ஐயாம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று ஆடிப்பாடிய அந்த சின்னக் குழந்தையை ரசிக்காதவர்கள் அன்று தமிழகத்திலேயே கிடையாது. பின்னர் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி என்று 10 வயது சிறுவனாக சிம்பு ஆடியபோது தியேட்டரே சாமி வந்து ஆடியது. சிம்புவுக்குப்பின் எந்தக் குழந்தை நட்சத்திரமும் அவ்வளவு பிரபலமாக ஆகவில்லை.(மே பி, எந்தக் குழந்தையையும் வைத்து அவன் அப்பா படம் இயக்கி, தயாரிக்கவில்லை என்று நினைக்கிறேன்).
என்ன தான் அப்பா படத்தில் நடித்தாலும் கூட, சிம்பு வெளிப்படுத்திய திறமை அசாத்தியமானது. வசன உச்சரிப்பு, அருமையான டான்ஸ் ஆடும் திறன், உணர்வுகளை வெளிப்படுததும் நடிப்புத்திறன் என்று அசரடித்தார்.சில வருடங்களுக்கு முன் ஒரு முன்னணி கதாநாயகனின் மகன், தன் தந்தையோடு ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடினார். பதட்டத்தோடு, மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஆடிவிடவேண்டும் என்ற முனைப்புதான் இருந்ததே தவிர, சிம்புவிடம் இருந்த ஒரு ஸ்பான்டெனிட்டி இல்லை.
பின்னர் டீன் ஏஜராகத் திரையில் தோன்றியபோது, 80களின் கதாநாயகர்களின் முதல் வாரிசு நடிகர் இவர்தான்.பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகமான சிம்பு அடுத்தடுத்து நடித்த கதாபாத்திரங்கள் (குத்து, காளை,தம்)இளம்பெண்களிடம் தீவிரமான வெறுப்பை ஏற்படுத்தியது.பாடலாசிரியர், இயக்குனர், கதை, திரைக்கதாசிரியர் என்று பன்முகத்திறமைகள் கொண்ட சிம்பு, இயக்குனர்களின் நடிகனாக மட்டும் இருந்தால் மிகச் சிறப்பான வெற்றிகளை அவரால் கொடுக்க
முடியு ம் (விண்ணைத் தாண்டி வருவாயா).
ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று பெருமையாகச் சொல்லப்படும் இவர், இன்னும் அதிகப் படங்களில், படத்தின் நாயகனாக மட்டும் அவர் தன் வேலையைக் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தாரேயானால் - இயக்கம் மற்றும் பிறவற்றில் தலையிடாமல் - (அவர் இயக்குனராக இல்லாத பட்சத்தில்), தமிழ்த்திரையுலகம் ஒரு மிகச் சிறந்த, திறமை வாய்ந்த இளைஞரைத் தூக்கி வைத்துக் கொண்டாடும்.
0 comments:
Post a Comment