எத்திராஜ் மகளிர்க் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் இன்டர்-காலேஜ் ஃபெஸ்டிவல் சிருஷ்டி-14 கோலாகலமாக நடந்தேறியது. ஜெயம் ரவி, சமுத்திரக்கனி,ஆச்சி மனோரமா, சேரன், ஜீ.வி.ப்ரகாஷ், விவேக் என ஏகப்பட்ட சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள்.
இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால்,ஃபேஷன் ஷோவில் அல்ட்ரா மாடர்னாகவும், வெஸ்டர்ன் டான்ஸ், ம்யூசிக்கில் இளையதலைமுறையின் பல்ஸுக்கேற்ப அசத்தும் மாணவியர், அதே அளவு உற்சாகத்துடனும் ஆதன்ட்டிசிட்டியுடனும் பரதநாட்டியத்திலும், கர்னாடக சங்கீதத்திலும் ஜொலிக்கின்றனர்.
இது வரை நான் பார்த்த பரதநாட்டியங்களில் - ஸ்கூல் ஸ்டேஜில் வெள்ளையாக இருக்கும் ஒரு குட்டிப்பெண்ணிற்கு தாவணியெல்லாம் கட்டிவிட்டு, குஞ்சம் வைத்து, ரோஸ் கலர் பவுடர், லிப்ஸ்டிக்கெல்லாம் அப்பிவிட்டு - ஒரு நாலைந்து பாட்டுகளுண்டு...