சமீபத்தில் மணிரத்னத்தின் பல்வேறு பேட்டிகள் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டியில் தான் இயக்கியதில் தனக்குப் பிடிக்காத படம் இதயக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத்தம்பி டென்ஷனாகிவிட்டார். முதல் படம் தோல்வியடைந்த ஒரு புது இயக்குனருக்கு, அடுத்த படம் வாய்ப்புக் கொடுக்க எந்த தயாரிப்பாளர் முன்வருவார்? அந்த நிலையில் இருந்த மணிரத்னத்திற்கு அவர் வாய்ப்பு கொடுத்ததே பெரிய விஷயம். Beggars cannot be choosers என்பதை உணர்ந்துதான் மணிரத்னமும் இன்னொருவரின் கதையை இயக்கித்தருவதற்கு ஒப்புக்கொண்டிருப்பார். அப்போது அவருக்கு அந்த வாய்ப்பே பெரிய விஷயமாக இருந்திருக்கும். இதே போல்தான் கௌதம் மேனனும். லேப்டாப்பை வைத்துக்கொண்டு கதை சொல்வதற்கே தடுமாறியதாக காக்க காக்க திரைப்படத்தின் தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால் படம் வெற்றியடைந்த பிறகு தயாரிப்பாளரைபற்றி எக்கச்சக்க குறை சொல்லி பேட்டி தருகிறார் கௌதம். தயாரிப்பாளரிடம் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் நன்றி மறப்பது நன்றன்று. விக்ரமுக்கு நீண்ட வருடங்களுக்குப்பின் சேது ஹிட். அதற்கு அடுத்து அவர் நடித்த படம் விண்ணுக்கும் மண்ணுக்கும். கதையை ஓகே செய்து, வாய்ப்பை ஒப்புக்கொண்டு, நடித்து முடித்துப், பின் படம் சரியாக ஓடாத போது இயக்குனரைப் பற்றி அளவில்லாத குறை சொன்னார் விக்ரம். முதலில் ஏன் ஒப்புக்கொண்டீர்கள் Vikram?
நாம் ஒரு புது இடத்தில் வேலைக்குச் சேரும்போதோ, புது ஏரியாவில் குடி போகும்போதோ, அங்கே இருக்கும் மற்றவர்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒருவர் நம்முடன் பழகி நம்மைப் புதிய சூழலுக்கு familiarise பண்ணி விடுவார். முதலில் நமக்கும் அந்த நட்பு மிகத்தேவையாக இருக்கும். பின்னர் நாம் மற்றவருடன் பழகியவுடன் நாமும் அந்த முதல்வரைக் கண்டுகொள்ளமாட்டோம். இது சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அட்லீஸ்ட் பின்னொரு நாளில் அவர்களைப் பற்றி குறை சொல்லாமலாவது இருப்போம்.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
0 comments:
Post a Comment