Tuesday, August 24, 2010

சில சந்தேகங்கள்

எனக்கு பிள்ளைகள் (வயது 3 மற்றும் 5 ) விஷயத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. யாராவது தீர்க்க முடியுமா? இதோ சந்தேகங்கள்
1. பள்ளி செல்ல வேண்டிய தினங்களில் காலை 7.45 வரை தூங்கி நம்மை டென்ஷனாக்கும் பிள்ளைகள் எப்படி சனி,ஞாயிறு அன்று நாம் எழுப்பாமலேயே 6 மணிக்கு எழுகிறார்கள்?
2. 2 வருடங்களுக்கு முன்னால் வாங்கப்பட்ட, உடைந்த, எதற்கும் உதவாத , ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொம்மை எப்படி இரு பிள்ளைகளுக்கும் ஒரே சமயத்தில் கட்டாயம் தேவைப்பட்டு சண்டை ஏற்படுகிறது?
3. எப்படி நாம் ஃபோன் பேசும் போது அல்லது சாப்பிடும் போது அல்லது யூனிபார்மை மாட்டிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு டாய்லெட் வருகிறது?
4. காலை முழுவதும் நாம் தேடி, நம்மால் கண்டுபிடிக்க இயலாத பென்சில் சீவும் ஷார்ப்பான கத்தி எப்படி மாலையில் இளைய பிள்ளையின் (3 வயது) கையில் விளையாடக் கிடைக்கிறது?
5. நாமெல்லாம் படிக்கும் போது பள்ளிக்கூடம் முழுநேரம் தானே??? இப்போது மட்டும் ஏன் அரை நாள்? என்னாஆஆஆஆஆ வில்லத்தனம்

4 comments:

S.Lankeswaran said...

ம் ரொம்ப நொந்து போயிட்டீங்க போல....
இப்பதான் என்ற பொடியன் 8மாதம் நானும் இனி புலம்பத் தொடங்கனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு வேலை வெளிநாட்டு சதியா இருக்குமோ?

பாலாஜி சங்கர் said...

ஒரு வேலை வெளிநாட்டு சதியா இருக்குமோ?

அமாங்க !

இதுல பாகிஸ்தானின் கை மறைந்துள்ளது

Sandy said...

On reading this, Anand said..

All the above are on the way to us.

Be ready!

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes