Saturday, September 4, 2010

டாக்டர் ஃபீஸ்

சிக்குன்குனியா வந்திருந்த சமயம் (அது சிக்கனா, சிக்குனா?). எல்லா jointsலும் சரியான வலி. ஒரு spoonஐக்கூடப் பிடிக்க முடியவில்லை. மாடி வீட்டு நைனு அம்மா, எதிர்த்த வீட்டு மாமி, பக்கத்து வீட்டு 5ஆம் வகுப்பு படிக்கும் பப்லு எல்லோரும் சிக்குன்குனியா வந்தா அப்டித்தான் வலிக்கும் என்றனர். ரைட் விடு. பொறுத்துக்க வேண்டியதுதான் என்று விட்டு விட்டேன். என் தம்பி அப்பு கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு அன்று வந்தான். எனக்கு ஃபீவர் சரியாகி 2 வாரங்கள் இருக்கும். ஆனால் வலி அப்படியேதான் இருந்தது. அதற்காக வீட்டிற்கு வந்த பையனைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப முடியுமா? இந்த சமயங்களில் என் கணவர் வாசு சரவணபவன், அஞ்சப்பர், மெக்டொனால்ட்ஸ் என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். எனக்கும் வாங்கிக் கொண்டுவந்து விடுவார் (அவரு ரொம்ப நல்லவரு). பேசாம அப்புவுக்கும் ஏதாவது ஆர்டர் பண்ணிடலாம் என்றார். அதெல்லாம் முடியாது, நான் தான் சமைப்பேன் என்று களம் புகுந்தேன். குக்கரைத் தூக்க முடியவில்லை. காய்கறிகளைச் சரியான அளவில் கட் பண்ண முடியவில்லை. சர்வ் பண்ண முடியவில்லை. வாசு சொன்னதையே கேட்டிருக்கலாம் என நினைத்தேன். ஏன்க்கா வாத்து மாதிரி நடக்குறீங்க என்றான் என்னருமை சகோதரன் நான் வலியைப் பொறுத்துக் கொண்டு ஒரு டைப்பாக நடப்பதைப் பார்த்து. என் மகன் குள்ள குள்ள வாத்து என்று situatuation rhymes பாடத் துவங்கினான். எப்படியோ சாப்பாட்டு வேளையைச் சமாளித்தோம். கட்டாயமா டாக்டர்கிட்ட போயே ஆகணும் என்றார் வாசு. அதான் அப்டி தான் வலிக்கும்னு பப்லு சொல்லிட்டான்ல என்றேன். கடுமையாக என்னை முறைத்தார். சரி வுடு, டாக்டர்கிட்ட போய்டுவோம் என்றேன்.
ஹாஸ்பிட்டல் வந்தாயிற்று. டாக்டர் நான் சொல்வதைப் பொறுமையாக கேட்டார். ஃபீவர் சரியாகி 2 வாரம் ஆகுதா? ஆமா டாக்டர். பாதம், ankleலாம் வலிக்குமே நடக்க முடியாதே? ஆமா டாக்டர். விரல்லாம் வலிக்குமே pen அக் கூடத் தூக்க முடியாதே? ஆமா டாக்டர் என்றேன் enthuவாக. டாக்டர் எப்டி கண்டுபிடிக்கிறார் பாத்தியா என்று கண்களாலேயே கேட்டார் வாசு. எனக்கு கூட ஃபீவர் இப்பத்தான் சரியாச்சு. பாருங்க பேனாவப் பிடிச்சு prescription கூட எழுத முடியல. ஒரு 2 மாசத்துக்கு அப்டி தான் வலிக்கும். ஒண்ணும் பண்ண முடியாது. Rs.150 ஃபீஸ். முன்னாடி pay பண்ணிருங்க என்றார் டாக்டர். அஃப்கோர்ஸ் prescription ஒண்ணும் எழுதல. பாவம் டாக்டர். இப்ப தாங்க fever சரியாயிருக்கு. என்ன கொடுமை வேதாச்சலம்???!! (டாக்டர் பேரு வேதாச்சலம்) - இதத்தான 5th std பப்லுவும் சொன்னான்

3 comments:

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா...!
ஹ்ம்ம்.....மிகவும் ரசித்தேன் பதிவை...!
சிக்குன் குனியா ரொம்ப படுத்தி எடுத்து விடும் என்று அம்மா நோயால் படுத்திருக்கும் போதுதான் கண்டேன்.


\\இதத்தான 5th std பப்லுவும் சொன்னான்...//
:-) உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி..!
அல்லது ரொம்ப நல்லவங்க நீங்க...! :-)

மாலா வாசுதேவன் said...

நன்றி லெமூரியன் :)

விவசாயி said...

மிகவும் அருமையான பதிவு

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes