ஒரு கேள்வி கேட்கும் ட்ரெண்ட் இருக்கிறது. வாழ்க்கையின் சகல அங்கத்திலும் இது பரவியுள்ளது. சாப்பிடுவது, பார்ப்பது, கேட்பது, படிப்பது, எதையாவது கற்றுக்கொள்வது என்று அனைத்திலும். அது என்னவென்றால் - இதால் என்ன யூஸ் என்ற கேள்வி. தொடர்ந்து blog எழுதுகிறாயே - இதால் என்ன யூஸ்? அந்த நேரத்தில் இதை செய்யலாமே, அதை செய்யலாமே. பிள்ளைகள் பாடப்புத்தகம் தவிர மற்றதைப் படிப்பதால் என்ன யூஸ் - அதற்கு ஒலிம்பியாட்டுக்கு கோச் பண்ணலாமில்லையா? ப்ரண்டுடன் பேசிக்கொண்டிருந்தாயா - சரி, என்ன புதிதாக கற்றுக்கொண்டாய்? ப்ரெஞ்ச் படிக்க ஆசைப்படுகிறாயா - ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா அதிலிருந்து?
நாம் செய்யும் அனைத்துமே வயிற்றுப்பாட்டையும், சர்வைவல் திறனையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமென்றால் கலையும், அழகும், இசையும் எதற்கு? வெறும் நெல்லை மட்டும் பயிரிட்டால் போதுமா? இவ்வுலகை அழகாக்க, மனதை மணமுள்ளதாக்க மல்லி வேண்டாமா? எதைச் செய்தாலும் monetary benefits, பொருள் ரீதியான ஆதாயம் கிடைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சில காரியங்களை அதைச் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமேவும் செய்வோம். அப்படிப்பட்ட காரியங்களாலேயே மனிதம் தழைக்கிறது.
2 comments:
superb!! well said !! "வெறும் நெல்லை மட்டும் பயிரிட்டால் போதுமா? இவ்வுலகை அழகாக்க, மனதை மணமுள்ளதாக்க மல்லி வேண்டாமா?" claps !! claps!!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி எவ்வளவோ அழகான விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன....நமக்கு அதை பார்பதற்கும் உணர்வதற்கும் ரசனை வேண்டும்...அது இல்லாதவர்கள் கேட்கும் கேள்வி தான் 'what is the use? benefited?? what is the scope? will it be useful?" நன்றி மாலா....உங்கள் கலை உணர்வுக்கும் மனித நேயத்திற்கும்....scope benefit தேடுறவங்களுக்கு இது கண்டிப்பாக புரியாது....பிரேமா
Post a Comment