1961ஆம் ஆண்டு வரதட்சணை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது நிச்சயம் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டப் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்திருக்கும். இப்போதும் வரதட்சணை எல்லா மறைமுக வடிவங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. பொண்ணுக்குப் போடறதெல்லாம் உங்க இஷ்டம் என்று மாப்பிள்ளை வீட்டார்கள் சொன்னார்கள் என்றால் பெண்வீட்டாரின் வசதி, சொத்து நிலவரம் எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். விழிகள் விண்மீன்களோடு விளையாடினாலும், விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான் என்று கவிஞர்கள் மணமாகாத இளம்பெண்கள் குறித்து எழுதிய கவிதைகள் இன்றும் ரெலவன்ட். அதனால் வரதட்சணை ஒழிப்புச்சட்டம் எந்த நோக்கத்துக்காக இயற்றப்பட்டதோ அது நிறைவேறியதாகத் தெரியவில்லை. மாறாக இந்தச்சட்டம் ஏகப்பட்ட வழிகளில் பெண்களால் மிஸ்யூஸ் செய்யப்படுகிறது.
...