கடந்த 2 நாட்களாகத் தமிழ்நாட்டில் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருப்பது இந்தக் கோயம்புத்தூர் காதல் கொலைகள் தான். 21 வயது இளைஞன் தன் சக மாணவி, அவரது தாயார் இருவரையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வளவு கொடூரமான க்ரைம் ஸீனை நான் பார்த்ததில்லை என்கிறார் வடவள்ளி இன்ஸ்பெக்டர். மற்றொரு சம்பவத்தில் 9ம் வகுப்பு சிறுமியை ஒரு இளைஞன் கொலை செய்துள்ளான். காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இந்தக் கண்மூடித்தனமான கோபம்தான் காதலா?
காதல் பெயரால் நடக்கும் அபத்தங்கள் எத்தனையெத்தனை? திருமணமானவர்களில் கணவனோ, மனைவியோ வாழ்க்கைத்துணையிடம் உன் நல்லதுக்காகத்தானே சொல்கிறேன், நான் உன் மேல் பொஸஸிவாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் - இதுவா காதல்? தளைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும் இடத்தில் காதல் வராது. கட்டற்ற சுதந்திரம்தான் காதல். நம்மை நாமாக இருக்க அனுமதித்து நம்மை அன்பு செய்யும் மனமே காதல் நிறைந்தது. Love possesses not nor would it be possessed - கலீல் கிப்ரன்.
நம் வாழ்க்கைத்துணையிடம் சிறுபிள்ளைத்தனமற்ற மெச்சூர்டான காதலையே கொண்டு அவன்/அவளின் மனதில் நீங்கா இடம் பெறுவோம். கலீல் கிப்ரனின் வரிகள் எப்போதும் போல் இப்போதும் எனக்குத் துணை வருகிறது. திருமணத்தைப்பற்றிய அவரின் கருத்து -
Love one another but make not a bond of love:
Let it rather be a moving sea between the shores of your souls.
Fill each other's cup but drink not from one cup.
Give one another of your bread but eat not from the same loaf.
Let it rather be a moving sea between the shores of your souls.
Fill each other's cup but drink not from one cup.
Give one another of your bread but eat not from the same loaf.
ஒருவரையொருவர் நேசியுங்கள்,
ஆனால் காதலால் ஒரு தளையை உருவாக்காதிருங்கள்.
உங்களின் நேசம் - உங்கள் ஆன்மக்கரைகளுக்குள்
அலைபாயும் கடலாக இருக்கட்டும்.
ஒருவர் கோப்பையை மற்றவர் நிரப்புங்கள்,
ஆனால் ஒரே கோப்பையில் பருகாதிருங்கள்.
ஒருவர் ரொட்டியை மற்றவருக்குக் கொடுங்கள்,
ஆனால் ஒரே ரொட்டியிலிருந்து உண்ணாதிருங்கள்.
நம் துணையின் பெர்சனல் ஸ்பேஸை நாம் கட்டாயம் மதிப்போமாக. உன்னதமான காதலின் பெயராலும், திருமணத்தின் பெயராலும் வாழ்க்கைத்துணையைப் படுத்தாமலிருப்போமாக.
For even as love crowns you so shall he crucify you.
எப்படி காதல் நமக்கு கிரீடம் சூட்டுகிறதோ அதே போல் நம்மைச் சிலுவையிலும் அறையும்.
நாம் கிரீடம் மட்டுமே சூட்டுவோம் - ஆமென்
10 comments:
மனங்கள் தான் சேர வேண்டும்...
welcome n Thank u Dhanapalan for ur comments
ஒத்துக்கொள்ளவில்லைஎன்றால் சாவதும் சாகடிப்பதும் தான் காதலா? நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்!!!!
Thank u fr reading n giving ur opinion vinoth
என் தோழியின் பதிவு இது... இந்த மாதிரியான கொடுரத்தை கண்டு நெஞ்சம் கொதித்த போது இந்த பதிவை படிக்க நேர்ந்தது.. காதல் என்ற பெயரில் இனி ஒரு சிறையும் வேண்டாம் சிலுவையும் வேண்டாம்... அன்பு, நேசம், பாசம் போன்ற உணர்வுகளின் சேர்க்கை தான் காதல், இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுங்கள் காதலர்களே....
எப்படி காதல் நமக்கு கிரீடம் சூட்டுகிறதோ அதே போல் நம்மைச் சிலுவையிலும் அறையும்.
நாம் கிரீடம் மட்டுமே சூட்டுவோம் - ஆமென்
எப்படி இப்படி சிந்திக்க அல்லது எழுத தோன்றுகிறது? நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
@ Subathra : Thank u subbu fr continuously reading n commenting. it boosts me to write more
@Kulandaivelu - Thank u sir.
கட்டுப்பாடற்ற சுதந்திரம்தான் காதலா? சுதந்திரம் எதில்? புரியவில்லை சகோதரி!
@ கவிப்பிரியன்
அடிப்படை நேர்மையும், சுய ஒழுக்கமும் எந்தவொரு ரிலேஷன்ஷிப்பிற்கும் கட்டாயம் அவசியம். எனவே நான் சொல்லும் கட்டற்ற சுதந்திரம் அதில் வராது சகோதரா. மாறாக, நீ சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக என்னிடம் கொடுக்கவேண்டும், உன் அம்மா வீட்டிற்குப் போகக்கூடாது, நீ உன் பெற்றோர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாது என்று அபத்தமான கட்டுப்பாடுகளை விதிக்கும் வாழ்க்கைத்துணைகளைப் பற்றிக் கூறுகிறேன். வாசித்துக் கருத்துத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி :)
Post a Comment