காலையில் கல்லூரிக்கு பஸ்ஸில் பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம். முதிராத காலை (6.30), இதமான காற்று, ப்ரஷ்ஷான சக பயணிகள் அருமை. இந்தப் பயணத்தில், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருக்கிற அப்பாக்களையும், மகள்களையும் பார்ப்பது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு. அவர்களது உடைகளும், வாகனங்களும், வீடுகளும் வேறு விதமாக இருந்தாலும் அடிப்படையில் அனைத்து அப்பாக்களும் மகள்களை ஒரே விதத்தில்தான் டீல் செய்கின்றனர்.
1. அப்பார்ட்மென்ட் வாசலில், அரைக்கால் சட்டையோடு, ஒரு தோளில் புத்தகப்பை மற்றும் வாட்டர்பேக், மற்றொரு கையில் சாப்பாட்டுக்கூடையோடு நிற்கும் அப்பா - ஏற்கனவே நான்காக மடித்ததைப் போல் இருக்கும் குட்டி கர்ச்சீப்பை எட்டாக மடித்து, மெலிதாக விசிறியபடி இருக்கும் டீன் ஏஜ் மகள் அல்லது பொறுப்பாக நொண்டி விளையாடிக்கொண்டிருக்கும் ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்த ஸ்கூல் போகும் மகள்.
2. ஒரு...