வசந்த் டிவியில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது - உண்மையில் செம த்ரில். மாடு பிடிப்பவருக்கு பரிசுகள் பீரோ, சைக்கிள், பாவாடை (???), தங்கக்காசு, வேட்டி, அண்டா, குடம். வாடிவாசலின் இருபுறமும் சைக்கிள், பீரோக்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். வாடிவாசலின் மேல் சிறிய மூங்கில் மேடை கட்டி ஊர்க்காரர் ஒருத்தர் லைவ் காம்ப்பியர் பண்ணிக்கொண்டிருக்கிறார் (மேடை ஒரு டைப்பாக இருக்கிறதே - விழுந்துவிடாதா?). டிவி சார்பாக பட்டு சேலை கட்டி ஒரு பெண் மற்றும் வேட்டி சட்டையில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் இருவரின் வர்ணனை ஒரு சாம்பிள் -
பட்டு வேட்டி சேலை ஆண் பெண்
மீன் கிடைக்காத போது சும்மா நின்று கொண்டிருக்கும் கொக்கு மீனைப் பார்த்தவுடன் பாயும் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க வீரர்கள் மாடு வந்தவுடன் பாயக் காத்திருக்கிறார்கள். காளையா வீர மாலையா என்று வீரர்கள் வீறு கொண்டு நிற்கிறார்கள். நம் கண்களும் வாசலைப்பார்த்து கண்கள் ஆயிரம் பூக்களைப் பூத்து நிற்கிறது. அதோ ஒரு வீரர் மாட்டை அடக்கி விட்டார் - கீழே விழுந்து விட்டார் - மருத்துவக்குழு வந்து தூக்கிவிட்டது.
நம் ஊர்க்கார காம்ப்பியரர்
ஏம்ப்பா மாடு பிடிக்க வந்திகளா, சும்மா நிக்க வந்திகளா?. மாட்ட புடிங்கப்பா. பூரா ப்ரைஸூம் மாட்டுக்காரந் தான் வாங்கிட்டுப் போறான். காசு கீசு வாங்கிட்டியா. ஏ யாரப்பா டிஷர்ட் (மாடு பிடிப்பவர்கள் அணிவது) போட்டுக்கிட்டு டிராக்டர் கீழ உக்காந்துருக்கிறது? சாப்பாடு கொண்டாரச்சொல்லவா. எந்திருச்சு மாட்டப் பிடியப்பா. மாட்டத்தொட்டாலாம் பரிசு கெடயாது, புடிக்கணும். ஏ சிங்கம்டா நீ - அது பிடிமாடு. வந்து பரிச வாங்கிட்டுப்போ. அது சின்ன அடிதான் வுடு சரியாப் போவும்.
எது போட்டியின் போக்கை அழகாகத் தெரிவிக்கிறது - Choice left to u to decide
0 comments:
Post a Comment