Saturday, December 24, 2011
சென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வ்யூ - மாணவனின் சம்பளம் வருடத்திற்கு 64 லட்சம் - எந்த துறை சார்ந்த நிறுவனத்தில்?
Thursday, December 22, 2011
ஆ.ராசாவின் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரியின் 4 லட்சம் மதிப்புள்ள செல்போன்
Tuesday, December 20, 2011
தமிழ் கேபிசியின் ஹோஸ்ட் யார் - இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்
என் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு
Friday, December 16, 2011
கொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலை
Friday, December 9, 2011
சாப்ட்வேர் இன்ஜினியர்களின் வித்தியாச ஆன்சைட்
Friday, December 2, 2011
பொன்னியின் செல்வன் வாசக வெறியர்களுக்கு ஒரு அதிர்ச்சி
பூங்குழலியின் நுண்ணறிவோடு கூடிய விளையாட்டுத்தனம், ஆதித்த கரிகாலனின் வீரம் மற்றும் வேகம், ராஜராஜனின் தியாகம், சேந்தன் அமுதனின் பக்தி, குந்தவையின் ஆளுமைத்திறன், நந்தினியின் மயக்கும் அழகு மற்றும் தீராக்கோபம், மதுராந்தகனின் கோழைத்தனம், துரோகம் என அப்புதினத்தில் இடம்பெறாத மனித உணர்ச்சிகளே இல்லை எனலாம்.
இங்கு ஆதித்த கரிகாலனின் மரணம் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. யார் அவரைக்கொலை செய்தது என்பதை கல்கி பூடகமாகவே விட்டிருப்பார். பாண்டியனின் ஆபத்துதவிகள், பழுவேட்டரையர், நந்தினி என்று பலரும் ஆதித்தனின் அகால மரண வேளையில் கடம்பூர் அரண்மனையில் இருந்ததாக கல்கி சித்தரித்திருப்பார்.
பொன்னியின் செல்வன் நாவலின்படி சோழ அரசியான செம்பியன்மாதேவியால் வளர்க்கப்பட்ட ஆனால் பாண்டியகுலத்தைச் சேர்ந்தவனான மதுராந்தகன் அரியணையைக்கைப்பற்ற சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் அரியணைக்குரியவராகக் கருதப்பட்டவரும், செம்பியன் மாதேவியின் திருவயிறுதித்தத்தேவருமான, சேந்தன் அமுதன் சிவனெறிச்செல்வராக, சிவக்கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தங்க நகைகளைக் காணும்போதும் சிவபெருமானின் பொன்மேனியை நினைவில்கொண்டு, பொன்னார்மேனியனே என்று சிவபதிகம் பாடிக்கொண்டிருந்திருக்கிறார். ராஜ்ஜியம் ஆளும் ஆசை துளியும் இல்லாத அவரை ராஜராஜனே அரியணையில் கட்டாயப்படுத்தி அமர வைத்ததாக நாவல் கூறுகிறது.
ஆனால் சமீபத்தில் படித்த ராஜராஜன் என்ற புத்தகத்தின் அடிப்படையில் (இப்புத்தகம் வரலாற்றுச்சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது - ஆசிரியர் ச.ந.கண்ணன், கிழக்கு பதிப்பகம்) உண்மையில் சேந்தன் அமுதன் என்ற உத்தம சோழனே சதி செய்து கரிகாலச்சோழனைக் கொன்றிருக்கிறார். எனவேதான் சுந்தரசோழனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தபின் உத்தமசோழன் ஆதித்தனைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்கவோ தண்டிக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மக்கள் உத்தமசோழனின் சதியை அறிந்தே இருந்திருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவில்லாத மன்னனாகவே அவர் விளங்கியிருக்கிறார். அவருக்குப்பின் அரியணையேறிய ராஜராஜன் ரவிதாஸன் முதலான சதிகாரர்களைத் தண்டித்திருக்கிறார் And rest is history.
கதைக்காகக்கூட ஒரு சோழமன்னனைக் கொலைகாரனாக காட்ட கல்கி விரும்பவில்லை போலும். எழுத்தாளர்களுக்கே உரிய டிராபேக் இது. உண்மை இதனால் நிச்சயம் மறைக்கப்படுகிறது.
Monday, November 28, 2011
ஃபேஸ்புக்கின் கதை - தி சோஷியல் நெட்வொர்க்
ஃபேஸ்புக்கை உருவாக்கியதன் பின்னணி கதை இது. நம்மூரைப்போல் இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே - யாரையும் குறிப்பிடுபவையல்ல என்ற முன்னுரையெல்லாம் இல்லாமல், அனைத்து பாத்திரங்களையும் அதே உண்மைப்பெயர்களோடு உலாவ விட்டிருக்கின்றனர். facebook ன் founderஆக வரும் கதாபாத்திரம் திரைப்படத்திலும் அப்படியே, அதே பெயரோடுதான் வருகிறார்.
கதை இதுதான். zuckerberg ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மாணவர் (சைக்காலஜி மற்றும் கணினித் துறை). 2004ம் ஆண்டு தன் ரூம்மேட்ஸ் மற்றும் நண்பர்கள் டஸ்டின் மாஸ்கோவிட்ச், எட்வர்டோ சாவரின் ஆகியோரின் துணையோடு ஃபேஸ்மாஷ் என்றொரு வெப்ஸைட்டை உருவாக்குகிறார் - அதாவது தன் கல்லூரி பெண்களுக்கு ஆன்லைனில் மார்க் போடுவது. ஒரே நாளில் அனைவரும் இந்த சைட்டுக்கு லாகின் செய்த்ததால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் நெட்வொர்க் க்ராஷ் ஆகிறது. இதையடுத்து கல்லூரியில் இவரது facemash தடை செய்யப்பட்டது. மேலும் அனுமதியின்றி கல்லூரி மாணவிகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக Zuckerberg அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் நேரிடுகிறது.
இச்சம்பவத்திற்கடுத்து Zuckerberg தன் website ஐடியாவைக் கல்லூரிக்கு வெளியில் தொடர்கிறார். தன் வெப்ஸைட்டை வெற்றிகரமானதாக்க யார் யாரை அவர் பிடித்தார், அவர்களைப் பயன்படுத்திக்கொண்ட பிறகு எவ்வாறு அவர்களைக்கழற்றிவிட்டார், facebookஐத் துவங்கியபோது தம்மோடிருந்த Eduardo Savarinஐ (Co-founder of Facebook) எப்படி வஞ்சித்தார் என்று விரிகிறது படம்.
மனிதமனத்தின் விகாரங்களும், நம்பிக்கை துரோகங்களும் நம்மை திகிலடைய வைக்கின்றன. குறிப்பாக நேப்ஸ்டர் கம்யுனிட்டியைக் (நாங்கள் கல்லூரியில் படித்தபோது இத்தளம் ரொம்ப ஃபேமஸ். music industryக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியதால் இத்தளம் தடைசெய்யப்பட்டது. இது ஒரு illegal தளம்தான்) கண்டுபிடித்த Sean Parker ஐ போலிஸில் மாட்டிவிடும்போது - இப்படியொரு வஞ்சகனின் வலைத்தளத்தையா நாம் பயன்படுத்துகிறோம் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. ஆசியர்களைப்பற்றியா இவர்களின் ஆதிக்க கருத்தும் சந்தடிசாக்கில் வெளிவருகிறது.
இப்படத்திற்கு Zuckerberg ன் reaction - ஹீரோவின் ட்ரெஸ்ஸிங் என்னைப்போலவே மிகச்சரியாக இருந்தது.மற்றபடி நிறைய விஷயங்கள் தவறு. இவ்வளவுதான் மொத்த ரியாக்ஷனே. வளர்ந்த நாடுகளின் கருத்துச்சுதந்திரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதைப்போல இங்கு சன் நெட்வொர்க் முன்னேற்றத்தின் பின்னணியைத் திரைப்படமாக எடுக்க முடியுமா?
அருமையான டைரக்ஷன், தேர்ந்த நடிப்பு, சிறந்த திரைக்கதை - வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.
Friday, November 25, 2011
"ஏம்ப்பா நான் சரியாத்தான பேசுறேன்?"சந்தேகங்கள் :)
- With all due respect to Dr.A.P.J.Abdul Kalam (no offense intended). சத்தியமா எனக்கு அக்னிச்சிறகுகள் படிக்கும் போது இம்ப்ரெஸ்ஸிவாகவே இல்ல. இந்தியா 2020 புத்தகத்தை என்னால் படித்து முடிக்கவே முடியல. செமயா தூக்கம் வந்துருச்சு. ஒரே போரான நடை - உங்களுக்கு?
- முன்பே வா என் அன்பே வா பாடலை எல்லோரும் சூப்பர் பாட்டு என்கிறார்கள். எனக்கு அந்தப்பாட்டு செம மொக்கயா தெரியுது. அதே மாதிரி ராவணன் படத்தில் கள்வரே பாட்டு - ஐய்யய்யயோ அதல்லாம் பாட்டான்னு தோணுது. (இந்த மாதிரி பெரிய்யய லிஸ்ட்டே இருக்குப்பா)இதச்சொன்னா நம்மள கேவலமா பாக்குறாங்கப்பா.
- அப்புறம் மைக்ரோவேவ் அவன - உண்மையா சொல்லுங்க மக்கா - ready to eat chappathis தயார் செய்யுறது, சாப்பாடு சுட வக்கிறது தவிர வேற எதுக்காச்சு யூஸ் பண்றீங்களா என்ன? convection mode ல கேக்கு, க்ரில் மோடுல சிக்கன் எல்லாம் அவன் வாங்குன ஒரு மாசத்துக்கப்புறம் எப்பவாச்சு பண்ணீங்களா?
- சீனியர்ஸ் சொல்ற ஜோக்குக்கு சிரிப்பு வருது?
Sunday, November 20, 2011
பழசை நோக்கி ஓடும் மனம்
அது ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் இல்லாத காலம். அப்போது நமக்கு ஏதும் பொறுப்புகள் கிடையாது. நாம் மனதளவில் ஃப்ரீயாக இருந்தோம். எனவேதான் அந்த நாட்களை நாம் மீண்டும், மீண்டும் அசைபோடுகிறோம். அந்த நாட்களோடு தொடர்புடைய பொருட்களை நாம் விரும்புகிறோம் என்னும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய மாணவப்பருவத்தில் நான் நிச்சயம் ஃப்ரீயாக, பொறுப்புகளற்றவளாக இல்லை. தீராத தனிமையிலும், மனக்கவலையிலும், வயதுக்கு மீறிய பொறுப்புகளோடும் தான் இருந்தேன்.
Wednesday, November 9, 2011
4 நாட்கள் லீவ் போட்ட 2ஆம் வகுப்பு பிள்ளை
Friday, October 21, 2011
சென்னை MRTS திருவான்மியூர் ஸ்டேஷனில் ஒரு நாள்
Friday, October 14, 2011
அழகிய பிட்கெய்ர்ன் தீவு - பெண் குழந்தைகளின் பாலியல் நரகம்
தாயாக்கப்படுகிறார்கள். இங்குள்ள அனைத்து ஆண்களுமே பெண்குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களாகவும், பெண் குழந்தைகள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர், (2004 ல் இவர்களின் மொத்த ஜனத்தொகை 47). இத்தீவுக்கு airport, sea port கிடையாது. ஒரேயொரு docking yard மட்டும் உண்டு. இப்படி ஒரு வெளியாட்களின் வரவே இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரிடமும் எதுவும் சொல்லவும் வாய்ப்பில்லை. தாயார், பாட்டி அனைவரும் இதே விதத்தில் பாதிக்கப்பட்டவர்களே. 1999ஆம் ஆண்டு அங்கு விசிட்டிங் போலீஸாக வந்த ஒரு பெண் அதிகாரியிடம் ஒரு 15 வயது பெண் குழந்தை தான் ரேப் செய்யப்பட்டதையும், இங்கு எவ்வாறு அது சர்வசாதாரணமாக செய்யப்படுகிறது என்பது பற்றியும் தெரிவித்திருக்கிறாள். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பெரிய திருட்டை மட்டுமே ஹேண்டில் செய்திருந்த அந்த அதிகாரி, இக்குற்றச்சாட்டின் தீவிரத்தால் அதிர்ந்து போனார். மற்ற பெண்களும், குழந்தைகளும் தைரியமடைந்து தங்களின் வேதனையான அனுபவங்களை வெளியில் சொல்லத்துவங்க, இத்தீவின் இன்னொரு கோர முகம் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நியுசிலாந்து கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். நாங்கள் பிரிட்டிஷ் ராஜஜியத்தின் கீழ் வரமாட்டோம். எனவே எங்களை வேறு யாரும் விசாரித்து குற்றம் சாட்டமுடியாது என்று தற்சமய தலைவர் (முதல் ஃபோட்டோவில் 2ம் வரிசையில் வெள்ளை டிஷர்ட்டில் இருப்பவர் - அவரும் குற்றவாளிதான்) வாதிட்டது தள்ளுபடி செய்யப்பட்டது. அனேகமாக அனைத்து ஆண்களும் கைதாகும் நிலை ஏற்பட்டதால், சில வயதான பெண்கள், தீவின் ஆண்களைக் காப்பாற்ற வேண்டுமென "இதிலென்ன இருக்கிறது. இது பாலினேஷியக் கலாசாரத்தின் ஒரு பகுதி" என வாதிட்டனர். இவை அனைத்தையும் மீறி, நியுசிலாந்து கோர்ட் அனைவருக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இன்று செய்தித்தாளில் விழுப்புரத்தில் தந்தையால் கர்ப்பமாக்கப்பட்ட பெண் குழந்தை, குழந்தை பெற்றார் என்ற தினமலர் செய்தி மனத்தை நொறுக்குகிறது. இக்கட்டுரை பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டுருக்கிற ஒவ்வொரு குழந்தைக்குமான என்னுடைய பிரார்த்தனை.
Friday, October 7, 2011
இந்தியா திரும்புவீர்களா NRI இன்ஜினியர்ஸ்?
வளர்ந்து விட்டதனால் அவர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லாமல் பிரயாணத்தை ரசிக்க முடிந்தது. மிதமான ஏசி, சுவையான சரவணபவன் உணவு வகைகள் மற்றும் அருமையான புத்தகங்கள். ஒரு ரயில் பயணத்தை உபசொர்க்கமாக மாற்ற இவை போதுமல்லவா?
நான் என் நண்பர்கள் அல்லது பிள்ளைகளோடில்லாத உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது (நண்பர்கள் வெளிநாட்டில், இங்கே இருப்பது அவர்களின் பெற்றோர்கள் மட்டும். நான் பார்க்கச் செல்வதும் பெற்றோர்களைத்தான்)அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளை நினைத்தபடி இங்கே தவிக்கும் அவர்களின் தனிமை மனதை உலுக்குகிறது. பிள்ளைகளின் ஃபோட்டோக்களை ஆசை ஆசையாக நமக்கு எடுத்து காண்பிக்கின்றனர். ஏற்கனவே facebookல் பார்த்துவிட்டோம் என்று சொல்ல மனமில்லாமல் நாமும் முதன்முறை பார்ப்பது போல் நடிக்கிறோம். அவர்களின் வீடுகள் மிகவும் posh ஆக இருக்கின்றன. ஆனால் அவை வெறும் கற்களாலான கட்டடம் மட்டுமே. குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் நிறைந்த, மகனும் மருமகளும் மகிழ்ந்து குலாவி அல்லது சண்டை போட்டுத்திரியும் உயிரோட்டம் அங்கு இல்லை. Sunday evening நம்ம டைம் 7மணி போல onlineல வருவாங்கம்மா என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் use பண்ணும் technical terms (online, skype, webcam) என் மனத்தை அறுக்கின்றது. எனக்குத்தெரியும் அவர்கள் அந்த வார்த்தைகளை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்று.
கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து பிள்ளைகளற்ற தனிமையில் இருப்பது கூட பரவாயில்லை. வாழ்க்கைத்துணை மறைந்து பிள்ளைகளும் வேறெங்கோ இருப்பவரின் நிலை இன்னும் பரிதாபம். கொடிது, கொடிது முதுமையில் தனிமை.
Saturday, September 17, 2011
பாலுமகேந்திராவின் மனைவி
Friday, September 16, 2011
வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன் - பார்ட் II
KFC Restaurantன் ரிஸோ ரைஸ், பக்கெட் சிக்கன், பர்கர் அனைத்தும் நன்றாக உள்ளன. இவற்றை நம் இந்திய நாவிற்கு ஏற்ற முறையில் spicy யாகத் தருகிறார்கள். ஆனால் இங்கு உள்ளே நுழைந்தவுடன் குப்பென்று வீசும் துர்நாற்றம் நாம் இன்னொரு முறை அங்கே செல்ல வேண்டுமா என்று யோசிக்க வைக்கிறது. எவ்வளவோ அருமையான air freshenerகள் இருக்கின்ற நிலையில் ஏன் இப்படியொரு துர்நாற்றம்??? Im surprised. இந்தப்பிரச்சினையை இந்த ரெஸ்ட்டாரண்ட் காரர்கள் கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது நிறைய விளம்பரங்களுடன் துவங்கப்பட்ட திண்டுக்கல் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்ட். விளம்பரங்களால் எதிர்பார்ப்பும் மிக அதிகம். இவர்கள் ஹைலைட் செய்தது இவர்களின் பிரியாணி, மற்றும் கரண்டி முட்டை. அதையே ஆர்டர் செய்தோம். பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி, சீரக சம்பா அரிசியில் செய்கிறார்கள். அருமையான ருசி. மிதமான மசாலா, நன்கு வெந்த கறித்துண்டுகள். அந்த வகை அரிசியினாலே ஒரு தனி ருசி நிச்சயம் கிடைக்கிறது. மற்றவை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இங்கே இவர்களது சீட்டிங் arrangement very very uncomfortable. Ergonomyயைக் கன்ஸிடர் பண்ணவே இல்லை.
Flamingo வுக்கு ஒரு மதியம் 2.30 போல் சென்றோம். இவர்களது நேரம் காலை 11 முதல் இரவு 11 வரை என்று குறிப்பிட்டிருந்தாலும் நாங்கள் சென்ற நேரம் எதைக்கேட்டாலும் இல்லையென்றார்கள். எந்த starter ம் இல்லை. அது இல்லை, இது இல்லை - ஸ் அப்பா. சாம்பார் சாதமும் தயிர் சாதமும் மட்டும் இருக்கிறது என்றார்கள். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் (ரொம்பவே) காஸ்ட்லி. Hot Chips அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
மொத்தத்தில் இம்முறை முந்துவது சங்கீதா ரெஸ்ட்டாரண்ட்தான். நல்ல சர்வீஸ், வசதியான இருக்கைகள், சுவையான உணவு, மிதமான விலை. try பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
Wednesday, September 14, 2011
விருதுநகர் புரோட்டா சால்னா
விருதுநகர் காமராஜர் பிறந்த ஊர் என்பதற்கு அடுத்தபடியாக அதன் புரோட்டா சால்னாவிற்குத்தான் ஃபேமஸ். 60 வருடங்களுக்கு முன் தெப்பத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால், சுற்றியுள்ள புரோட்டா கடைகளில் ஊர் முதலாளிகள் (TKSP, VVR, MSP - ஊர் பெரிய மனிதர்களின் பெயர்ச்சுருக்கம்) அனைவரையும் பார்த்துவிடலாம் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள். ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் ஏகபோக உரிமையாக இருந்த புரோட்டா சால்னா இப்போது அனைவரும் புசிக்கக் கூடியதாக மாறிவிட்டது.
Tuesday, September 13, 2011
குட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள்
- காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் கேள்விக்கணைகள் - மீன் பல் தேய்க்குமா?; ரைனோசரஸுக்கு வால் இருக்குமா? (அவன் கேட்டவுடன் எனக்கே சந்தேகம் வந்துவிடும்); மழை பெய்யும்போது வானத்தில் ஏரோப்பிளேன் நனையுமே! யார் குடை பிடிப்பா?; tenக்கு அப்புறம் tenone தானே, ஏன் elevenனு சொல்றீங்க(பிள்ளை கேட்பதும் correct தானங்க. twentyக்கப்புறம் twentyone தான?) - இப்படி இடைவிடாத கேள்விகளில் நாம் பொறுமையிழந்து தொண தொணன்னு கேள்வி கேக்காதடா என்று அலறும் போது அக்குழந்தை உண்மையிலேயே குழம்பி - நான் கேள்வி கேக்கல அம்மா. பதில் கேக்குறேன் - என்று சொல்லும் குழந்தைத்தனத்தில் இறைவனைக் காணலாம்.
- Chips packet ஐ தலைகீழாக கவிழ்த்து விளையாடும் பிள்ளையிடம், ஏய் என்ன பண்ணிக்கிட்டிருக்க? அறிவு கெட்டது - என்று சொன்னவுடன் - நான் அறிவு கெட்டது இல்லம்மா - அறிவு நல்லது என்று ரெஸ்பான்ஸ் (ரொம்ப நல்லவன்டா நீ அவ்வவ்வவ்வவ்வ்)
- Chota Bheem POGO வில் இப்போது தமிழில் வருவதைப்பற்றி அக்காவும் தம்பியும் டிஸ்கஷன் - என்ன பப்பு பீமும் காலியாவும் தமிழ்ல பேசுறாங்க? ஆமா தம்பு, அவுங்க தமிழ் டியூஷன் போயிருப்பாங்கன்னு நெனக்கிறேன். (அடுத்து அனேகமாக Mr.Beanம் தமிழ் டியூஷன் போயிருவாருன்னு நெனக்கிறேன் ;) )
- Real Juice 1 ltr carton ஐத் தலைகீழாக கவிழ்த்துக்கொண்டிருக்கும் பிள்ளையிடம் - எதுக்கு இப்படி கவுத்துற?. பிள்ளையின் பதில் - juice இருக்கா தீந்து போயிருச்சான்னு பாக்குறேன். (அவரு பாத்து முடிக்கிறதுக்குள்ள juice நெஜமாவே தீந்திருக்கும் :) )
- அக்காவிடம் தம்பி - missக்கு A B C தவிர வேற ஒண்ணுமே தெரியல பப்பு. daily அதே தான் சொல்லிக்கொடுக்குறாங்க.
Saturday, September 3, 2011
சூப்பர் சீன்ஸ்
Wednesday, August 31, 2011
ஆசிரியர்கள் உலகின் 5 ரகசியங்கள்
-
ஆசிரியர்களுக்கு நீங்கள் nick name வைப்பதைப் போல அவர்களும் உங்களுக்கு nickname வைப்பதுண்டு. அப்பெயரை வைத்து தான் நீங்கள் departmentல் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் முன்னாள் மாணவராய் இருந்தால் உங்கள் டீச்சரிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் பெயர் என்னவென்று.
-
Bit அடிக்கும் மாணவனைப் பிடித்த பின்பு எங்களுக்கும் (அதாவது ஆசிரியர்களுக்கும்) பயமாக இருக்கும் - பையன் பொன்னம்பலம் சைசில் இருப்பான். பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே :)
-
வகுப்பறையில் தூங்கும் மாணவனை அந்நேரம் திட்டினாலும் மனதிற்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் இருப்போம். departmentன் அன்றைய காமெடி பீஸ் அவன்தான்
-
உங்களிடம் Take a paper - surprise test என்று சொன்னால் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு முந்தின நாள் guest வந்தார்கள். அதனால் prepare பண்ணவில்லை என்று அர்த்தம்.
-
நீங்கள் எப்படி 1 hr க்ளாஸைத் தள்ள கஷ்டப்படுகிறீர்களோ அதேபோல் நாங்களும் 3 hrs exam supervisionஐத் தள்ளக் கஷ்டப்படுவோம். அதனால்தான் பொறுப்பாக நீங்கள் எழுதும் answerஐப் படித்துக்கொண்டிருப்போம். (அது ஏன் நாங்க உங்க பேப்பர படிக்க ஆரம்பிச்சவுடனே நீங்க எழுதுறத நிறுத்திட்டு எங்களப் பாக்குறீங்க - அப்புறம் எப்படித்தான் எங்களுக்கு பொழுது போறதாம்?)
Sunday, August 28, 2011
ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை
- பிரத்தியேகமானது எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும், இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும் என்பதும் சுத்த ஹம்பக். அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக பெற்றோரின் மரணம் தரும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் பருமனால் அவதியுறும் தோழியின் மனவலியை என்னால் ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ளவே முடியாது. whats the big deal என்பதே என் reaction ஆக இருக்கும். எனவே மனம் வருந்தி நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயம் கிண்டலாக ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் மீது பிரயோகிக்கப்படும்போது மனவலி ஏற்படும். ஏனெனில் அப்பிரச்சினை இல்லாத உங்கள் தோழியால் அதைப்புரிந்து கொள்ள இயலாது. அதே போல் பொதுவான சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் சக்ஸஸ் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிரத்தியேக சந்தோஷங்களை அல்ல. ஏனெனில் மனித மனம் நுண்ணிய இழைகளால் ஆனது. அந்த இழைகளை அறுத்து மனத்தைச் சிதைக்க சிறு சலனமும் போதும். உங்களின் வெற்றியைக் கேட்கும் உங்கள் நண்பனின் மனதில் தோன்றும் சிறு ஏக்கமும் (அந்த வெற்றி அவர்களுக்கும் கிடைத்திராத பட்சத்தில்) பொறாமைத்தீயைப் பற்ற வைத்து நட்பை பஞ்சராக்கும். இவைகளால் நம் நண்பர்கள் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்வது அரைவேக்காட்டுத்தனம். நம் நண்பர்களும் - உயர்ந்த லட்சியங்களும், கீழான இச்சைகளும், சகமனிதருக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும், நான் மட்டுமே உயரவேண்டும் என்ற தன்னலமும் - கலந்து கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே.
- எதன் பொருட்டும் கேட்கப்படாமல் அட்வைஸ் கொடுக்காதீர்கள். இது 10 வருட நட்பையும் 10 நிமிடத்தில் நொறுக்கி அள்ளிவிடும் வல்லமை படைத்தது. என் 12 வருட தோழியின் காதலனுக்கு accident. வீட்டில் படுக்கையிலிருக்கிறார். அவர்களுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. தோழி வேறு ஊரில் இருந்தாள். accident விஷயம் தெரிந்தவுடன் அவள் அவர் வீட்டிற்கு சென்று தங்கி அவருக்கு உதவி செய்ய விருப்பப்பட்டாள். நான் அந்த ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. பாத்துப்போ என்றேன். (அவள் என்னிடம் ஐடியா கேட்கவேயில்லை. நானாத்தான் கொடுத்தேன்). அன்றோடு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். திருமணத்திற்கு பத்திரிககை கூடத்தரவில்லை. கேட்கப்படாமல் ஐடியாவோ அட்வைஸோ தரவே தராதீர்கள். அவரவர் வாழ்க்கையை நடத்திச்செல்ல அவரவருக்குத்தெரியும்.
Monday, August 8, 2011
டப்பர்வேர் தோழிகள் ??!!
Monday, August 1, 2011
ரியலிசப் படங்கள்
நான் சொல்ல வருவது இதைத்தான் - நேரிலேயே ஏற்கனவே ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத பல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இவை நம்மை ஒரு விதமான குற்றமனப்பான்மைக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்குகின்றன. அவற்றையே மீண்டும் போய் தியேட்டரிலும் பார்க்கும் மனவலிமை நிச்சயம் எனக்கு இல்லை. why should i relive my same stress again in அங்காடித்தெரு?
தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கம்மி என்பது நமக்குத் தெரியாதா? இப்போதைக்கு எதைப்படித்தாலும் வேலை வாய்ப்பு கம்மிதான். 3 வேளை சாப்பிடவும், தங்க இடமும் இல்லாத எத்தனையோ மாணவர்களை நான் அறிவேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. பணத்துக்கு என்ன பண்ணனு தெரியல என்று கண்ணீர் விட்ட மாணவ சகோதரர்களை எனக்குப் பர்சனலாகத் தெரியும். நேற்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த வெவ்வேறு செய்திகள் -
- சென்ற வருடம் படிப்பை முடித்த ஒரு ஏரோநாட்டிக் இன்ஜினியர் வேலை கிடைக்காமல் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க முயற்சி.
- BL மாணவன் வழிப்பறி கொள்ளை
- கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்
இதை ஒரு 3 மணி நேரம் படமாகப் பார்க்க வேண்டுமா?
படம் என்பது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தைக் கொஞ்ச நேரமாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைவர் ரஜினி வேலையில்லாப் பட்டதாரியாக லெதர் பேண்ட், ரேபான் கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை தேடுவார், கதாநாயகி - உனக்குத்தான் வேறு வேலையில்லையே என்னைக்காதலி- என்று பாடியாடுவார். உடனே தலைவர் சர்ட்டிபிகேட் ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு காதல் செய்யத்துவங்கிவிடுவார். கட்டாயம் பின்னொரு நாளில் ஏதாவது வேலை கிடைத்துவிடும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை. படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். உண்மையிலேயே அந்நாளையப் படங்களுக்காக மனம் ஏங்குகிறது.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிலுவை, பூணூலைத் தூக்கிப்போட்டுவிட்டு போவதோடு படத்தை முடித்து விட்டார். அதற்கு பிறகு அவர்கள் எவ்வளவு கஷ்டப்படார்கள் என்பதை நான் காண்பிக்கிறேன் என்று கிளம்பும் இயக்குன நண்பர்களே - அவர்கள் நாய்படாத பாடு படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுடைய காதல் கணவன் dowry harassmentக்காக ஜெயிலில், டாக்டர் மகளின் காதல் கணவனை pwdல் வேலை பார்க்கும் என்ஜினியர் ஆள் வைத்துக் கொன்றார் etc etc etc...................................). இந்தப்பாடுகளைப் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் தினமும் பார்க்கிறோம். And they lived HAPPILY everafter என்பதை திரைப்படத்திலாவது பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.
Sunday, January 16, 2011
ஏற்பது இகழ்ச்சி