமி said...

//ஒவ்வொரு நிமிடமும் பறை சாற்றினால்தான் பிறரின் அவமதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்//-You are right but //மிஸ்டர் பெரியகுளம் எம்எல்ஏ உடனே போய் தொகுதி நிதியிலிருந்து ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்குங்கள்// not so correct

மாலா வாசுதேவன் said...

Thank u for your comments Munusamy. I said so on a funny note :)

Anonymous said...

அவர் எம் எல் ஏ வென்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறார் என்றால் .......தொகுதிப்பக்கம் என்றாவது சென்றிருந்தால் தானே......அடையாளம் தெரிந்தால் தானே..மக்களுக்கு நல்லது செய்திருந்தால் மக்களே எழுந்து இடம் கொடுத்திருப்பார்கள்

மாலா வாசுதேவன் said...

@ anonymous- This is a valid point.but still this MLA has tried to do something which no other MLA has done anywhere in TN in the last 10 - 15 years. atleast dat can be recognised n appreciated.
but definitely i agree vth u. irukkura nilamaila ivaru paravaillai. avlo thaan.
Thank u fr taking time to read n write a comment.

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes