நடுத்தரக் குடும்ப மற்றும் டெக்னிக்கல்லி ஸ்கில்டு, க்வாலிபைடு பெண்கள் பலரும் குழந்தை பேற்றுக்குப்பின் வேலையை விட்டுவிடுவது மிகப் பரவலாக க் காணப்படும் ஒரு சாதாரண ட்ரண்ட். பிள்ளையப் பாத்துக்கிறதுக்காக ரூ.40000 வேலய விட்டுருக்கா - என்று ஒரு பாராட்டுப்பத்திரமும் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பின்னடைவுகளைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது ( http://uk.finance.yahoo.com/news/can-you-afford-to-be-a-stay-at-home-mum.html ). வேலையை விட்டுவிடுவதன் சாதக பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார்கள்.
இதைப்படிக்கும்போது மாபசான் எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது.
ஒரு குடிசைப்பகுதியில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 பிள்ளைகள். ஒரு கனவானும், அவர் மனைவியும் தினமும் அந்தப்பகுதியைக் கடந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்தப் பகுதியிலிருந்து ஒரு பிள்ளையைத் தத்தெடுக்கப் பிரியப்படுவார்கள். இரு குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்களிடம் பேசுவார்கள். ஒரு தாய் பசியோ, பட்டினியோ எங்கள் பிள்ளையை நாங்கள் வளர்த்துக்கொள்வோம். யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று மறுத்து விடுவாள். மற்றொருவள் தன் கடைசி மகனைத் தத்துக்கொடுக்க சம்மதித்து விடுவாள்.
தத்துக்கொடுத்த பெண்ணை அந்தப்பகுதி மக்கள் இரக்கமில்லாதவள், பாசமில்லாதவள் என்று தினமும் திட்டுவார்கள். அதே நேரம் தத்துக்கொடுக்க மறுத்த பெண்ணைத் தாயென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று போற்றுவார்கள். வறுமையும் தொடர்ந்தது.
இப்படியாக 18 வருடம் கழிந்தபின், ஒரு நாள் தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளை தன் நிஜ தாய் தந்தையரைப் பார்க்க வருவான், உயர்தர உடுப்புக்களோடு, கையில் விலையுயர்ந்த பரிசுகளும், பணமும் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்து அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வான்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பக்கத்து வீட்டு வறுமையில் உழலும் பையன் தன் தாயிடம் - நீதான் என் வாழ்க்கையைப் பாழாக்கினாய். முதலில் என்னைத்தான் தத்துக்கேட்டார்களாமே நீ கொடுக்க மறுத்த்தால் இன்று என் வாழ்க்கையே வறுமையில் இருக்கிறது. செல்வச்சீமானாக இருந்திருக்க வேண்டியவன், உன்னால் இப்படியாகி விட்டேன். மகன் இப்படிச்சொல்வதோடு கதையை முடித்திருப்பார் மாபசான்.
இளம் தாய்மார்களே வேலையை விடுவதற்கு முன் யோசியுங்கள். குழந்தைக்குப் பாதுகாப்பு தேவைதான் - அதில் முக்கியமானது "பொருளாதாரப் பாதுகாப்பு"
1 comments:
உண்மை தான்.எனக்கும் குழந்தைக்காக வேலை விடுவது நல்லது என்று தோன்றினாலும்,பொருளாதார ரீதியாக மிகுந்த பின்னைடுவு நேரிடும்."பொருளாதாரப் பாதுகாப்பு" என்ற அடிப்படையில் யோசித்தே முடிவு எடுக்க வேண்டும்.
Post a Comment