Wednesday, August 9, 2017

என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்காதீர்கள் - டென்மார்க் இளவரசர்

டென்மார்க் இளவரசர் ஹென்ரிக், என் மறைவிற்குப் பின் என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்க வேண்டாம் என்று கூறியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1967ம் ஆண்டு இளவரசி மார்கரெட்டும், ஹென்ரிக்கும் மணம் புரிந்து கொண்டனர். 1972ம் ஆண்டு இளவரசி மார்கரெட் அரியணை ஏறினார், அரசியானார். ஹென்ரிக்கும் தான் மன்னர் என்று அறியப்படவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் நாட்டின் முறைப்படி Prince Consort என்ற பட்டத்தைத்தான் தர முடியும், King Consort அல்ல என்று தெரிவித்துவிட்டார் அரசி (இங்கிலாந்திலும் இன்று வரை ராணி எலிசபெத், இளவரசர் ஃபிலிப் தான் - மன்னர் அல்ல). அதனால் இருவருக்கும் இவ்விஷயத்தில் அன்றிலிருந்தே புகைச்சல்தான் என்கின்றனர். அதன் உச்சமாக இளவரசர் முதலில் சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

மனைவி தன்னை விட உயர்ந்த பதவியிலோ, ஃபேமஸாகவோ இருப்பது எப்போதும் ஆண்களுக்குத் தாங்கிக்கொள்ள கடினமாகவே இருக்கிறது. இளவரசி டயானா 1995 BBC பேட்டியில் சொல்கிறார் - "We'd be going round Australia, for instance, and all you could hear was, oh, she's on the other side. Now, if you're a man, like my husband a proud man, you mind about that if you hear it every day for four weeks. And you feel low about it, instead of feeling happy and sharing it." சார்லஸ், டயானா திருமண failureக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

நம்ம சூரியகாந்தி திரைப்படத்தில், ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது’ பாட்டில் - நான் நிழலைப் போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே - என்று ஹீரோ பாடுகிறார் ஹீரோயினைப் பார்த்து, that is, wife got a promotion, salary hike and the husband is feeling bad about it.

ஒரு சராசரி ஆண்மகனின் மனநிலை, தன் மனைவி எல்லா விதத்திலும் ஒரு படி குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் ஒரு யுக சந்தியில் இருக்கிறோம். போன தலைமுறை - அப்பா சம்பாதித்துக் காசு கொண்டு வந்து தருவார், அம்மா சமைப்பாங்க - அவ்வளவுதான். இப்போது trend வேறு. முழுவதும் அந்தப்பக்கமும் இல்லை, இந்தப்பக்கமும் இல்லை. அதனால் தான் இன்னும் மாமியார்கள் மகன்களிடம் என்னடா காய் வெட்டிக்கிட்டு இருக்குற என்று எரிச்சல்படுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நம் அடுத்த தலைமுறை திரிசங்கு சொர்க்கமாக இல்லாமல் முழுமையான ஒரு மாற்றத்தை அடைந்து விடுவார்கள். ஆண், பெண் சமத்துவம் என்று பேசப்பட்டு வருகிற ஒரு விஷயம் முழுமைப்பட்டுவிடும் என்றே நம்புகிறோம்.

1 comments:

ஆரூர் பாஸ்கர் said...

//விஷயம் முழுமைப்பட்டுவிடும் என்றே நம்புகிறோம்.// :)

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes