Sunday, June 6, 2021

முறையற்ற ஈர்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி

 குடும்பம் என்னும் அமைப்பு 2

செய்திகளில் அதிகம் அடிபடுவது illicit affairs தான். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்தப் பிறன்மனை விழைதல் இருக்கிறது. இதில் ஆண், பெண் பேதமில்லை. (Whatever problem I am trying to discuss about, I am always gender neutral. அனைவரும் முதலில் மனிதர்களே. பின்னர் தான் ஆண் பெண் எல்லாம்.) எதனால் இந்தப் பிரச்சினை பூதாகரமாக இருக்கிறது? இதற்கு என்ன தீர்வு? குடும்பம் என்ற அமைப்பைக் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியம்? இப்பிரச்சினையின் வேர் குறித்து ஆராயலாம்.
மனைவி மிகத்திறமையானவராக இருந்தால், சட்டென்று ஒரு தாழ்வு மனப்பான்மை கொள்வது ஆண்களின் இயல்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஒன்று மனைவியை எந்நேரமும் மட்டந்தட்டி அவர்களின் மனவுறுதியைக் குலைக்க முற்படுகின்றனர் அல்லது தங்களை விட குறைந்தவர்கள் என்று இவர்கள் கருதும் பெண்களின்பால் ஈர்க்கப்படுகின்றனர். டாக்டர் நர்சோடும், மேனேஜர் டைப்பிஸ்ட்டோடும் வரம்பு மீறிப் பழகுவது அகைன் க்ளிஷேக்களில் ஒன்று. But cliche is a cliche for a reason. இந்தப் பிரிவில் ஆயிரம் எடுத்துக்காட்டுகள் கொடுக்கலாம். வலிமையான உலகத் தலைவர்கள் துவங்கி நமக்குத் தெரிந்த நம் தெருவில் இருக்கக்கூடிய ஆட்கள் வரை.
வேலைக்குப் போகாத மனைவி இருந்தால், தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களோடு அவர்களை ஒப்பீடு செய்து ஏக்கம் கொள்வதும் நடக்கிறது. மொத்தத்தில் ஆளுமைமிக்கவராக இருக்கவேண்டும், அதே நேரத்தில் குடும்ப குத்துவிளக்காக இருக்கவேண்டும், படித்த, பெரிய வேலையில் இருப்பவராக இருக்கவேண்டும், குழந்தைகளைச் சிறப்பான முறையில் கவனிக்கவேண்டும், தன் தாய், தந்தையரைப் போஷிப்பவராக இருக்கவேண்டும், முக்கியமாகத் தவறாமல் ஒவ்வொரு வேளையும் சமைக்க வேண்டும்.
Come on. Give us a break. Its suffocating.
பெண்களும் இவ்வகை எதிர்பார்ப்புகளில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. என்ன சப்பான்ல கேட்டாஹோ அமெரிக்கால கேட்டாஹோ, அண்ட்டார்ட்டிகால கேட்டாஹோ. என் கெரகம் ஒன்ன கல்யாணம் பண்ணேன்னு நினைக்காத மனைவியர் உலகத்தில் இருக்கிறார்களா தெரியவில்லை. கணவன் அமைதியானவனாக இருந்தால் நீ சோஷியலா இல்ல. நன்றாகப் பேசினால் – தேவயில்லாம ஓவராப் பேசுற. அழகாக ட்ரெஸ் செய்துகொள்ளவேண்டும். ரொமாண்டிக்கா இருக்கணும் – இந்த prewedding photoshootல் நம்ம பசங்க படும் பாடிருக்கிறதே. Unrealistic goals வைத்துக்கொண்டு அதை அச்சீவ் செய்யவேண்டும் என்று படுத்துவது (செடன் கார் தான் வாங்கணும், கட்டாயம் ஃபாரின் டூர் கூட்டிட்டுப் போணும், 1Cக்கு கொறயாம அப்பார்ட்மெண்ட் வாங்கணும், மாமனார் மாமியாருக்குப் பணம் குடுக்கக்கூடாது இத்தியாதிகள்).
தன் எதிர்பார்ப்புகளைத் தன் வாழ்க்கைத்துணை பூர்த்தி செய்யாதபோது எழும் மனவருத்தம் குடும்பத்தில் ஒரு போர்க்களத்தை உருவாக்குகிறது. நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. குடும்பம் என்னும் அமைப்பைக் காப்பாற்றவேண்டியது நமது கடமை. என்ன செய்யலாம்?
உங்களின் வாழ்க்கைத்துணை கடவுளால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவர். ’தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்’ என்கிறது பைபிள். நாம் தனித்திருப்பது நல்லதல்ல என்று நமக்கான துணையை ஏற்படுத்திக்கொடுப்பது இறை. கடவுளால் கொடுக்கப்பட்ட இத்துணையின் பாசிட்டிவ் பாயிண்ட்ஸில் மட்டும் ஃபோகஸ் செய்யுங்கள். இது மிக மிகக் கடினம் என்பதை நான் அறிவேன். ஆனாலும் முயற்சி செய்யுங்கள். பாசிட்டிவே இல்லை என்று முடிவு கட்டுவதற்கு முன் நிதானியுங்கள்.
ஒன்றை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்பாலினத்தைச் சேர்ந்த மற்றவரிடம் உங்கள் வாழ்க்கைத்துணை குறித்த விமர்சனங்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் – அவர் எவ்வளவு நெருங்கிய தோழனாக, தோழியாக இருந்தாலும் சரி. You may talk to a counsellor or an awfully close friend of same sex. But not to a person of opposite sex. Meanwhile focus only on positive points of your spouse. Long years of marriage, midlife crisis etc. would have made you forget how wonderful your spouse is. ஒரு நாவலோ கவிதையோ சரியாக நினைவில்லை – நிலா, பழகிய பெண்டாட்டி போல் கேட்பாரற்று அழகைப் பொழிந்து கொண்டிருந்தது – என்ன ஒரு வருணனை. Look for the forgotten wonder in your spouse.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes