இப்போ சென்னைல ஒரு படம் செமயா ஓடிக்கிட்டு இருக்கு. இத main stream porn movie னு பேரு வச்சு கூப்டுக்கிட்டு இருக்காங்க. இளைஞர்கள் கூட்டமாம் தியேட்டர்ல. எதுவுமே டபுள் மீனிங் கெடயாது, எல்லாமே ஸ்ட்ரைட் மீனிங்தான் அப்டீனு படக்குழுவினர் பெருமயா பேட்டி குடுக்குறாங்க.
என் க்ளாஸ் பசங்க நெறய பேர் வாட்சப் ஸ்டேடஸ், Fb Status ல groupies போட்டு,Watching IAMK னு tag போட்டுட்டிருக்காங்க. கஷ்டப்பட்டது வீணாப் போகல. டிக்கெட் கெடச்சிருச்சு அப்டீன்னு ஒரு செல்ஃபீ. Where are we heading towards?
இளம் வயதினருக்கு ஒரு curiosity இருக்கும் சில விசயங்கள தெரிஞ்சுக்கிறதுக்கு. தப்பில்ல. முந்தைய தலைமுறையும் பிட்டு படம் கட்டாயம் பாத்திருப்பாங்க. ஆனா பெரியவங்களுக்குத் தெரிஞ்சிரக்கூடாதுன்னு நெனச்சாங்க. சின்னதா ஒரு பயம் இருந்துச்சு. இன்னக்கி எந்த ஒரு பயமோ குற்ற எண் உணர்ச்சியோ இல்லாம Status update - யார் வேணா பாத்துக்கோ எனக்கென்ன.Is this fair youngsters?
ஏற்கனவே பெண் என்பவள் ஆணுக்காகப் படைக்கப்பட்ட ஒரு உடல் என்பதைத் தாண்டி யோசிக்க முடியாத ஒரு சமுதாயத்தில் இது போன்ற படங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஆசிரியைகள் எங்கள் பாடத்தில் வரும் கணினி சார்ந்த டெக்னிக்கல் வார்த்தைகளை வகுப்பறை யில் சொல்வதற்குக் கூசுகிறோம் (எல்லாத்துக்கும் இன்னொரு மீனிங் இருக்காம். We encounter ugly grins) இந்த மாதிரியான சூழலில் டபுள் மீனிங்கே கெடயாது எல்லாம் ஸ்ட்ரைட் மீனிங் தான்னு இவங்க சொல்றத கேட்டாலே பயமாருக்கு.
12,13 வயது பிள்ளைகள் I'm in love with your body, oh I Oh I னு பாடும்போது, இன்னும் அதிகமான ஒரு retrogressive சமூகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. உடலை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு கலை வடிவங்கள் வெளியாகும்போது நிர்பயாக்களும் தஸ்வந்த்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது.
கலை வடிவங்கள் மண்ணில் உழலும் மனதை உயர்த்த வேண்டும். நம்முள் பொதிந்திருக்கும் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டும் விசயங்களைத் தவிர்ப்பது ஒரு சமுதாயமாக நாம் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருக்கும். யோசிங்க youngsters!!!
Friday, May 25, 2018
IAMKவும் இளைய தலைமுறையும்
5:56:00 PM
மாலா வாசுதேவன்
1 comment
1 comments:
True dear..our kutties konjan adha learn pannikkalaam
Post a Comment