ஆரம்பிக்கும் முன் ஒரு சின்ன க்விஸ். கீழ்க்காணும் விருதுநகர் புரோட்டாவில் காணப்படும் பிழைகள் என்ன? விடைகள் கடைசியில்.
விருதுநகர் காமராஜர் பிறந்த ஊர் என்பதற்கு அடுத்தபடியாக அதன் புரோட்டா சால்னாவிற்குத்தான் ஃபேமஸ். 60 வருடங்களுக்கு முன் தெப்பத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால், சுற்றியுள்ள புரோட்டா கடைகளில் ஊர் முதலாளிகள் (TKSP, VVR, MSP - ஊர் பெரிய மனிதர்களின் பெயர்ச்சுருக்கம்) அனைவரையும் பார்த்துவிடலாம் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள். ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் ஏகபோக உரிமையாக இருந்த புரோட்டா சால்னா இப்போது அனைவரும் புசிக்கக் கூடியதாக மாறிவிட்டது.
சாயங்காலம் 5 மணி முதல் எல்லா புரோட்டா கடைகளிலும், புரோட்டா கிடைக்கத் துவங்கும். முன்பெல்லாம் பெண்கள் கடைக்குச் சென்று சாப்பிடமாட்டார்கள். வீட்டு ஆண்கள் வாங்கி வருவதற்காகக் காத்திருக்க வேண்டும். எங்கள் மயில் அண்ணன் வயர்க்கூடை சகிதம் புரோட்டா வாங்கக் கிளம்பிய தினங்கள் இன்றும் பசுமையாய். இப்போ trend மாறி விட்டது. முக்கால்வாசி கடைகளில் family room வந்து விட்டது.
இன்றும் என்று விடுமுறைக்கு ஊருக்குச் சென்றாலும் வாசு கட்டாயம் எங்களை கடைக்கு கூட்டிச் சென்று விடுவார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பர்மா கடை, கமாலியா, அசன் கடை, அல்லா பிச்சை கடை என்று எந்த கடைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். எல்லாக் கடையிலும் அதே சுவை கிடைக்கும்.
மொறு மொறுவென்று புரோட்டா. அதற்கு தொட்டுக்கொள்ள சால்னா. சீக்கிரம் சென்றால் மட்டுமே கிடைக்கும் மட்டன் சுக்கா. இதைச்சாப்பிடுவதில் ஒரு டெக்னிக் இருக்கிறது. புரோட்டாவைச் சால்னா தொட்டு சாப்பிடக்கூடாது. சர்வரே பிய்த்துப்போட்டு மேலே சால்னா ஊத்தி எடுத்து வருவார். உங்கள் முகத்தைப் பார்த்தால் வெளியூர்க்காரர் என்று தெரிந்தால் பிய்த்துப்போடமாட்டார் - hygiene reasons க்காக நீங்கள் மறுக்கலாம். ஆனால் அவரே பிய்த்துப் போட்டு தருவதில்தான் டேஸ்ட் அடங்கியுள்ளது. அந்த மட்டன் சுக்கா - அடேங்கப்பா - டிவைன் என்பார்களே அந்த ரகம். சான்ஸே இல்லை. அண்ணாச்சீ அந்தக்கறிய எப்டிண்ணாச்சி வேக வக்கிறீங்க?? saute, marinate என்று என்னென்னவோ சொல்கிறார்களே - அனைவரும் பிச்சை வாங்க வேண்டும். அந்த மசாலா எதைக்கொண்டு தயாரிக்கிறார்கள் - அடேங்கப்பா. முட்டை வழியல் என்று ஒரு ஐட்டம். முட்டை ஆம்லேட் ஒரு பந்து மாதிரி இருக்கும். அதைப்பிய்த்தால் உள்ளே வெங்காயம், மிளகு எல்லாம் கலந்து அரைவேக்காடாக இருக்கும். என்ன ஒரு ருசி. அதை நினைத்துக்கொண்டு இங்கே நம்ம சென்னையில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி restaurantல் கரண்டி முட்டை ஆர்டர் செய்தோம். menu cardல் photo லாம் பயங்கர அழகா போட்டிருந்தாங்கன்னு நம்பி ஆர்டர் பண்ணிட்டோம் - அவ்வ்வ்வ்வ். அப்படியொரு roughஆ ரப்பர் மாதிரி இருந்துச்சு.
track மாறிட்டேன் sorry.
இன்னொரு விஷயம் அங்கே காணப்படும் கஸ்டமர் சர்வீஸ். அரைமணி நேரம் ஏன்னு கேக்க ஆளில்லாம திருதிருன்னு முழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க அவசியமில்லை. அதே போல் சும்மா சும்மா சால்னா கேட்க வெட்கப்பட்டுக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம். நாம் சால்னா கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே 'தம்பி அக்காக்கு சால்னா ஊத்து' என்பார் அண்ணாச்சி. ஆனா என்ன ஒரு சின்ன விஷயம்னா அண்ணாச்சிக்கு 50, 60 வயசு இருக்கும். ஆனால் எல்லா வயதினரும் அக்கா, அண்ணாச்சி தான் அவருக்கு.
எங்கள் ஊர்ப்பக்கம் சென்றால் புரோட்டா கடைக்குப் போகாம வந்துராதீங்க. ஜென்மம் சாபல்யம் அடையாது ;)
புதிர் விடைகள்
1. புரோட்டாவின் சைஸ் - படத்தில் மிகப்பெரிதாக உள்ளது
2. சைட் டிஷ் - பட்டாணி, உருளக்கியங்கு குருமா தொட்டு சாப்பிடுறதுக்குப் பேசாம வீட்லயே பால் சோறு சாப்ட்டு படுத்துருலாம்ங்க.
13 comments:
// கீழ்க்காணும் விருதுநகர் புரோட்டாவில் காணப்படும் பிழைகள் என்ன? //
படத்திலிருப்பது விருதுநகர் புரோட்டாவே அல்ல..... :)
இப்போது சென்னை அண்ணா நகரில் பர்மா கடையின் கிளை திறந்திருக்கிறார்கள். ஒரு முறை சென்று வாருங்கள்.
vanakkam veyilan. தகவலுக்கும், கமெண்ட்டுக்கும் மிக்க நன்றி
ம்ம்ம்.
ஓட்டு பட்டைங்க எதையுமே காணோமே?
template change panniyathil votu pattai kaanama poyiruchu pola. thank varatharajulu. vl include it. thank u fr giving ur comments :)
குறிப்பாக எந்த கடையில் நன்றாக இருக்கும் என சொல்லவில்லையே?
வாங்க சதீஷ், வணக்கம். ஊரின் எல்லா கடைகளிலும் அதே சுவை மெயின்டெய்ன் ஆகும் சதீஷ்குமார் :) அது தான் எங்கள் ஊரின் விசேஷமே
ippove saapidanum pola irukku padma...we are regular customer of parma kadai...innoru vishayam vittutiye..anga masala araika electrical equipments ethuvum use pandrathillai..ellame manual thaan..athunala thaan antha rusi nu ninaikiren..
முக்கியமான மேட்டர விட்டுட்டேன் செல்வா :)
THINNI PANDARAM
yes madam.. Viruthunagar parotta saalnava aduchukave mudiyathu
// கீழ்க்காணும் விருதுநகர் புரோட்டாவில் காணப்படும் பிழைகள் என்ன? //
படத்திலிருப்பது விருதுநகர் புரோட்டாவே அல்ல..... :)
September 14, 2011 at 8:06 PM
ஹஹஹா ..! உண்மைதான் .. அதுவும் கோதுமை பரோட்டா .. நாங்களா ஏமாறுவோம் ..?
Post a Comment