இந்தத் தொடர் பதிவில், இந்த வாரம் இயக்குனர் மணிரத்னத்தைப் பற்றி பகிர விருப்பம். மணிரத்னத்தின் படம் திரையுலக சுஜாதா நாவல். மிக அழகான நடை.அழகே அழகான விஷுவல்ஸ்.லைட் மூவிஸ் வரிசையில்- மௌனராகம், அக்னிநட்சத்திரம், அலைபாயுதே, கமர்சியல் ஹிட்டாக நாயகன், தளபதி, கொஞ்சம் ஹெவி சப்ஜக்ட்டில் அஞ்சலி, ரோஜா, பம்பாய் இவைகள் மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில், என்ன ஒரு அருமையான காட்சிகள், நடிப்பு, இசை - மௌனராகம் கார்த்திக் இன்று வரை ஒரு துறுதுறுவென இருக்கும் ஹீரோவின் அடையாளம்.(இப்போதைய கதாநாயகிகளும் கதாநாயகனை உனக்கென்ன மௌனராகம் கார்த்திக்னு நெனப்பா என்று கேட்கிறார்கள்). இப்படி என்றும் இனிமையாய் இருக்கும் படங்களைத் தந்த மணிரத்னத்தின் சமீபத்திய 2, 3 தமிழ்ப் படங்கள் - டிஸாஸ்ட்ரஸ்.
கடைசியாக வெளிவந்த ராவணன் - எந்த தமிழ் கிராமத்தில் இப்படியெல்லாம் டான்ஸ் ஆடுகிறார்கள், எந்த தமிழ் கிராமம் பார்ப்பதற்கு அவர்கள் காண்பித்த கிராமம் போல் இருக்கிறது? இவர் தமிழ் ஹிந்தி - 2 மொழிப்படத்தையும் ஒரே செட் போட்டு எடுத்து விட முயற்சிக்கிறார். முடிவு, அது தமிழ்ப்படமாகவும் இல்லை, ஹிந்திப்படமாகவும் இருப்பதில்லை. நம்மால் படத்தோடு ஐக்கியமாகவே முடிவதில்லை.
ஆய்த எழுத்து - காட்சிகளில் இவரது முந்தைய படங்களில் இருந்த யதார்த்தம் இல்லை, வசீகரம் இல்லை. மிகைப்படுத்தல் தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. குறிப்பாக சூர்யாவின் காதல் காட்சிகள் - தவிர்க்க முடியாமல் தளபதியில் ரஜினியும், ஷோபனாவும் காதல் தோல்வியின் போது சந்தித்துக்கொள்ளும் காட்சி நினைவில் வருகிறது - அழாதே என்று சொல்லும் ரஜினியின் உக்கிரமான காதல் - தொய்ந்து நடக்கும் ஷோபனாவை, அவர் அறியா வண்ணம் திரும்பிப் பார்க்கும் ரஜினி - என்னவொரு சீன்...
உயிரே படமும் தமிழ், ஹிந்தி குழப்பத்தில் அடி வாங்கியதுதான். மணிரத்னம் சார் பிளீஸ், தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக படம் எடுங்கள். மௌனராகம், அக்னிநட்சத்திரத்தில் பார்த்த மேஜிக்கை மீண்டும் பார்க்க மிக ஆவலாக இருக்கிறோம்.
2 comments:
நீங்கள் சொன்னது போல் மௌன ராகம் - மறக்க முடியாத படமும்... பாடல்களும்...
ஹலோ மேடம் தினமும் பார்த்து பார்த்து சமையல் பண்றோம்....எல்லா நாளும் ஒரே சுவை நம்மால் ஏன் தர முடியல???
சொல்லுங்க மேடம்..... ஏன் தெரியுமா??? நம்ம வீட்டுகாரங்க taste மாறிகிட்டே இருக்குது...
அவங்களும் மனுஷங்க தானே மேடம்......எல்லாம் survival படுத்துற பாடு.....
Post a Comment