கோலாகலமாக நடந்து முடிந்து கொண்டிருக்கிறது புத்தகத்திருவிழா (இன்றே கடைசி). பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. இந்த முறை சின்ன பிள்ளைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் ஆப்பிள் பிரசுரத்தால் மிகவும் சிறப்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரீஸனபிள் விலை, மிக அழகான படங்கள், க்வாலிட்டி பேப்பர் - சுருக்கமான கதைகள். பிள்ளைகளால் மிக எளிதாகப் படிக்க முடிக்கிறது. இதைத்தான் நான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதாவது, சின்னப் பிள்ளைகளுக்குரிய தமிழ்ப்புத்தகங்கள் (7 மற்றும் 5 வயது) அவர்களை வசீகரிக்கும் வண்ணம் இருந்ததேயில்லை - படமேயில்லாத மிக நீண்ட கதைகள், மொழி நடை வயதுக்கேற்றார் போல் இல்லாமல் - இப்படித்தான் இதுவரையில் கடந்த 4 வருடங்களாக நான் புத்தகச் சந்தையில்...