இங்கிலாந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜான் லார்கின்ஸ் என்ற கம்பெனி நுரையீரல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கான ட்ரீட்மெண்ட்டில் இஞ்சியின் பயன்பாட்டைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், அது தங்களுடைய அரிய கண்டுபிடிப்பு என்பதால் அதற்கு பேட்டன்ட் வழங்க வேண்டும் என்றும் யு.கே. பேட்டன்ட் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக இருமலுக்காகவும், ஜலதோஷத்துக்காகவும் நாம் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் நமக்கு இருமல் இருந்தால் சின்ன வயசில் அம்மாவின் இஞ்சிக் கஷாயம், கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் டீன் ஏஜ் ஸ்டேஜில் கஷாயம்லாம் குடிக்க முடியாது என்று சொல்லும் பருவத்தில் சரி இஞ்சி டீயாவது குடி என்பார்கள் தாய்மார்கள். அப்புறம் இஞ்சி மொரப்பா என்று ஒரு இஞ்சி மிட்டாய், மும்பையில் அட்ரக் சாய் என்ற பெயரில் இஞ்சி டீ- சளித்தொல்லைக்காக இவற்றையெல்லாம் காலங்காலமாக நாம் சாப்பிட்டு வருகிறோம். இதற்கு பேட்டன்ட் கேட்டு விண்ணப்பிப்பது ஒரு அன்னிய நாடு.
நல்ல வேளை - சரியான சமயத்தில் (அதாவது பேட்டன்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டே வாரத்தில்) இந்திய CSIR மற்றும் Dept. of Ayush தலையிட்டு இந்தியாவின் பாரம்பர்ய மருந்து இது என்பதை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவப்புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கியிருக்கிறது. அதனால் பேடன்ட்டும் மறுக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் உஷாரா இல்லன்னா நம்ம இட்லி, பொங்கல், மண்பானை எல்லாத்துக்கும் பேட்டன்ட் வாங்கிடுவானுங்க போல
9 comments:
Adapavingala !!
Thank u Aparnaa for all ur comments. its really encouraging. thank u once agn fr reading n commenting
மாலா நீங்க ஒரு ஆராய்ச்சி மாணவி....நீங்க ஏதாவது ஒரு work பண்ணிட்டு அதை publish பண்ணாம வீட்டுக்குள்ள பூட்டி வச்சுட்டு இருக்கீங்க ...நான் அதை அப்படியே காபி பண்ணி publish பண்ணிட்டேன் அப்படின்னு வச்சுக்கோங்க ...நீங்க publish பண்ணாதது தான் தப்பு..நான் காபி பண்ணினது கிடையாது...இப்போ ஒருவேளை நம்ம 18th நூற்றாண்டு கண்டு பிடுச்சதுக்கு சரியான ஆதாரம் இல்லனா??? நீங்க intellectual property rights office ல போயி உங்க பாட்டி இஞ்சி கஷாயம் போட்டு குடுத்த கதையை விளக்க வேண்டியது தான்.... புருஷன் தன்னோட மனைவிகிட்டயே DNA proof வாங்கிட்டு தன்னோட குழந்தையை ஏத்துக்கிற காலம் இது.....பிரேமா
sari vidunga prema - ippavae poi patti sutta vadai la arambichu kashayam, kanji, karuvadu yellathukum patent vangiruvom :)
பதிவுகள் miga nanru
thank u arkvivega. continue reading n commenting :)
nammoda manjal, veppilai ellathukkum ithe katha thaan...
ஒரு வேளை CSIR குறுக்கிடாவிட்டால் உரிமை அவர்களைச் சார்ந்திருக்குமோ...மேலும் பிரேமா கூறியது சரிதான் என தோன்றுகிறது..
May be u people r correct Munusamy
Post a Comment