முன்னாடிலாம் வீட்லருந்து டூர் போனா திருச்செந்தூர் or மதுர அழகர்கோவில் or மலைக்கோட்டை, அதோட சேத்து முக்கொம்பு or குற்றாலம், கொஞ்சம் பெரிய டூர்னா ஊட்டி, கொடைக்கானல். அவ்ளோதான்.
இப்ப டூர்ஸ் லெவலே வேற - ரிலிஜஸ் டூர் பேக்கேஜஸ், ஈகோ டூரிஸம் - அங்கயே டென்ட் அடிச்சு தங்குறது (ஒரு ஊர்ல வெட்டவெளில - சுத்தி மரம், ஆறு இருக்கு- ரெண்டு கட்டில் போட்டு வச்சு இருக்காய்ங்க- அங்க தங்குறதுக்கு 220 யூரோ per nightஆம். நம்ம மொட்டமாடி கூட நல்லாத்தான் இருக்கு), அட்வன்ச்சர் டூரிஸம், ஃபுட் டூர், டார்க் டூரிஸம்.
இதில் டார்க் டூரிஸம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (பெரும்பாலும் நெகட்டிவ் ரீசன்ஸ் - war, poverty, genocides- இவை போல) இடங்களுக்குச் செல்வது. நம் இந்தியாவைப்பொருத்த வரையில் ஜாலியன் வாலாபாக், அந்தமான் செல்லூலார் ஜெயில், போபால் விஷ வாயுவினால் மக்கள் உயிரிழந்த இடம் ஆகியவை டார்க் டூரிஸ் ட்ஸ்பாட்கள் ஆகும். இப்போது இந்தியர்கள் இலங்கைக்கு இவ்வகை டூரிஸத்தில் அதிகம் செல்கிறார்கள். LTTEயினரின் bunker, spots where millions of civilians were killed. என்னால் இலங்கைக்கு ஒரு போதும் செல்லமுடியாது. அவ்வளவு மனோபலம் என்னிடம் நிச்சயமாக இல்லை. I wonder how Tamils can visit these places without any emotions whatsoever.
இங்கே ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். டார்க் டூரிஸம் ஸ்பாட்டுகளில் உலகளவில் முக்கியமானது concentration camps. இந்தக் கேம்புகளில் பல மில்லியன் யூதர்கள் மிகக்கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். Poland, Auschwitz, holocaust museum ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
ஸ்பீல்பெர்க் ஒரு யூதர். அவர் Schindler's Ark என்ற நாவலின் அடிப்படையில் Schindler's list என்ற ஒரு அருமையான படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 7 ஆஸ்கர் அவார்டுகளை வென்றது (12 nominations).அந்த நாவல் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிரோடு திரும்பிய ஒருவரின் அனுபவங்கள். கற்பனையல்ல. ஸ்பீல்பெர்க் இந்தப்படத்தை இயக்கிய அனுபவத்தைப் பற்றி பேசும்போது - it was emotionally draining. I was frightened - என்கிறார். 20ம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியந்திருக்கிறார்.
அதை விட மோசமாக 21ம் நூற்றாண்டில் நடந்தேறியிருக்கிறது. நாமும் சுற்றுலா செல்கிறோம்.