கமலுக்கு லீகல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் முக்தா சீனிவாசன். பழம்பெரும் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் 1947ம் ஆண்டு முதல் தமிழ்த்திரையுலகிலிருக்கிறார். இவர் இயக்கிய முதலாளி திரைப்படத்திற்காக ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய விருது பெற்றவர். திரையுலகின் ஜாம்பவான்களான டி.ஆர்.மகாலிங்கம், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், பாலச்சந்தர், மு.கருணாநிதி போன்ற பலரோடும் பணிபுரிந்திருக்கிறார். கமலின் நாயகன் உட்பட சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், அந்தமான் காதலி முதலிய ஏராளமான படங்களின் தயாரிப்பாளர். இவ்வளவு அனுபவம் மிக்க தயாரிப்பாளர், இயக்குனரைத்தான் வம்புக்கிழுத்திருக்கிறார் கமலஹாசன்.
நாயகன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருப்பதை ஒட்டி ஹிண்டு நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் கமல். அதில் நாயகன் படத்தயாரிப்பாளரைப் பற்றி எக்கச்சக்க...