நான் சொல்ல வருவது இதைத்தான் - நேரிலேயே ஏற்கனவே ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத பல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இவை நம்மை ஒரு விதமான குற்றமனப்பான்மைக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்குகின்றன. அவற்றையே மீண்டும் போய் தியேட்டரிலும் பார்க்கும் மனவலிமை நிச்சயம் எனக்கு இல்லை. why should i relive my same stress again in அங்காடித்தெரு?
தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கம்மி என்பது நமக்குத் தெரியாதா? இப்போதைக்கு எதைப்படித்தாலும் வேலை வாய்ப்பு கம்மிதான். 3 வேளை சாப்பிடவும், தங்க இடமும் இல்லாத எத்தனையோ மாணவர்களை நான் அறிவேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. பணத்துக்கு என்ன பண்ணனு தெரியல என்று கண்ணீர் விட்ட மாணவ சகோதரர்களை எனக்குப் பர்சனலாகத் தெரியும். நேற்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த வெவ்வேறு செய்திகள் -
- சென்ற வருடம் படிப்பை முடித்த ஒரு ஏரோநாட்டிக் இன்ஜினியர் வேலை கிடைக்காமல் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க முயற்சி.
- BL மாணவன் வழிப்பறி கொள்ளை
- கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்
இதை ஒரு 3 மணி நேரம் படமாகப் பார்க்க வேண்டுமா?
படம் என்பது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தைக் கொஞ்ச நேரமாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைவர் ரஜினி வேலையில்லாப் பட்டதாரியாக லெதர் பேண்ட், ரேபான் கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை தேடுவார், கதாநாயகி - உனக்குத்தான் வேறு வேலையில்லையே என்னைக்காதலி- என்று பாடியாடுவார். உடனே தலைவர் சர்ட்டிபிகேட் ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு காதல் செய்யத்துவங்கிவிடுவார். கட்டாயம் பின்னொரு நாளில் ஏதாவது வேலை கிடைத்துவிடும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை. படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். உண்மையிலேயே அந்நாளையப் படங்களுக்காக மனம் ஏங்குகிறது.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிலுவை, பூணூலைத் தூக்கிப்போட்டுவிட்டு போவதோடு படத்தை முடித்து விட்டார். அதற்கு பிறகு அவர்கள் எவ்வளவு கஷ்டப்படார்கள் என்பதை நான் காண்பிக்கிறேன் என்று கிளம்பும் இயக்குன நண்பர்களே - அவர்கள் நாய்படாத பாடு படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுடைய காதல் கணவன் dowry harassmentக்காக ஜெயிலில், டாக்டர் மகளின் காதல் கணவனை pwdல் வேலை பார்க்கும் என்ஜினியர் ஆள் வைத்துக் கொன்றார் etc etc etc...................................). இந்தப்பாடுகளைப் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் தினமும் பார்க்கிறோம். And they lived HAPPILY everafter என்பதை திரைப்படத்திலாவது பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.
2 comments:
வாங்க மாலா...!
எப்டி இருக்கீங்க..! :) :)
சில நேரம் எனக்கும் FANTASY படம் பாக்கணும் போல இருக்கும்...
ஆனா அதையே பாக்க முடியாதே? :(
எல்லா சுவையும் இருக்கிற உணவு மாதிரி இதையும் எடுத்துக்க வேண்டியதுதான்
ஹாஆஆய் லெமூரியன் நெடுநாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கமெண்ட்டுக்கு நன்றி. வழக்கம் போல் மேலும் எழுதுவதற்கான ஆர்வத்தை உங்கள் கமெண்ட் அளிக்கிறது. :)
Post a Comment