Thursday, February 12, 2015

புத்தகக் கண்காட்சி - நான் வாங்கிய புத்தகங்கள்

புத்தகக் கண்காட்சி வழக்கம் போல் இந்த வருடமும் களைகட்டியது. நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இங்கே;
1.       ஆழி சூழ் உலகு – ஜோ.டி. க்ரூஸ்
2.       உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார்
3.       ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா – பியர் லோட்டி
4.       பெண்மை வெல்க – பிரபஞ்சன்
5.       புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
6.       இந்தியப் பயணக் கடிதங்கள் – எலிஸா பே
7.       ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு
8.       மறைக்கப்பட்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன்
9.       விகடன் பொக்கிஷம்
10.    லைட் ரீடிங் வகையறாவில் சுஜாதா நாவல்கள் இரண்டு, அனுராதா ரமணனின் புத்தகங்கள் சில மற்றும் பாலகுமாரன் நாவல் ஒன்று.
பிள்ளைகளுக்கு வாங்கியது;
1.       அட்வன்ச்சர்ஸ் ஆப் டாம் சாயர்
2.       அரௌண்ட் த வேர்ல்ட் இன் தேர்ட்டி டேஸ்
3.       அமர் சித்ர கதாவில்  சாம்பு, சுப்பாண்டி மற்றும் சில.
ஒவ்வொரு புத்தகத்தையும் பற்றிய விரிவான விமர்சனத்தைப் பின்னொரு பதிவில் தருகிறேன். எனக்காக வாங்கிய புத்தகங்களில் டைம்பாஸ் ரீடிங்குக்காக வாங்கிய புத்தகங்கள் தவிர மற்ற அனைத்திலும் இருக்கும் ஒரு பொதுத்தன்மை – அவை அனைத்துமே ஏறத்தாழ வரலாற்று ஆவணங்கள். நூல்களின் வடிவம் நாவல், கடிதம், கட்டுரை, டைரிக்குறிப்பு என்று மாறுபட்டாலும் அனைத்துமே வரலாற்றுச் செய்திகளின் பெட்டகங்கள். நாம் எங்கு போகிறோம் என்பதை உணர்வதற்கு நாம் எங்கிருந்து வந்தோம் என்பதனை அவசியம் உணர்ந்துகொள்ளவேண்டும். நம்முடைய கலாச்சாரப் பின்னணி, பாரம்பரியம், நடைமுறைகள் - இவற்றை மிக சுவாரசியமான முறையில் மேற்கண்ட புத்தகங்களிலிருந்து அறிய முடிந்தது.

குறிப்பாக ப.சிங்காரத்தின் நாவல் ஒரு யுனிக் படைப்பு. உலகப்போர் காலங்களில் பர்மா, இந்தோனேசியாவில் செட்டியார்களின் வியாபார நிலை, அவர்கள் அங்கே சம்பாதித்துக்கொண்டிருந்தபோது, இங்கே புதுக்கோட்டை, கோட்டையூர் ஆகிய இடங்களில் அவர்களின் குடும்ப நிலை இவற்றைப் பற்றிய வரலாற்று நூல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இல்லையென்றால் அந்தக்குறையைப் ‘புயலிலே ஒரு தோணி’ போக்குகிறது. மிக சுவாரசியமான நடை – சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ வில் தமிழர்களின் பிரமாதமான பங்களிப்பு, தமிழ்நாட்டு சாதிப் பிரிவுகள் வெளியாடுகளிலும் மறைமுகமாகத் தொடரப்பட்டது என பல சரித்திர விஷயங்களைப் புலப்படுத்திச் செல்கிறது இந்நாவல். அவசியம் படிக்க வேண்டியது. மற்ற நூல்களின் விரிவான ரிவ்யூ விரைவில்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes