இப்பலாம் யார் வேணாலும் தமிழ் சினிமால பாட்டெழுதலாம்னு ஆயிருச்சு. சும்மா எதையாவது வார்த்தைய சேத்துப்போட்டு பாட்டுன்னு சொல்றாங்க. என் பாட்ட இனிமே தனுஷ் பாட்டோட கம்ப்பேர் பண்ணாதீங்க - என்கிறார் லூஸுப்பெண்ணே லூஸுப்பெண்ணே போன்ற மனதை வருடும் காதல் பாடல்களையும், எவன்டி ஒன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் போன்ற உயர்தர, காலத்தால் வெல்ல முடியாத தத்துவப்பாடல்களையும் படைத்த மகாக்கவிஞர் சிலம்பரசன்.
இவரது லேட்டஸ்ட் படமான ஒஸ்தியிலும் ஒரு மிக அருமையான பாடல் - வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, எழுதியிருக்கிறார். அதன் வரிகள் - அடாடா - எதாவது கோயில் வாசல் கல்வெட்டுல எழுதி இவர் அது பக்கத்துலயே உக்காந்துக்கலாம். நமக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதப்படிச்சு, நம்மள பத்தி தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும். வரலாறு ரொம்ப முக்கியம் சிம்பு ;)
கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் இன்ன பிறரும் போட்ட ராஜபாட்டையில் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் சிம்பு சற்று யோசித்துப்பேசுவது நல்லது. கேட்டுக்கொண்டிருப்பவர்கள் மடையர்கள் அல்ல.
2 comments:
மாலா...வணக்கம்...
தஙகள் பதிவு சிம்பு மேல் தாங்கள் கொண்டுள்ள அளவில்லாத கோபத்தை வெளிபடுத்துவதாக உள்ளது..நீங்க சிம்புவுக்கு சொன்ன எல்லா கருத்துக்களும் தனுஷ்க்கும் பொருந்தும்......சிம்புவுக்கு தன்னுடைய கருத்துக்களை சொல்ல எல்லா உரிமைகளும் உள்ளது....."லூசு பொண்ணே" ரசிகர்களும் தமிழ் நாட்டில் ஏராளமாக உள்ளனர் என்பதை மறந்து விட வேண்டாம்...
நான் சிம்புவோட ரசிகருங்கோ.............
அன்பு தோழி பிரேமா.
in no way im defending Dhanush. எப்படி லூசுப்பெண்ணேவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல்தான் தனுஷ் பாடல்களுக்கும். சிம்பு தன் பாடல்கள் தனுஷின் பாடல்களை விடத் தரமானது என்று சொல்கிறார். அதைத்தான் நான் கண்டிக்கிறேன் my dear friend :)
Post a Comment