நிச்சயம் பின்னாடி வரும் எல்லா வசனத்தையும் உங்க அம்மா, உங்க வீட்ல ஒரு தடவயாவது பேசியிருப்பாங்க. நீங்களே ஒரு அம்மான்னா - நீங்களும் நிச்சயமா இது எல்லாத்தயும் பேசியிருப்பீங்க ;)
- பல் தேச்சுட்டியா?
- இன்னுமா தேய்க்கல
- புக் ஏன் கீழ கிடக்கு - தூக்கி ஷெல்புல வை
- யார் எடுத்தான்னு நான் கேக்கல. தூக்கி வைன்னு தான் சொன்னேன்
- இந்த டிரஸ்ஸ போட்டுக்கிட்டு வெளில வரக்கூடாது. டிரஸ்ஸ மாத்து
- ஆர்க்யூ பண்ணாத
- பின்னாடி தள்ளி வா. இவ்வளவு பக்கத்துல உக்காந்து பாக்கக்கூடாது
- அவன அடிக்காத
- ஏதாவது சொல்லணும்னா பக்கதுல வந்து சொல்லு. கத்தாத
- போதும். இப்ப தான ஒரு பெரிய bowl fullஆ சாப்பிட்ட
- சீக்கிரம் கிளம்பு. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்
- பாத்ரூம் போய்ட்டு வந்துட்டியா?
- கட்டாயம் பாத்ரூம் போய்ட்டுதான் கெளம்பணும்
- பரவால்ல. try பண்ணு. வரும்
- அர்ஜன்ட்டா வருதா
- கொஞ்ச நேரம் கன்ட்ரோல் பண்ணிக்க முடியுமா?
- ஒரு பீஸ் சாப்ட்டு பாரு. பிடிச்சா சாப்பிடு. இல்லன்னா வச்சிரு
- ஹலோ, அவன் வீட்ல இல்லயே. நீங்க? (நம்ம அங்க தான் உக்காந்து பாத்துக்கிட்டு இருப்போம்)
- இப்பவே ஸ்விட்ச் off பண்ணு - இப்பவே
- ஏன்னா நான் அம்மா. அம்மா சொன்னா கேக்கணும்
பின்குறிப்பு
இந்த article, Chicken soup for the soul புத்தகத்தின் ஒரு ஆர்ட்டிக்கலின் தழுவல். எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதன் பாதிப்பில் இந்தப் பதிவை எழுதினேன்.
2 comments:
அன்பு கலந்த/ஒளிந்த வார்த்தைகள் ............ அப்பாக்களை பற்றியும் எழுதியிருக்கலாம் ...........நன்று/றி
அம்மா வா PADMA MALA எப்படி? ARE YOU ONE OF THE TYPICAL அம்மா?
Post a Comment