இந்த சனி, ஞாயிறில் தம்பிமார்கள் பாலாவும், கார்த்தியும் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று முடிவாகியது. எங்கு சாப்பிடுவது என்ற பேச்சு கிளம்பியது. வாசு ஃபார்ச்சூன் அல்லது பார்பிக்யூ நேஷன் போவோம் என்றார். பாலாவுக்கு 2.30க்கு ட்ரெயின். அதனால் அவன் வீட்டிலிருந்து 1 மணிக்கு கிளம்ப வேண்டும். ஃபார்ச்சூன் எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் அதிகம். 1 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. எனவே அந்த ஆப்ஷன் ட்ராப். அடுத்ததாக பார்பிக்யூ நேஷன். பேரைச் சொன்னவுடன் எங்கள் மகன் எக்சைட் ஆகிவிட்டான். டேபிளிலேயே இருக்கும் க்ரில், பச்சைக்கொடி, சிகப்புக்கொடி என்று அவர்கள் போடும் சீனுக்கு என் மகன் அடிமை ;). ஆனால் அவர்களின் டைமிங்ஸ் எங்களுக்கு செட்டாகவில்லை.
ஆப்பக்கடைகள், செட்டிநாடு ஹோட்டல்களில் சாப்பிட மனதில் தெம்பில்லை. எனவே ஆசிப் ப்ரதர்ஸ்...