ஒவ்வொரு கிரகங்களும் பெயர்ச்சி ஆகும்போது, சனிப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள், ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்துத் தள்ளுவது தமிழர்களின் ஒரு பொதுவான குணம். ஏதாவது ஒன்று நடந்து நமக்கு நல்லகாலம் பிறந்துவிடாதா என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. நாலாப்பக்கமும் வாழ்க்கை நசுக்கும்போது வெளியேற வழிதேடுவது மனித இயல்பு.
இதைத்தான் நம் பகுத்தறிவு சிங்கம் கருணாநிதியும் செய்திருக்கிறார். குருபகவான் அருள் பெறுவதற்காக மஞ்சள் துண்டு அணிந்தவர், தற்போது கறுப்புக்கு மாறியிருக்கிறார். காரணம், இவர் ரிஷப ராசிக்காரர். ரிஷப ராசிக்கு இப்போது ஆறாமிடத்தில் இருக்கிறார் சனிபகவான். ஜோதிட ரீதியில் இது ஒரு நல்ல அமைப்பாம். கறுப்புச்சட்டை அணிந்தால் ரொம்ப விசேஷமாம்.ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? அதனால் ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு கறுப்புச்சட்டை.
இது தெரியாமல் தொண்டர் படையும் கறுப்புச்சட்டை அணிந்து கொண்டு ஆயிரம் விளக்குப்பகுதி தொடங்கி எல்லா இடத்திலும் சுற்றிக்கொண்டிருக்கிறது. தொண்டர்களே நீங்கள் என்ன செய்தாலும் தலைவர்தான் நல்லாயிருப்பார். அதனால் வடிவேலு சொன்னது போல் - கப்பித்தனமா பேசாம புள்ளக்குட்டிய படிக்க வைங்க.
2 comments:
கருப்புச்சட்டை போடுவதற்குக்கூட textile industries பெருமக்களிடம் DEAL கூட நடந்திருக்கும். ஏன் எனில் நம்முடைய தானை தலைவர் இருமினால் கூட அந்த காற்றைக்கொண்டு மின்சாரம் (தன வீட்டிற்க்கு மட்டும் ) தயாரிக்கும் வல்லமை பெற்றவர். நீ எழுதிய ராசிக்கு ஆறாம் இடம் பற்றி சொன்னவுடன் எனது நண்பர் அடுத்த நாள் கருப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்து வர ஆரம்பித்துள்ளார் ( ஏன் எனில் அவரும் ரிஷப ராசிக்காரராம் )
/நீ எழுதிய ராசிக்கு ஆறாம் இடம் பற்றி சொன்னவுடன் எனது நண்பர் அடுத்த நாள் கருப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்து வர ஆரம்பித்துள்ளார் ( ஏன் எனில் அவரும் ரிஷப ராசிக்காரராம் )/ - ha ha ha :) vidunga sir avarukku yenna prachanayo paavam (oru vela unga kuda vela pakkuratha irukkumo!!!!!@@@ he he he
Post a Comment