சிடிஎஸ்ஸில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணைக் கட்டாய மதமாற்றம் செய்ததாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த உலகளாவிய மதமாற்றத்தின் பின்னணியில் பெரும் வணிக, அரசியல் நோக்கங்கள் உள்ளன என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதிரியான எஸ்டாபிளிஷ்ட் நிறுவனங்களைப்பற்றி நாம் பேச வேண்டாம். மாறாக நான் தெரிந்து கொள்ள விரும்புவது, நம் பக்கத்து வீட்டு டெய்ஸி அக்கா, ஆபிஸில் நம்முடன் பணிபுரியும் பெட்ஸி முதலானோர் ஏன் யாரோ ஒருவரை மதமாற்றுவதைப் பெர்ஸனல் அச்சீவ்மென்ட்டாகக் கருதுகிறார்கள்? ஏ தோவொரு தெய்வீக நொடியில் ஏற்படும் வார்த்தைப்படுத்தமுடியாத இறையுணர்வால் ஆட்கொள்ளப்பட்டு ஏசுவே தேவன் என்று அவர் கொள்கைகளைப் பின்பற்றுவது வேறு. மாறாக, நீங்க கும்புடறெதெல்லாம் கல்லு. அதால பேச முடியுமா? என்று அபத்தமாக அமெச்சூராகப் பேசி எங்க தேவன் அதப்பண்ணாரு இதப்பண்ணாரு என்றால் எரிச்சலாக வருகிறது. நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் - என்னவொரு ஆழமான வரி. நாதன் நம்முள் இருக்கிறான், நட்ட கல் ஏன் பேச வேண்டும்?
மதம் மாற்றப்பட்டவர்களும், நான் ஆண்டவருக்காக வீட்டில் எல்லோரையும் சமாளித்தேன். பிசாச கும்பிடமாட்டேன் என்று ரொம்ப அறிவாளியாகப் பேசுவார்கள். நீங்கள் என்ன ஆண்டவருக்காகப் பண்ணுவது? எங்கும் நிறை பரம்பொருள் நம்மை நம்பியா இருக்கிறான். அவனருளால் அவன் தாள் பணிந்து என்கிறார் மாணிக்கவாசகர். அவன் தாள் பணிவதற்கும் நமக்கு அவன் அருள் வேண்டும். மாறாக நாம் ஆண்டவருக்கு அருள் புரிவதாகப் பேசிக்கொண்டு அலைகிறோம்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், பைபிளைப் பற்றி ஓயாமல் நம்மிடம் பேசும் யாரும் அதைக்கடைப்பிடிப்பவர்களாக இல்லை. நான் சிலையக்கும்பிடமாட்டேன். ஏன்னா பைபிள்ள அப்டிதான் இருக்குஎன்று சொல்லும் கொலீக்ஸ், பக்கத்து வீடுகளைப் பார்த்திருக்கிறேன் ஆனால் நான் என் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்குச் செலவழிக்கிறேன். ஏனென்றால் பைபிளில் அப்படித்தான் இருக்கு என்று சொல்லும் அண்டை அயலாரை நான் இன்னும் பார்க்கவில்லை. அமைதியாக தங்கள் காரியங்களைக் கவனித்துக்கொண்டு தம்மால் இயன்றதைத் தேவைப்படுபவர்களுக்குச் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தும் கிறித்துவர்கள் ஆண்டவரின் பெயரை அனாவசியமாகப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு இல்லை மாறாக அவர்கள் வாழ்க்கையைப் பார்த்தே மக்கள் அவர்களை எடைபோடுகிறார்கள்.
இறுதியாக - கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதே எல்லா கடவுளர்க்கும் பொருந்தும். ஆழமான நீர்நிலை அமைதியாக இருக்கும். அவசரப்பட்டு ஆண்டவனைப் பற்றி பேசிவிடாமல் இருக்க ஆண்டவன்தான் அருள்புரிய வேண்டும்.
2 comments:
"O jesus...pls save me from your beleivers...." in my 34 years life under the roof my eyes never saw a christian who is good in deeds...In fact they will be the culprits...
very very true!!
Post a Comment