Wednesday, August 17, 2016

வாட்ஸப் க்ரூப் அட்ராசிட்டீ

வாட்ஸப் பயன்படுத்தும் எல்லோருக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கும் - சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு குரூப்பில் யாராவது ஒருவர் நம்மைச் சேர்த்துவிட்டு இருப்பார்கள். நாமும் தேமேயென்று மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் மெம்பர்களாகத் தொடர்ந்து கொண்டிருப்போம்.  

தினமும் குட்மார்னிங் 20, குட்நைட் 30 - இமேஜுகளை டெலிட் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். திடீரென்று ஒரு நாள் ஒரு 50 மெசெஜஃ பிறந்தநாள் வாழ்த்துக்கள் - நாமும் விஷஃ பண்ணுவதா வேண்டாமா. ஏதோ ஒரு டாபிக்கில் விவாதம் - அமெரிக்காவில் அவர்கள் இருக்கும் பிரதேசத்தில் ஏதோ தமிழ் மீட்டிங், அங்கே பொழியப்போகும் பனிமழை எச்சரிக்கை, புட்பால் மேட்ச், ஹல்லாரி-ட்ரம்ப் மோதல், அவர்கள் சம்மரில் கோல்ப் விளையாடப்போவது - இதே ரீதியில் அவர்கள் பேசிக்கொண்டே போகும் போது - நாம் வடிவேலு பாணியில் - என்னடா நடக்குது இங்க என்று நெளிய வேண்டியதுதான். சரி வெளியே வந்துவிடலாம் என்று நினைத்தால் நம்மை சேர்த்துவிட்டவன் நமக்கு நல்ல நண்பனாக இருப்பான். அதனால் தயங்குவோம். ஆனால் இன்க்ளூசிவாக இல்லாத ஒரு குரூப்பில் தொடர வேண்டியதில்லை. நாம் வெறும் ஆடியன்ஸாக எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது. பையன் ஒரு மணி நேர லெக்சரையே கேட்கத் தயாராக இல்லை. உங்களைச் சேர்த்துவிட்ட நண்பனிடம் நாசூக்காகத்தெரிவித்துவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான். I will tell you what - no one will miss you in such a group.

இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது - உணர்ச்சிவசப்பட்டு குரூப் ஆரம்பித்து சம்மந்தம் இல்லாதவர்களை மெம்பராக்கிவிடுவது. ஆரம்ப நாட்களில் நீங்களே குட்மார்னிங், குட் ஆப்டர்நூன், சூப்பர் தேர்ஸஃ டே எல்லாம் அனுப்பிக்கொண்டிருப்பீர்கள். கொஞ்ச நாட்களில் எல்லோரும் ஓடிவிட, நீங்களும் வெளியே செல்லத் தயங்கும் ஏதாவது ரெண்டு மூணு பேர் மட்டும் இருப்பது. இப்படி ஒரு சூழலில் நீங்கள் இருந்தால் அசிங்கப்படாதீர்கள் - அரசியல்ல இதல்லாம் சாதாரணம்பபா must be your reaction.

உண்மையான சிக்கல் எங்கே இருக்கிறது என்றால் - உங்களுக்கு குரூப்பில் யாரிடமோ ஒரு misunderstanding ஏற்பட்டுவிட்டது. உடனே அவர்கள் சம்மந்தப்பட்ட எல்லா குரூப்பிலிருந்தும் வெளியேறிவிட்டு அவர்களை block செய்து விடுவது என்பது ஒரு வகை வெர்ச்சுவல் வார். இதனால் பிரச்சனை தீருமா - நிச்சயம் இல்லை. காச்மீர் பிரச்சனைக்கு கிரிக்கெட் விளையாடமாட்டோம் என்று நம் அரசாங்கம் சொல்வது போன்ற சொல்யூஷன் இது. இது தற்சமயம் ஒரு prevalent trend ஆக இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமற்ற போக்கு. கம்யூனிக்கேஷனுக்கான அனைத்து சேனல்களையும் அடைத்துவிட்டால் பிரச்சனைக்குத் தீர்வு என்ன. ஒரு உறவோ, நட்போ வேண்டவே வேண்டாம் என்றால் மட்டும் இத்தகைய முடிவை எடுக்கலாம், இல்லையெனில் பிரச்சினையைப் பேசித்தீர்க்கலாம். கையடக்கக்கருவிகள் தவிர்க்க முடியாத்து ஆகிவிட்ட இக்காலத்தில், பெரிய முடிவுகளை இப்படி செல்போன், சமூக வலைத்தளங்கள் மூலம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.


1 comments:

வருண் said...

இந்தியர்களுக்கே உரித்தான பிரச்சினை இது. வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டு, அதை எப்படி விற்பது என்று கவலைப் பட்டு அழுகிறது, பஞ்சாயத்து வைக்கிறது. எவனுக்காவது போய் தேவையே இல்லாமல் உதவுறது, அப்புறம் அவன் நன்றி மறந்துட்டான்னு ஊரெல்லாம் போயி சொல்றது. இப்படித்தான் இன்னைக்கு வாட்ஸ்சப், முகநூல்னு எதையாவது இழுத்துக் கொண்டு திரிகிறார்கள். Nobody in the world wasting time like this other than Indians!

I have whatsup in my I-phone. I communicate with my friends and family who live in India or some of my friends in US. Messaging with images works better in whatsup rather than I-phone messages especially if the person in other end does not have good data plan and so the images you send would not reach them in normal messages.

****சரி வெளியே வந்துவிடலாம் என்று நினைத்தால் நம்மை சேர்த்துவிட்டவன் நமக்கு நல்ல நண்பனாக இருப்பான். ***

உங்களுக்கு இதெல்லாம் அதிகமாத் தெரியலையா? நல்ல நண்பனா/நண்பியா இருந்தால் என்ன? இந்த க்ரூப் எனக்கு ஒத்துவரலைனு வெளியே போனால் அதைக்கூட புரிந்துகொள்ளாத நண்பந்தான் ஒருவருக்கு எதுக்கு? அந்தளவுக்கு புரிதல் இல்லைனா அவனையும் அன்ஃப்ரென்ட் பண்ணிட்டு போயிக்கிட்டே இருப்பேன் நான்.

If you ask me facebook and whatsup friends are nor real friends. I always wonder if someone has 365 friends, he/she needs to wish happy birthday to someone everyday. I am certainly not interested in wishing some friend a HBD everyday. To me that is RIDICULOUS. I am going to live only 30,000 days at the max (from my birth day). I cant maintain these kind of relationships in this short time. Relationship and friendship in fb and whatsup DO NOT mean what they supposed to mean these days. One need to realize that. Facebook friend is not real friend. It is "something" worthless "friend" in MOST CASES! Well these are strictly my opinions!

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes