ரியல் எஸ்டேட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் - லக்சுரி அப்பார்ட்மெண்ட்ஸ். ஓஎம்ஆரில் லொக்கேட்டட்; ஜிம், ஸ்விம்மிங் பூல், க்ளப் ஹவுஸ், ஜாகிங் ஏரியா, டென்னிஸ் கோர்ட், பிள்ளைகளுக்குப் ப்ளே ஏரியா எல்லாம் இருக்கு என்று கேட்கும்பொதே மெய் சிலிர்த்து விடும் நம் மேல் மத்திய தர வர்க்கத்தினருக்கு. நாம் அனுபவிக்காததை நம் பிள்ளைகள் அனுபவிக்கட்டும் என்று தான் நாம் முக்கால்வாசி விஷயங்களை வாங்குகிறோம்.
ஆனால் லக்சுரி அப்பார்ட்மெண்ட்டுகளின் மெயின்டெனென்ஸ் காஸ்ட்டைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறோம். சுமாராக 5200 ரூபாய் வரை ஒரு 1200 ச.அடி ப்ளாட்டுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது ரூ.3.50 ச.அடிக்கு + வாட்டர் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட்டுக்கு ரூ.600 + குடிநீருக்கு ரூ.400. க்ளப்ஹவுஸ் இருந்தால் இதோடு சேர்த்து ரூ.1500. மொத்தம் ரூ.7000.
ரூ.60000 டேக்ஹோம் பே உள்ள ஒருவர் 30 லட்சம் லோன் போட்டு இப்படி ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினால், மாதாமாதம் ரூ.32000 ஈ.எம்.ஐ + ரூ.7000 மெயின்டெனென்ஸ் கொடுத்தால் மிச்சம் ரூ.21000 த்தைக் கொண்டு பிற செலவுகள் அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இவ்வளவு மெயின்டனென்ஸ் காஸ்ட் கொடுப்பது வொர்த் தானா? மிஞ்சி மிஞ்சி போனால் வாரத்தில் 2 நாள் ஸ்விம் பண்ணுவோம் (அதுவும் சந்தேகம்தான்). வாக்கிங்காவது, ஜாகிங்காவது. அப்புறம் - யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆத்துவது? பேசாமல் இந்த ப்ரில்ஸ் இல்லாத நல்ல அப்பார்ட்மெண்ட்டாக வாங்கி, ரூ.2 மெயின்டெனென்ஸ் கொடுத்து சந்தோஷமாக வாழ்வோம்.
8 comments:
correcta sonna padma.
its 100% true!
நல்ல யோசனைகள்... நன்றி...
Thank u Akila for taking time to read n comment
Thank u Dindigul Dhanapalan for ur continuous feedbacks :)
Thank u anonymous fr ur feedback
Rightly said and it is informative.
Thank u Niruba fr sparing ur time to read n comment
Post a Comment