Saturday, September 17, 2011

பாலுமகேந்திராவின் மனைவி

நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை - படப்பெட்டி சினிமா இதழ் வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா வெளியிட்டுப் பேசியது.



தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்; தனது பெரும்பான்மையான படங்களில் (மீண்டும் கோகிலா, மறுபடியும், ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி) கணவன் வேறொரு பெண்ணை நாடிச் செல்லுவதில் உள்ள சிக்கல்களையும், மனைவிக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சலையும், நியாயமான கோபத்தையும் அழகுற, ஆழமாக காட்சிப்படுத்தியவரின் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணை நாடும்போது அந்த மனைவி எவ்வளவு வருத்தமுறுகிறாள் என்பதை மிக நன்றாக ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து புரிந்து கொண்டு அதை மிகச்சரியாகவும் படம் பிடித்த ஒரு ஆண்மகன் தன் மனைவியை அதே போன்றதொரு சோகத்தில் ஆழ்த்துவது எப்படி சாத்தியம்? படைப்புகள் என்பவை ஒரு படைப்பாளனின் பிரதிபலிப்பு இல்லையா? உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று பாடிய பாரதியால் தன் மகளை வெறுக்க முடியுமா? அப்படி வெறுத்தால் அவனுடைய படைப்பு போலியானது இல்லையா? உண்மை மட்டுமே என்றும் நிலைக்கும். சதிலீலாவதியில் ஒரு காட்சியில் கமல் கதாநாயகனைப் பார்த்துச் சொல்வார் - கார் வாங்கி குடுத்தானாம், வீடு வாங்கி குடுத்தானாம், ஃப்ரிட்ஜ் வாங்கி குடுத்தானாம் (சின்ன வீட்டுக்கு). உன் மனைவி குடுத்ததுதானடா உங்கிட்ட இருக்குறது எல்லாம். என்னவொரு அருமையான வசனம். இதை எழுதியவரே இதை உணராமல் போவது எவ்வளவு பெரிய சோகம்.

பாலுமகேந்திராவின் மனைவியைப் பற்றி அவருடைய சிஷ்யர்கள் தங்கள் நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கின்றனர். பாலா ஆனந்தவிகடனில் எழுதிய தொடரில் கூட பாலுமகேந்திராவின் மனைவியின் மென்மையான சுபாவத்தைப் பற்றி கூறியிருப்பார். அத்தகைய மனத்தை மவுனிகா என்னும் வலிய ஆயுதம் கொண்டு தாக்குவது எவ்விதத்திலும் சரியில்லை.

அதே போல் எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பல நாவல்களில் பெண்ணியம் பேசுவார். அவருடைய பயணிகள் கவனிக்கவும் என்ற நாவலில், கதாநாயகனது infatuation பற்றியும், பின்னொரு நாளில் அவன் உண்மையான காதலில் ஈடுபடுவதையும் அழகாகச் சுட்டுவார். காதலைப் பற்றி இவ்வளவு அழகாக எழுதுபவர், வாழ்க்கைத்துணையைப்பற்றி சிலாகித்துப் பேசுபவர் எப்படி இன்னொரு திருமணம் செய்தார்?? இதில் இரு மனைவியரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்று பெருமை வேறு. படைப்புகள் படைப்பாளிகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அது நான் வடித்த ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் அப்படி நடந்து கொள்ளும். அதற்கு நான் என்ன செய்வது என்று ஒரு படைப்பாளன் சொல்லுவானேயானால் then he is a hypocrite. இந்த வசனத்தை ஒரு நடிகன் வேண்டுமானால் சொல்லலாம் (உதாரணம்: ரஜினி- குசேலன் படம்). ஏனெனில் நடிகன் ஒரு கருவி மட்டுமே. ஆனால் ஒரு இயக்குனர், ஒரு எழுத்தாளர் கர்த்தா. அவன் இப்படிச்சொல்லுவது பேடித்தனம்.

முடிவாக, தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. துரோகங்களுக்கு அல்ல.

10 comments:

ChitraKrishna said...

நீங்கள் சொல்வது சரிதான். ஊருக்குத்தான் உபதேசம் போல.....

மாலா said...

ஆமா சித்ரா, இதை படிச்சப்போ செம irritating ஆயிடுச்சு

Anonymous said...

I dont agree mala.. Jesus will forgive any sinner..if you go to Him..you tell the world about that...Bible says if you see a woman/man lustfully you have committed a sin, so all are sinners..

Anonymous said...

at least he has the gutz to accept.. who will accept his faults publicly, I can't, I do appreciate him and he accepts and in that way may be he feels sorry..you follow Jesus think about this.. what does the bible say about hiding sins and confessing sins?

மாலா said...

Hi anonymous, confessing should be followed by retreating from the sinful paths. confessing alone does not make one good. மனம் திரும்புதலும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பாலுமகேந்திரா தன் தவறுக்காக வருந்தவும் இல்லை. அதை திருத்திக்கொள்ளவும் நினைக்கவில்லை.தங்கள் கமெண்ட்டிற்கு மிக்க நன்றி

எம்.ஞானசேகரன் said...

இன்றுதான் உங்கள் வலைப்பதிவைக் கண்டேன். எல்லாமே சுவையான பதிவுகள். நேரமிருந்தால் மறக்க முடியாத நினைவுகள் என்ற என் வலைப்பதிவுக்கும் வருகை தாருங்கள்.
//இதில் இரு மனைவியரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருக்கின்றனர்// சம்பந்தப்பட்ட நபர்கள் இணைந்து வாழ விரும்பும்போது நாம் ஏன் அதில் குறுக்கிட வேண்டும். ஆனால் அதே ஒரு பெண் இரண்டு ஆண்களைக் கொண்டுவந்து குடும்பம் நடத்தமுடியமா? இங்கேயஅது அது விருப்பமானாலும் பெண் மட்டுமே தூற்றுதலுக்கு உள்ளாவாள்?!

v.prema said...

Balu mahendara vai director aa parunga...jesus aa illa...
appadina teachers,professors,fathers,mothers,writers,ministers ellarumay roll model than......i think you have rights to criticize the film not the director....

Abi said...

It happens everywhere, people are always like this only,cooooooooooool mam

மாலா வாசுதேவன் said...

Hi Prema, sorry for contradicting u. but im not criticising anything he has said within the four walls of his house. when a statement is made publicly, it can be criticised. im not intruding into his private space. also as u said teachers are meant to be role models. thats y i hav chosen this profession. thanks fr ur comments. continue reading n commenting

மாலா வாசுதேவன் said...

Hi Abi wen did u read it? pleasant surprise :)

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes