3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுபவிக்க நேரும் திகில் நிமிடங்கள் இவை.
1. சாயங்காலம் 5 மணிக்குப் பிள்ளை தூங்கத் துவங்கும் போது நமக்கு வயிற்றுக்குள் பயப்பட்டாம் பூச்சிகள் பறக்கும். ஏனெனில் மாலை 5 மணிக்குத் தூங்கும் பிள்ளை இரவு 12 மணிக்கு ஃப்ரஷ்ஷாக எழுந்து தோசை அல்லது சப்பாத்தி கேட்கும். அப்புறம் காம்ப்ளான் கேட்கும். அப்புறம் ஒரு round toilet போய் முடிக்கும். பிறகு உற்சாகமாக விளையாடத் துவங்கும். மறுபடி அவர்கள் தூங்க நள்ளிரவு 2 ஆகிவிடும்.நாமும் 2 மணிக்குத் தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்து - அப்பா சொல்லும் போதே கண்ணக் கட்டுதே
2. கடையில் நாம் interestஆக shopping செய்து கொண்டிருக்கும் போது பிள்ளைகளுக்கு bathroom வரும் போது - ஏனெனில் நாம் toilet எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்து போவதற்குள் வழியிலேயே எல்லாம் ஆகிவிடுமோ என்று. (ஏம்ப்பா கடை முதலாளிகளே, அது ஏன் toiletஐ உங்கள் கடையின் பிரம்மாண்டமான ஒளி விளக்குகள் அலங்கரிக்கும் 3 அல்லது 4 தளங்களுக்கு மேலுள்ள junk materials போட்டு வைக்கும் தளத்தில் ஒரு ஒற்றை குண்டு பல்ப் ஒளி சிந்தும் terror setupல் toiletஐ வைத்திருக்கிறீர்கள் - இது அனேகமாக முக்கால்வாசி பெரிய்ய ஜவுளிக்கடல்களிலும், நகைமாளிகைகளிலும் நாங்கள் பார்த்தது)
3. ப்ளைட் லேண்டிங் மற்றும் டேக் ஆஃபின் போது - காது அடைப்பதனால் குழந்தைகள் அழத்துவங்குவர். நாம் முன்னேற்பாடாக கொண்டு சென்ற ear plugs (அது ஒண்ணுமில்லீங்க - காதுல வச்சிக்க பஞ்சு தான்) கட்டாயம் கையில் அந்த நேரம் சிக்காது. குழந்தையின் வாயில் விரல வைங்க. விரலச் சப்பினா காது வலிக்காது என்பார்கள். அது ஆன்னு கத்திட்டு இருக்கும் போது எங்க போயி வாயில வெரல வச்சு அது சப்புறது ???!!! pilotஅத் தவிர cabin crewல இருக்குறவங்க ஆரம்பிச்சு எல்லாரும் நம்மள தான் பாப்பாங்க. ஒண்ணும் செய்ய முடியாது. நாம யாரயும் பாக்காத மாதிரி உக்காந்துக்க வேண்டியது தான் :)
4. Parents-Teachers meetingன் போது உங்க பொண்ணு என்ன சொல்றா தெரியுமா என்று teacher ஆரம்பிக்கும் போது - ஐயையோ என்னத்த சொன்னான்னு தெரியலயே - சும்மா சும்மா parents வந்து உங்கள meet பண்ண சொல்றீங்க. எங்க அம்மா college போக வேணாமா என்று சொன்னாளாம். அது correct தானே என்று நினைத்துக்கொண்டு மகளைக் கண்டித்து விட்டேன் (வேறென்ன செய்றது. நெனக்கிறதயெல்லாம் சொல்ல முடியுமா என்ன ;) )
5. 2 பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரு பிள்ளையின் வகுப்பில் மட்டும் யாருக்கோ பிறந்தநாள். அவள் கொடுத்த சாக்லேட்டைக் மெனக்கெட்டு கொண்டு வந்து வீட்டில் தம்பியிடம் காட்டி - எங்க classல பூஜாக்கு birthday. ஒரு chocolateதான் குடுத்தா என்று பொறுப்பாகச் சொல்லிவிட்டு அதை டபக்கென்று வாயில் போட்டுக்கொள்ளும் போது. சின்னது அலற ஆரம்பிக்கும். கொடுமைக்குன்னு அந்நேரம் வீட்டில் வேறு chocolateஏ இருக்காது. என்ன செய்வது ஆளுக்கு 2 அடி கொடுக்க வேண்டியதுதான்
Tuesday, September 28, 2010
பெற்றோரின் திகில் நிமிடங்கள்
1:10:00 PM
மாலா வாசுதேவன்
4 comments
4 comments:
//Parents-Teachers meetingன் போது உங்க பொண்ணு என்ன சொல்றா தெரியுமா என்று teacher ஆரம்பிக்கும் போது - ஐயையோ என்னத்த சொன்னான்னு தெரியலயே - சும்மா சும்மா parents வந்து உங்கள meet பண்ண சொல்றீங்க. எங்க அம்மா college போக வேணாமா என்று சொன்னாளாம்.//
சமத்து!!!!
நன்றி drbalas என் பொண்ண சமத்துன்னு சொன்னதுக்கு :)
ஹா ஹா ஹா..........!
ரொம்ப கஷ்டமான வேலைதான் குட்டிஸ் ஐ வெளில கூட்டிட்டு போகும்போது...!
\\சும்மா சும்மா parents வந்து உங்கள meet பண்ண சொல்றீங்க. எங்க அம்மா college போக வேணாமா என்று சொன்னாளாம்..........//
அதானே??? சரியாதானே சொல்லிருக்கா காவ்யா செல்லம் ????
நன்றி லெமூரியன் :)
Post a Comment