Tuesday, November 16, 2010

தீபாவளியும் அப்பாவின் செல்லப்பெண்ணும்

நீண்ட நாட்களுக்குப்பின் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. School van 5 நிமிடம் தாமதமாக வந்த்து. டென்ஷனாகிவிட்டேன் leave announce பண்ணிவிடுவார்களோ என்று. அப்புறம் rain outside the house and storm in the house ஆகிவிடுமே. நல்ல வேளை - கடவுள் தம்மை நம்புபவரை ஒரு போதும் கைவிடுவதில்லை ;). van வந்துவிட்டது. Coming to the point தீபாவளி இனிதே கழிந்தது. தீபாவளிக்கு என் பெண்ணிற்கு ஒரு க்ரீம் கலர் கவுன். Princess Dress மாதிரி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டாள் என் மகள். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன் அந்த ட்ரஸஸை வாங்கியிருந்தோம். தினமும் ஸ்கூல் விட்டு வந்த்தும் ஒரு முறை அந்த ட்ரஸஸை எடுத்துப் போட்டுப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்று அவள் நினைக்கும் நேரம் டப்பாவைத் திறந்து ஆடையைத் தடவிப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் பார்ப்பதை அவள் கவனித்து...

Wednesday, October 6, 2010

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்

வேளச்சேரியில் உள்ள உணவகங்களில் உங்கள் வீக் எண்டைச் சுவையான உணவோடு கழிக்க எந்த உணவகம் ஏற்றது என்பதற்கு ஒரு கைட்லைன் கொடுக்க விருப்பம். இங்கு சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட் துவங்கி (Noodle house), Parfait 3 Bistro, Pizzaurant, Dominoes, McDonald என உலகை ஒரு வலம் வந்து, Kumarakom (Kerala Speciality), Kalinga Court (Andhra), The Dhaba (Punjabi) என்று இந்திய மாநிலங்களில் புகுந்து புறப்பட்டு, Nalas, அஞ்சப்பர், காரைக்குடி, ரத்னா கபே என்று கடைசியாக ஆனந்த பவன் என்று நம் அடையாறில் வந்து முடிகிறது (அதாங்க நம்ம அடையார் ஆனந்தபவன் :) ) இவைகளில் கிடைக்கும் உணவு வகைகள், அவற்றின் சுவை மற்றும் Hospitality ஐப் பற்றி ஒரு report இதோ :முதலில் The Dhaba: இங்கு சென்றவுடன் முதலில் ஒரு மண் குடுவையில் ஏதோ ஒரு பானம் தருகிறார்கள். கிட்டத்தட்ட புளித்தண்ணி மாதிரி. கடைசி வரை புளியைத்...

Monday, October 4, 2010

பணமும், பணக்காரர்களும்

பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவில் மதிக்கப்படுகின்றனர். வேறெவரும் இங்கே மதிக்கப்படுவதில்லை - ஒரு சமீபத்திய சர்வேயின் முடிவுகள். இது டைம்ஸ் ஆஃப் இண்டியா நியூஸ்பேப்பரில் சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இதனோடு நான் ஒரு வரியைச் சேர்க்க விரும்புகிறேன் : இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கும், நான் பணம் படைத்தவள் என்பதைக் காட்டிக் கொள்கிறவர்களுக்குமே மதிப்பு. இக்கருத்திற்கு நான் ஒரு ஆதாரத்தையும் தர விரும்புகிறேன். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன் நாங்கள் மும்பையில் வசித்தபோது நடந்த ஒரு சம்பவம் - இதுவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தான் வெளியிடப்பட்டது. ஒரு டாக்டர் உ.பி மாநிலத்திலிருந்து மும்பையைச் சுற்றிப்பார்க்க வந்தார். சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்து, படித்து (படிப்பால் மட்டுமே) மருத்துவர் ஆனவர். அவருடைய தாயாருக்கு புகழ் பெற்ற தாஜ் ஹோட்டலுக்குச்...

Tuesday, September 28, 2010

பெற்றோரின் திகில் நிமிடங்கள்

3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுபவிக்க நேரும் திகில் நிமிடங்கள் இவை.1. சாயங்காலம் 5 மணிக்குப் பிள்ளை தூங்கத் துவங்கும் போது நமக்கு வயிற்றுக்குள் பயப்பட்டாம் பூச்சிகள் பறக்கும். ஏனெனில் மாலை 5 மணிக்குத் தூங்கும் பிள்ளை இரவு 12 மணிக்கு ஃப்ரஷ்ஷாக எழுந்து தோசை அல்லது சப்பாத்தி கேட்கும். அப்புறம் காம்ப்ளான் கேட்கும். அப்புறம் ஒரு round toilet போய் முடிக்கும். பிறகு உற்சாகமாக விளையாடத் துவங்கும். மறுபடி அவர்கள் தூங்க நள்ளிரவு 2 ஆகிவிடும்.நாமும் 2 மணிக்குத் தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்து - அப்பா சொல்லும் போதே கண்ணக் கட்டுதே2. கடையில் நாம் interestஆக shopping செய்து கொண்டிருக்கும் போது பிள்ளைகளுக்கு bathroom வரும் போது - ஏனெனில் நாம் toilet எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்து போவதற்குள் வழியிலேயே எல்லாம் ஆகிவிடுமோ என்று. (ஏம்ப்பா கடை முதலாளிகளே, அது ஏன் toiletஐ உங்கள் கடையின் பிரம்மாண்டமான...

Thursday, September 23, 2010

ஆயிரம் வருட அற்புதம் - பெரிய கோயில்

சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலைச் சென்று பார்க்கும் பெரும் பேறு பெற்றேன். பெரிய கோவிலை நான் மறைவதற்குள் தரிசிக்க வேண்டும் என்பது என் பேரவா. வாசுவால் அது நிறைவேறியது. ஆயிரம் வருட அந்த அற்புதத்தைத் தரிசிக்க கண் கோடி வேண்டும். கேரளாந்தக நுழைவாயில்கோவிலின் வாசலில் இறங்கியவுடன் தென்படும் மதில் சுவரும் கேரளாந்தக நுழைவாயிலும் காண்போரை 1000 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச்செல்கின்றன. அங்கிருந்தே ஒரு time machineல் ஏறி 1000 வருடங்கள் பின் சென்ற உணர்வுடன் தான் உள்ளே நுழைந்தேன்.உள்ளே சென்றவுடன் சட்டென்று என்னைத்தாக்கிய உணர்வை எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நெடிதுயர்ந்த , கம்பீரமான இறைவன் குடி கொண்டுள்ள அந்த ஸ்தலம் , மனித மனத்தில் உள்ள 'நான்' என்ற அகந்தையை அடித்து நொறுக்குகிறது. கண்ணில் நீர் மல்கி நிறைந்து நிற்கிறது. மனம்...

Wednesday, September 15, 2010

ஒரு சாமான்யனின் இயலாமை கோபம்

நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினியின் முள்ளும் மலரும், ஜானி, படிக்காதவன், குரு சிஷ்யன், தளபதி முதல் சந்திரமுகி வரை (சிவாஜி பார்க்கவில்லை) பார்த்தாயிற்று. ஜானியைப் போன்றதொரு இனிமையான, டீசன்ட்டான ரொமாண்டிக் படம் இன்னும் வரவில்லை. ஆனால் எந்திரன் பார்க்கப் போவதில்லை என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டேன். காரணம் 'சன் பிக்சர்ஸ்'. அவர்களின் தொடர்ச்சியான விளம்பரம் வெறுப்பை ஏற்படுத்துகின்றதென்றால் அக்குடும்பத்தின் அனைத்து துறைகளிலுமான ஆக்டோபஸ் ஆக்கிரமிப்பு அக்குடும்பத்தின் மேல் ஒரு aversionஐயே ஏற்படுத்திவிட்டது. கலாநிதி மாறன், உதயநிதி, துரை தயாநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அந்த நிதி, இந்த நிதி - இவர்கள் கடும் உழைப்பால் மட்டும் இவர்களின் கம்பெனியைத் துவங்கவில்லை, நடிக்கத்துவங்கவில்லை. மாநிலத்திலும், மத்தியிலும் இவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நினைத்தவுடன் ஒரு படத்தைத் தயாரித்து முடிக்கின்றனர். தங்களது...

சினிமாப் பாடல்கள்

சில சினிமாப் பாடல்களை எப்போது கேட்கும் போதும், அப்பாடலை நான் முதன் முதலில் கேட்க நேர்ந்த நேரத்தின் குறிப்பிட்ட காட்சிகள் மனதிற்குள் நிழற்படமாய் மறுபடி, மறுபடி தோன்றும். அச்சந்தர்ப்பத்தில் நான் இருந்த மனநிலைக்கும் - அது மகிழ்ச்சியோ, சோகமோ - மறுபடியும் செல்ல நேரிடுகிறது. நாங்கள் முன்பிருந்த லைன் வீட்டின்(கிட்டத்தட்ட 10 வீடுகள் ஒரே வரிசையில் இருக்கும். கொடுமைங்க அது) தெரு முனை டீக்கடையில் ரேடியோ இருக்கும். காலையிலேயே விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு உச்சஸ்தாயியில் அலறும். 'ஒரு கிளி உருகுது', 'ஓ மானே மானே', 'விக்ரம்' பாடல்களை இப்போது கேட்கும் போதும் அக்கடையில் நாங்கள் வாங்கிச்சுவைத்த வெங்காய பக்கோடாவின் சுவை நாவில் வருகிறது. சிந்துபைரவி பாடல்கள் பக்கத்து வீட்டு செந்திலக்காவை (அக்கா தான். அவர்களின் முழுப்பெயர் செந்தில் செல்வி) நினைவூட்டும். அந்தப்படம் வந்த புதிது. பாடல்கள் மெகா ஹிட். நான்...

Monday, September 13, 2010

மனிதம்?

ஒரு சாயங்கால வேளை. பிள்ளைகள் இருவரும் போர்ட்டிகோவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரின் சைக்கிள்களும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு பறந்து பொண்டிருந்தன. நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அம்மா பொம்மைகள் விற்றபடி வந்து கொண்டிருந்தார். தலையில் ஒரு கூடை. கூடையின் பார்டரில் நீளமான குச்சிகள் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு குச்சியின் உச்சியிலும் களிமண்ணாலான பொம்மைகள். பிள்ளையார், கங்கையைத் தலையில் தாங்கிய சிவபெருமான், பார்க்கடலில் பள்ளிகொண்ட நாராயணன், அம்மன் இப்படி பெரிய பொம்மைகள். நடுவே ஒரு டால்ஃபின் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தது. என் மகனின் ஃபேவரைட் இந்த மீன்கள். டிஸ்கவரி தொ.கா வில் எந்நேரமும் இதைத்தான் பார்ப்பான். பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளில் மட்டுமே விளையாடும் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு மண் பொம்மையில் விளையாடும் சுகம் தெரியவேண்டும் என்று நினைக்கிறேன். (எலக்ட்ரானிக் விளையாட்டு...

Monday, September 6, 2010

பிள்ளைகளிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

பின்வரும் கேள்விகளைப் பிள்ளைகளிடம் (வயது 3 மற்றும் 5) கேட்பதைக் கட்டாயம் தவிருங்கள். மீறி நீங்கள் கேட்டால் வரக்கூடிய பின்விளைவுகளைக் கொடுத்துள்ளேன்.ரெஸ்ட்டாரண்ட்டில் இருக்கும்போது - உனக்கு ஜூஸ் வேணுமா அல்லது ஐஸ்க்ரீம் வேணுமா? (முடிவில் இரண்டையும் வாங்கிக்கொடுத்துவிட்டு கூடவே Benadryl மற்றும் Chericofஐயும் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப நேரிடும்)ஞாயிற்றுக்கிழமையன்று - இன்று எங்கே போகலாம்? (மூத்தது சிட்டி சென்டர் ப்ளே ஏரியா என்று சொல்லும்; இளையது பீச் என்று சொல்லும். முடிவில் சண்டையைச் சமாளிக்க முடியாமல் கோவிலுக்குப் போய் குடும்ப ஒற்றுமைக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு செல்வீர்கள்)அக்கா படிக்கிறால்ல நீயும் படிக்கலாம்ல? என்று இளையபிள்ளையிடம் (Bubbles, Pepper புத்தகங்களை 1001வது முறையாக நீங்கள் வாசித்து கதை சொல்ல நேரிடும். பிள்ளை ABC, 123 எல்லாம் படிக்காது. எனவே இந்தக்கேள்வி 'நமக்கு நாமே ஆப்பு...

Saturday, September 4, 2010

டாக்டர் ஃபீஸ்

சிக்குன்குனியா வந்திருந்த சமயம் (அது சிக்கனா, சிக்குனா?). எல்லா jointsலும் சரியான வலி. ஒரு spoonஐக்கூடப் பிடிக்க முடியவில்லை. மாடி வீட்டு நைனு அம்மா, எதிர்த்த வீட்டு மாமி, பக்கத்து வீட்டு 5ஆம் வகுப்பு படிக்கும் பப்லு எல்லோரும் சிக்குன்குனியா வந்தா அப்டித்தான் வலிக்கும் என்றனர். ரைட் விடு. பொறுத்துக்க வேண்டியதுதான் என்று விட்டு விட்டேன். என் தம்பி அப்பு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு அன்று வந்தான். எனக்கு ஃபீவர் சரியாகி 2 வாரங்கள் இருக்கும். ஆனால் வலி அப்படியேதான் இருந்தது. அதற்காக வீட்டிற்கு வந்த பையனைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப முடியுமா? இந்த சமயங்களில் என் கணவர் வாசு சரவணபவன், அஞ்சப்பர், மெக்டொனால்ட்ஸ் என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். எனக்கும் வாங்கிக் கொண்டுவந்து விடுவார் (அவரு ரொம்ப நல்லவரு). பேசாம அப்புவுக்கும் ஏதாவது ஆர்டர் பண்ணிடலாம் என்றார். அதெல்லாம் முடியாது,...

Friday, September 3, 2010

புத்தகப் பரிந்துரை

25 வருடங்களுக்கு முன், என் சிறு வயதில் தொலைக்காட்சி ஒரு ஆச்சரியமான விஷயம். எங்கள் தெருவில் 2 வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. எதிர்த்த வீட்டு சிங்கப்பூர் முஸ்லிம் பாய் மற்றும் ஒரு செட்டியார் வீடு. வெளியே ஆடிக் களித்து வீடு திரும்பும் பிள்ளைகள் வீட்டில் புத்தகங்களையே பொழுதுபோக்கிற்கு நம்பி இருந்தோம். அப்படித் துவங்கிய வாசிக்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு வகையான புத்தகங்கள்பிடித்திருந்தன, வழிநடத்தின. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.6 வயதிலிருந்து - 12 வயது வரைபூந்தளிர் : இந்தப் புத்தகம் வாரமொருமுறை வந்து கொண்டிருந்தது. காக்கை காளி, கபீஷ் குரங்கு, மதியூகி மந்திரி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, ஹரீஷ், சிறுவர் மலரில் பலமுக மன்னன் ஜோ இந்தக் கதாபாத்திரங்கள் மனதைக் கொள்ளை கொண்டு சென்றன. கோகுலத்தின் 16 பக்க நடுப்பக்க வண்ணக்கதை,...

Thursday, September 2, 2010

விஜய் படம்

தோழர் ரமேஷ், பொழுது போவதற்கு வழி கேட்டால் நானே போவதற்கு வழி சொல்கிறீர்களே??!! இது நியாயமா? விஜய் படம் பார்ப்பதற்கு மனதில் தெம்பில...

Monday, August 30, 2010

என்ஜினியரிங் காலேஜ்

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டு ஆரம்பம். முதல் நாள் வகுப்பு எடுத்து முடித்து விட்டு வெளியே வந்தேன். மணிப்பிரவாள நடை மாணவர்களின் கவனத்தைப் பாடத்தில் குவியச் செய்யும் என்பதால் தமிழும், ஆங்கிலமும் கலந்து பாடம் எடுப்பது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். வகுப்பு முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு மாணவர் அவசரமாக என்னைப் பின்தொடர்ந்து வெளியே வந்தார். 'மேடம் தமில் டோனோ. ஒன்லி இங்கிலிஸ் (Tamil don't know, only english)' என்றார். "Ok. I will take only in English hereafter" என்று சொல்லிவிட்டு வந்தேன். அதே போல் செய்தேன். முதல் internal பரிட்சை முடிந்தது. அப்போது தான் தெரிந்தது அந்த மாணவனுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை என்பது. டிபார்ட்மென்ட்டிற்கு அழைத்துப் பேசினேன். மிகவும் பிற்பட்ட ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். தமிழ் தெரியாது. பிராந்திய மொழியில் பள்ளி வகுப்புகளை முடித்திருக்கிறார். எனவே ஆங்கிலமும்...

Friday, August 27, 2010

பொழுது போகாத பொம்மு

எதிர்பாராவிதமாக எனக்கு ஒன்றரை மாதம் விடுமுறை கிடைத்தது. ஒரு வார விடுமுறை எதிர்பார்த்ததுதான். ஆனால் அது ஒன்றரை மாதமாக நீண்டு விட்டது. முதல் ஒரு வாரம் பிரமாதமாக கழிந்தது. காலை எட்டரை மணிக்குள் கணவன், பிள்ளைகள் அனைவரும் கிளம்பி விடுவர். பின்னர் நீண்டு கிடக்கும் பகல் பொழுது முழுவதும் எனக்கே எனக்கு. நிதானமாக 10.30 மணிக்கு டிஃபன், சாப்பிட்டானதும் மீண்டும் ஒரு காஃபி, குறுக்கீடுகள் ஏதுமின்றி தொலைக்காட்சி - என் கையில் ரிமோட்டுடன். என் இஷ்டம் போல் சேனல் மாற்றி மாற்றி என்ஜாய் செய்து கொண்டிருந்தேன். பின்னர் சமையல் குறிப்புகளைப் பார்த்து வெரைட்டி சமையல். மதியம் மகன் வந்தவுடன் அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கப் பண்ணிவிட்டு மீண்டும் தொ.கா. ஒரு குட்டித் தூக்கம். இப்படியாக ஒரு உப சொர்க்கத்தைச் சிருஷ்டித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு வாரம் முடிந்தது. சேனல்கள் கடுப்படித்தன. டாக் ஷோக்களில்...

நன்றி

என் வலைப்பதிவுகளை வாசித்து கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து, உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறே...

முதல் மனைவிகளும் அவர்களின் குழந்தைகளும்

சென்ற வார இறுதியில் பிரகாஷ்ராஜ், போனிவர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியதாம். அவர்கள் இருவரும் Made for each other ஆக காட்சி அளித்தார்களாம் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்). விஷயம் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியின் குழந்தைகள் பற்றியது. இரு குழந்தைகளும் அங்கு ஆஜர். ஒரு மாதிரி அரைப்புன்னகை புரிந்தபடி மூத்த மகள். என்ன உணர்வை வெளிப்படுத்தவென்று தெரியாத குழப்பம் அந்த முகத்தில். ஒரு 15, 16 வயது பிள்ளையிடம் 'இவர் தான் உன் புதிய தாய்' என்று அறிமுகப்படுத்துதல் என்ன மாதிரியான மனப்பாதிப்பை ஏற்படுத்தும்?? வற்புறுத்தி வரவழைக்கப்பட்ட சோகமோ என சந்தேகிக்க வைக்கிறது அந்த குழந்தையின் முகபாவம். இதே போல் மற்றொரு செய்தி - பிரபுதேவாவின் மகன் 'அப்பா அம்மாவைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கதறல்' (நன்றி - குமுதம்). இந்த செய்தியைப் படிக்கும் போது அந்தக்குழந்தையின் மனநிலை எனக்குப் பதற்றத்தைத்...

Tuesday, August 24, 2010

சில சந்தேகங்கள்

எனக்கு பிள்ளைகள் (வயது 3 மற்றும் 5 ) விஷயத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. யாராவது தீர்க்க முடியுமா? இதோ சந்தேகங்கள்1. பள்ளி செல்ல வேண்டிய தினங்களில் காலை 7.45 வரை தூங்கி நம்மை டென்ஷனாக்கும் பிள்ளைகள் எப்படி சனி,ஞாயிறு அன்று நாம் எழுப்பாமலேயே 6 மணிக்கு எழுகிறார்கள்?2. 2 வருடங்களுக்கு முன்னால் வாங்கப்பட்ட, உடைந்த, எதற்கும் உதவாத , ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொம்மை எப்படி இரு பிள்ளைகளுக்கும் ஒரே சமயத்தில் கட்டாயம் தேவைப்பட்டு சண்டை ஏற்படுகிறது? 3. எப்படி நாம் ஃபோன் பேசும் போது அல்லது சாப்பிடும் போது அல்லது யூனிபார்மை மாட்டிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு டாய்லெட் வருகிறது?4. காலை முழுவதும் நாம் தேடி, நம்மால் கண்டுபிடிக்க இயலாத பென்சில் சீவும் ஷார்ப்பான கத்தி எப்படி மாலையில் இளைய பிள்ளையின் (3 வயது) கையில் விளையாடக் கிடைக்கிறது?5. நாமெல்லாம் படிக்கும் போது பள்ளிக்கூடம் முழுநேரம் தானே??? இப்போது...

Thursday, August 19, 2010

என் மகன் படிக்கும் Pre.K.G

மகளுக்கு மன்த்லி டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்து விட்டது. கணக்கில் நூற்றுக்கு நூறு. பந்தா பண்ணுகிறேன் என்று எண்ணி விடாதீர்கள் நண்பர்களே. அதே மகள் ஹிந்தி டிக்டேஷனில் பத்துக்குப் பூஜ்யம். (அவளுடைய தாத்தா - என் மாமனார், அந்நாள் தி.மு.க அபிமானியாம். ஒரு வேளை ஹிந்தி எதிர்ப்பு அவள் ரத்தத்திலேயே இருக்கிறதோ ;) ). வாசு கணக்கில் மகள் எடுத்த மார்க்குக்கு கிஃப்ட் வாங்கித் தருவோம் என்றார். ஒரு கொலுசு வாங்குவோம் என்றேன் நான். யார் சொன்னார், 'இந்த விலைக்குத் தங்கம் விற்றால் மக்கள் எப்படி வாங்குவார்?' என்று. கூட்டமோ கூட்டம் நகைக்கடையில். கஸ்டமரைக் கவனியுங்கள் என்று சூப்பர்வைஸர் சொல்லி அந்தப் பக்கம் சென்றவுடன் சேல்ஸ் பெர்ஸன் வெறியோடு நம்மைக் கடித்துக் குதறுகிறார். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீண்ட வேலை நேரம், குறைந்த இடைவேளை மற்றும் சம்பளம். அவர்களால் அப்படித்தான் நடந்து கொள்ள இயலும். கொலுசைத் தேர்ந்தெடுத்து வாங்கி...

Wednesday, August 18, 2010

மகள்

வாசுவுக்கு 2 கால்களிலும் வலி. காலைத் தரையில் ஊன்றவே முடியவில்லை. ankleல் வலி. டாக்டரைப் பார்க்கச் சென்றோம். வலி எந்த இடத்தில் என்று அழுத்திப் பார்த்தார். சரியான இடத்தில் அழுத்திய போது வலியில் துடித்து விட்டார். டாக்டரைத் திட்ட முடியாமல் உர்ரென்று நின்று கொண்டிருந்தேன். பொதுவாக இந்த வலி ஸ்போர்ட்ஸ் பெர்ஸன்ஸுக்குத்தான் வரும் என்றார் டாக்டர். குறிப்பாக அத்லெட்ஸ். இவருக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறேன். ஒரு வேளை டிவியில் சேனல்க்குச் சேனல் தாவுகிறாரே அதனால் இருக்குமோ??? நீளம் தாவுதல் போல, அதுவும் தாவுதல் தானே ;). கம்மிங் டு தி பாயிண்ட் - டாக்டர் அறையில் நாங்கள் அமர்ந்திருக்கும் போது ஒரு ஆக்சிடென்ட் கேஸ். டாக்டர் உடனடியாக அடிபட்டவரைக் கவனிக்கச் சென்றார். 55-60 வயது மதிக்கக்கூடிய ஒரு பெண்மணி, டிவிஎஸ் எக்ஸலில் சென்று கொண்டிருந்த போது ட்ரக் மோதிவிட்டது. ஹாஸ்பிட்டலுக்கு மிக அருகில் தான் ஆக்சிடென்ட்....

Tuesday, August 17, 2010

விலைவாசி

நேற்று நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல நண்பர்களே. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டேன். மேட்டர் இதுதான் - அனைத்து ரெஸ்ட்டாரண்ட் பார்க்கிங் ஏரியாவிலும் ஒரு செக்யூரிட்டி நிற்பார் - மிகவும் வயதான, மிக மிக ஒல்லியாக, பொருந்தாத அளவில் யூனிபார்ஃம் அணிந்து கொண்டு நிற்பவரைக் கட்டாயம் நீங்கள் எந்த ரெஸ்ட்டாரண்ட்டின் அல்லது ஸூப்பர் மார்க்கெட் வாசலிலும் பார்க்கலாம். பார்க்கவே மனதுக்கு கஷ்டமாக இருக்கும். நம் வண்டியை எடுக்க உதவி செய்வது போல் ஏதோவொன்று செய்து கொண்டிருப்பார். (நிச்சயம் அவரில்லாமலேயே நம்மால் வண்டியை எடுத்துக் கொள்ள முடியும்). ஆனாலும் வயதானவர்கள் இப்படி ஏதாவது வேலை செய்வதைப் பார்க்கும் போது முகம் தெரியாத அவர்களின் பிள்ளைகளைத் திட்டத் தோன்றும். கைக்கு அகப்படும் சில்லறையை அவர்கள் கையில் தந்து விட்டு வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறே செய்ய நினைத்து பையைத் துழாவியதில் ரூ.2 மட்டுமே அகப்பட்டது....

Monday, August 16, 2010

வீக் எண்ட்

ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு கட்டாயம் ரெஸ்ட்டாரண்ட்டில் தான். வேளச்சேரியில் உள்ள ஒரு சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட் எங்கள் குடும்பத்தின் ஃபேவரிட் ஸ்பாட். சென்று அமர்ந்தவுடன் டேபிளில் ஏறி அமர்ந்த என் மகன், பெப்பர் பாட்டிலைத் தண்ணி டம்ளருக்குள் போட்டு ஆர்க்கிமிடிஸ் ப்ரின்ஸிப்பிளைச் சரி பார்த்தான். பின் ஃபோர்க்கை எடுத்து அப்பாவைக் குத்தி ரியாக்ஷன் பார்த்தான். ஸ்டார்ட்டர் வந்தவுடன் அதைக் குத்தி எடுத்து பாதியைக் கீழே போட்டு, அதை எடுக்கிறேன் பேர்வழி என்று டேபிளுக்கு அடியில் குனிந்து, நிமிரும் போது என் கையில் இருந்த சூப்பைத் தட்டி விட்டு டேபிளில் முட்டி - அப்பா, ஒரு நிமிடம் வெயிட் ப்ளீஸ் - எனக்கு மூச்சு வாங்குகிறது. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தோம் என்று வையுங்களேன். சென்ற மாத வுமன்ஸ் ஈராவில் (Woman's Era) படித்திருந்தேன் - கவுரவமான டிப்ஸ் என்பது பில் தொகையின் 10% - 15% என்று. ரூ.600ன் 10% எவ்வளவு என மனதுக்குள்...

Saturday, August 14, 2010

நேற்று பீட்ஸா ஆர்டர் செய்து கொண்டோம். வாரம் ஒரு முறை ஜங்க் ஃபுட் அலவ்ட். அவர்கள் ஒரு ஆஃபர் தருகிறார்கள். அதாவது ரூ.400க்கு பீட்ஸா வாங்கி, ரூ.39க்கு பாஸ்டா வாங்கி, ரூ.20க்கு குளிர்பானம் வாங்கினால் ரூ.25 மதிப்புள்ள கேக் ரூ.15க்குத் தரப்படுமாம். என்ன ஒரு ஆஃபர் ;). இதற்கு நான் ரூ.25 மதிப்பு கேக்கையே வாங்கிருவேனே என்கிறான் என் தம்பி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??? இதே போல் ஜவுளிக் கடல்கள் ஆடி சேலுக்குச் சென்றோம். ஷாப்பிங் என்றவுடன் என் மகன் வர மறுத்துவிட்டான் (வயது மூன்று ;) ). இந்த ட்ரஸ்ஸை அடுப்புத்துணியாகக் கூட பயன்படுத்த முடியாது வகையறாக்களுக்கு 50% தள்ளுபடி. மற்றவைக்கு 5% தள்ளுபடி. தெரிந்தே சில ஆயிரங்களுக்கு ஏமாந்துவிட்டு வந்தோ...

Friday, August 13, 2010

மற்றும் ஒரு நாள். குழந்தைகள் பள்ளி சென்று விட்டனர். வாசு (என் கணவர்) ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். பழைய மாவை இரண்டு தோ்சையாக ஊற்றி வேலைக்காரம்மா வரும்முன் பாத்திரத்தை விலக்கப் போட்டுவிட்டேன். காலிங்பெல் ஓசை. ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டிருந்தார்-சுத்தமாக, நேர்த்தியாக ுடை அணிந்து. பசிக்கிறது என்றார். தோசை சாப்பிடுகிறீர்களா என்றேன். சரி என்றார். ஊற்றி வைத்திருந்த தோசையைக் கொண்டு கொடுத்தேன். போர்ட்டிகோவில் அமர்ந்து சாப்பிடவா எனக் கேட்டார். ஹவுஸ் ஓனர் என்ன சொல்வாரோ என நினைத்து எதிர் மரத்தடியைக் காண்பித்து அங்கே உட்காரச் சொன்னேன். போகும் முன் மாற்று சேலையில்லை. ஒன்று வேண்டும் எனக் கேட்டார். சாப்பிட்டு வாங்க எடுத்து வைக்கிறேன். சேலை ஒன்றைக் கண்டுபிடித்து வைத்து சாப்பிட்டானதும் கொடுத்தேன். நல்லா இருக்கணும் என வாழ்த்திச் சென்றார். அதற்குள் வாசு ஆபிஸிற்குத் தயார். தோசை ஊற்றவா என்றேன். வாயெல்லாம்...

Thursday, August 12, 2010

வணக்கம்

தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம்! இன்று ஆடிப்பூரம். காலை குழந்தைகளையும், கணவரையும் வழியனுப்பிவிட்டு, புவனேச்வரி அம்மனைத் தரிசித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தால் - ஓ மை காட்! வேலைக்காரம் மா பூட்டிய வீட்டைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டார்களாம் - பக்கத்து வீட்டு பாய் வீட்டம்மா தெரிவித்தார்கள். தாயே புவனேச்வரி உன் பக்தைக்கு நேர்ந்த சோதனை. பாத்திரம் துலக்குவது அப்படியொன்றும் கடினமில்லையெனினும் ஏனென்று புரியவில்லை வேலைக்காரம்மா வராவிட்டால் 'நான் இளிச்சவாய் அதான் என்னை டபாய்க்கிறார்' என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது. உங்களுக்கும் அப்படி தோன்றுமா? சொல்லுங்கள...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes