சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தனுஷ் ஆகியோர் ரஜினியின் புகழைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய முற்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதில் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவை சொல்வது சரிதான். ரஜினியின் மகள் என்ற பேனர் இல்லாமல், ஐஸ்வர்யாவால் டைரக்ஷன் சான்ஸ் வாங்கமுடியுமா? அல்லது சவுந்தர்யாவால்தான் இந்த அனிமேஷன் வாய்ப்புகளைப் பெற முடியுமா?
ஆனால் தனுஷின் நிலையே வேறு. அவர் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்வதற்கு முன்பே 3 ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டார். நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கும் திறமையான நடிகர். இவற்றுக்கும் இவர் ரஜினியின் மருமகன் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரஜினியின் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் அவர் இல்லை. இருப்பினும் அவர் ரஜினியின் மருமகனாக பார்க்கப்படுவதான உணர்வு அவருக்கு எப்போதும் இருக்கிறது. (சினிமாவில் நீங்கள் ரஜினியின் வாரிசா? - இல்லை நான் கஸ்தூரிராஜாவின் வாரிசு). பெப்சி உமா ஷோவில் திருமணமான புதிதில் - ஐஸ்வர்யா எப்படி இருக்காங்க? - ஏன் அவங்களப் பத்தியே கேக்குறீங்க. என் அம்மா அப்பா அண்ணா பத்தி கேளுங்க -புதுசா கல்யாணமான எந்த ஆணிடமும் மனைவியைப் பத்திதான் கேப்பாங்க தனுஷ். இது நீங்கள் ரஜினி மகளைத் திருமணம் செய்ததால் வந்த கேள்வி அல்ல.
தனுஷ் எப்போதும் இப்படியொரு தன்னுணர்வுடன் இருப்பதற்கு ஹைப்பர்கேமி தான் காரணம் - அதாவது நம்மை விட வசதியானவர் வீட்டில் பெண்ணெடுப்பது. எப்படி பார்த்தாலும் தற்சமயம் பொருளாதார ரீதியில் ரஜினியை விட தனுஷ் குறைவுதான். இதே தனுஷ் கமலஹாசனின் மகனாகவோ அல்லது ஒரு பெரிய குடும்பத்து - ஏவிஎம், டிவிஎஸ் etc etc - பிள்ளையாகவோ இருந்தால் யாரும் தனுஷை மாமனார் பெயரைப் பயன்படுத்துவதாக குறை சொல்லமாட்டார்கள்.
தனுஷ் இப்படியொரு ஹைப்பர்கேமி காம்ப்ளக்ஸில் தவிக்க வேண்டியதில்லை. கொலவெறி வெற்றிக்குப்பின் ஒரு வட இந்திய பேட்டியில் அவர் சொல்கிறார் - நல்ல வேளை இனிமேல் யாரும் என்னை ரஜினியின் மருமகன் என்று அடையாளப்படுத்த மாட்டார்கள். கவலைப்படாதீர்கள் தனுஷ் - உங்கள் திருமணத்திற்கு முன்னரே நீங்கள் உங்களை நிருபித்துவிட்டீர்கள்.
1 comments:
நீங்க தனுஷ் ரசிகை தான்...நாங்க ஒத்துக்குறோம்...ஆனால் எவ்வளவு தான் ஹிட் படங்களை கொடுத்தாலும் field இல் நிலைத்து நிற்பதற்கு ரஜினியின் நிழல் தேவை படத்தான் செய்கிறது...அது உண்மை என்றாலும் கூட என்ன தவறு??? மருமகன் தானே??? அனுபவித்து போகட்டுமே...பிரேமா
Post a Comment