குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை விட்டாயிற்று. எங்கயாவது கூட்டிட்டுப் போங்க என்ற பிள்ளைகளின் நச்சு ஆரம்பித்திருக்கும். சென்னையில் சின்ன பிள்ளைகளுக்கு ஏற்ற இடம் என்று பார்த்தால் - பீச், ஜூ, கிண்டி ஸ்நேக் பார்க் - இவை தான் (வேறு ஏதாவது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் நண்பர்களே). இப்போது அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்திருப்பது அபிராமி மெகாமால். எப்படியிருக்கிறது இது? கொடுக்கப்படும் விளம்பரம் வொர்த்தி தானா? பார்ப்போம்.
பிள்ளைகளுக்கு ஒரு 3டி ஷோ இருக்கிறது. அதற்கு நுழைவு கட்டணம் ரூ.120. ஷோ 20 நிமிடங்கள் நடக்கிறது. ரூ.120 கட்டணம் வொர்த்தி என்று தான் நினைக்கிறேன்.ஷோவைப் பிள்ளைகள் மிகவும் ரசித்தனர்.மேஜர் அட்ராக்ஷனாக அவர்கள் பிரமோட் செய்வது ஸ்நோவேர்ல்ட். நாங்கள் போன நேரம் ரெனவேஷனுக்காக அது பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதைப்பற்றிய எந்த அறிவிப்பும் இவர்களின் விளம்பரங்களில் இல்லை. பிள்ளைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சரி முன்னால் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று பார்த்தால் வேகமாக ஒருவர் வந்து போட்டோலாம் எடுக்கக்கூடாதுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதே ஆர்டர்தான் கிஸ்ஸிங் கார்ஸ் இடத்திலும். ஏன் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. அப்படி பூட்டி வைத்துக்கொள்ளும் படி extra ordinary ஆக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்புறம் ஏன் இந்த பில்ட் அப்???
அக்வேரியம் என்று ஒன்று வைத்து ரூ.30 ஒரு ஆளுக்கு வசூலிக்கிறார்கள். நிச்சயம் its not worthy. ஒரு ப்ளே ஏரியா இருக்கிறது. இங்கும் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை - ஸ்ஸ் அப்பா முடியல. ஒரேயொரு அன்வான்டேஜ் - இங்கிருக்கும் ப்ளே மெஷின்களில் வின்னிங் டிக்கெட் நிறைய வருகிறது. அனேகமாக எல்லா பிள்ளைகளுமே எளிதாக ஏதாவது ஒரு சிறிய பரிசை வெல்கிறார்கள்.
தியேட்டர்கள் ஒவ்வொன்றும் ஒரு தீம் என்றார்கள். எங்களால் அனைத்தையும் விசிட் செய்ய முடியவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் கூற முடியவில்லை.
இன்னொரு விஷயம் - இங்கு புட் கோர்ட்டில் நிறைய ஸ்டால்களில் உணவு நன்றாக இருக்கிறது. 3டி ஷோவைத் தவிர வேறெதுவும் தனித்துவமிக்கதாக இல்லை. ஒரு வேளை ஸ்னோ வேர்ல்டு திறந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மற்றபடி வேறு அனைத்துமே சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யு போன்ற மற்ற மால்களில் இருப்பவைதான்.