Sunday, June 6, 2021

காட்டுக்குள்ள ஒரு பள்ளிக்கூடம்

 

மது கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகள் நீலகிரி-வயநாடு, அம்பலமுலா பகுதியில் உள்ள ஆதிவாசிக்குழந்தைகளுக்கான பள்ளிக்குச் சென்று, அக்குழந்தைகளுக்கு பாடங்களை எளிய முறையில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். இவ்வருடம் பெருந்தொற்றுக்காரணமாக அங்கு செல்ல இயலவில்லை. எனவே எங்களது பேராசிரியர்கள் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை எங்கள் கல்லூரிக்கு அழைத்து வந்து ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்தினர். இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களையும், தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் எங்களோடு பகிர்ந்துகொண்டனர். அவை இங்கே.

அவர்களது பள்ளி இருபாலினத்தவருக்குமான உண்டு உறைவிடப்பள்ளி. எட்டாம் வகுப்பு வரை உள்ளது. அவர்கள் சொல்வதுஒரு ஆதிவாசிக்குழந்தை எந்தவொரு பொருளையும் அதன் விலை அடிப்படையில் மதிப்பதில்லை. அவன் ஒரு கால்பந்தை வைத்து விளையாடுவதை விட, சாதாரண குப்பியை வைத்து விளையாடவே விரும்புகிறான். ஒரு பேனாவையோ, புத்தகத்தையோ பத்திரப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. காட்டில் விளையும் பழங்கள், மூங்கில் அரிசி, அவனுடைய நதியில் இருக்கும் மீன்கள்இவையே அவனுடைய உணவு. விருந்தோபலில் அவனை அடித்துக்கொள்ளவே முடியாது. எத்தனை பேர் வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவன் வீட்டில் தங்கலாம்.

  அவனுக்கு நாளையைக் குறித்த எந்தக் கவலையும் இல்லை, பயமும் இல்லை. இறந்தோருக்காக அவர்கள் வருந்துவதில்லை. மாறாக மண்ணுக்குப் போற ஒடம்பு தானே சார் என்று இயல்பாக மரணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இம்மக்கள் குழுக்குழுவாகப் பிரிந்து வாழ்கிறார்கள். ஒரு குழுவைச் சேர்ந்த குழந்தை ஒன்று ஏதோவொரு காரணத்துக்காக மற்றொரு குழுவோடு இணைந்தால், அவர்கள் ஒரே மொழியைப் பேசும் பட்சத்தில் அக்குழந்தையை அந்தக் குழுவே எந்த வித பாரபட்சமும் பாராமல் வளர்க்கிறது. இவற்றைக் கேட்டவுடன் எனக்கு ஜெயமோகனின் ரப்பர் நாவலில் கண்டன்காணி என்னும் ஒரு ஆதிவாசிக்கிழவர் தான் நினைவில் வந்தார். குழந்தை மனம் கொண்ட எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொள்வதைத் தவிர வேறொன்றயும் அறியாத ஒரு முதிர்குழந்தை.

இப்போது பங்கேற்பாளர்கள் அனேகருக்கு எழுந்த ஒரே கேள்விஇவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க நம்மிடம் என்ன இருக்கிறது? என்பது தான். பல பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மரணம் இன்னும் ஆழ்மனதில் வடுவாக. நாளைய தினத்தைக் குறித்தக் கவலைகள், பயம், பொறாமை என்று உழன்று கொண்டிருக்கும் நான் ஒரு நிஷ்களங்கமான ஆதிவாசிக்கு எதைச் சொல்வது.

இப்போது ஆசிரியர்கள் தங்கள் நடைமுறைப்பிரச்சினைகளைப் பேசத்துவங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் இவ்வாதிவாசிகள் எந்த நேரமும் கானகத்தை விட்டு வெளியேற்றப்படலாம். அப்போது இவர்கள் நம்மோடு ஒரே ஓட்டப்பந்தயத்தில் ஓடவேண்டும். இதற்கு இவர்களைத் தயார்ப்படுத்துவது நமது கடமை. அதற்காகவே இப்பள்ளிக்கூடம் செயல்படுகிறது. ஆனால் இவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது அவ்வளவு எளிதல்ல.

முதலில் மொழிப்பிரச்சினை. இவர்களது தாய்மொழி பனியா. இப்பள்ளி தமிழக எல்லைக்குள் இருந்தாலும் இரண்டாவதாக இவர்கள் அதிகம் பேசுவது மலையாளம். மூன்றாவதுதான் தமிழ். அவர்கள் மொழியை ஓரளவாவது தெரிந்து வைத்திருந்தால்தான் அவர்களைத் தம் வசப்படுத்த முடியும் என்பதால் நம் ஆசிரியர்கள் அவர்களது தாய்மொழியான பனியாவில் சில முக்கியமானவற்றைக் கற்று வைத்துள்ளனர்.

அடுத்தது அவனுடைய கவனிக்கும் காலவரையறை. இக்குழந்தைக்கு நீண்ட நேரம் கட்டிடத்திற்குள் அமர்ந்து கற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம். எனவே அவன் கவனத்தை ஈர்ப்பதற்கு ஆசிரியர்கள் கையாளும் நடைமுறைகளை நடித்துக்காட்டினர். அடேங்கப்பா. குட்டிக்கரணம் ஒன்று தான் போடவில்லை. மற்றபடி அனைத்தும் செய்கிறார்கள். இவர்களின் அர்ப்பணிப்பும், மாணவர்களின் மீதான இவர்களது அளவற்ற பிரியமும், அக்கறையும்பிரமிப்பு. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவர்கள் அரசு ஆசிரியர்கள் அல்ல. தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்பவர்கள். காட்டுக்குள்ள 2 கி.மீ நடந்து போகணும் மேடம் ஸ்கூலுக்கு என்கிறார்கள். வழில யானை வரும். யான தொரத்துற வீடியோ கூட இருக்கு. போட்டுக் காட்றோம் என்கிறார்கள். நிலையற்ற வேலை, சொற்ப சம்பளம். இவர்கள் ஆத்ம திருப்தியை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் போலும். இல்லையெனில் இவ்வளவு ஈடுபாட்டோடு வேலை செய்வது இயலாத காரியம்.

சில நேரங்களில் யாராவது ஒரு குழந்தை வகுப்புக்கு வெளியே ஓடி காட்டுக்குள் போய் ஒளிந்து கொள்வானாம். அப்போது ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து காட்டுக்குள் தேடிப்போவார்களாம். ஒரு முறை அப்படிச் செல்லும்போது ஒரு புதர் அசைந்திருக்கிறது. பையன் தான் ஒளிந்திருக்கிறான் என்று நினைத்து புதரை விலக்கிப் பார்த்தபோது ஒரு காட்டு ஆடு ஓடியிருக்கிறது. புலியாக இருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது என்றார்கள் இவ்வாசிரியர்கள். கடைசியில் பையனை எங்கே கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டோம். அவன் 100 ரூவா குடுத்து ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போய்ட்டான் மேடம் (அது உண்டு உறைவிடப் பள்ளி). நாங்க வீட்டுக்குப் போய்ப்பாத்தா ஜாலியா சுள்ளிய எரிச்சுக் குளுர் காஞ்சுகிட்டிருக்கான். அன்னைக்கு ரம்ஜான். பிரியாணிலாம் செஞ்சு வச்சிருந்தோம். கடசில என்ன சாப்ட்டோம்னே மறந்துருச்சு மேடம் என்றார் பரிதாபமாக.

இவை எல்லாவற்றையும் மீறி அவனுக்கு எதையாவது, எப்படியாவது கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இவங்கள்ள ஒருத்தன் டாக்டராவோ, ஐஏஎஸ் ஆபிசராவோ வந்துட்டா கூட போதும். எங்க வாழ்க்கைக்கு அதான் அர்த்தம் என்கின்றனர்.

குழந்தைகள் அவர்கள் மடியில் அமர்ந்து கொள்கின்றன. ஆசிரியர்களை அப்பா என்றும் ஆசிரியைகளைப் பிரியமாக அம்மா என்று அழைக்கின்றன. ஆசிரியைகள் இவ்வுறைவிடப்பள்ளியில் இரவு நேரங்களில் குழந்தைகளோடு தங்கிக்கொள்கின்றனர் தங்கள் பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு.

உடல் வருத்தி, கொடும் மிருகங்களைக் கடந்து, தன் குடும்பத்தை இரண்டாம்பட்சமாக்கி, ஒரு ஆதிவாசிக்குழந்தை தன் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்படும் பட்சத்தில், அது இவ்வுலகில் காலூன்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுத்தறிவிக்கும் இவர்கள் இறைவன் இல்லையென்றால் வேறு யார்???!!!

முறையற்ற ஈர்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி

 குடும்பம் என்னும் அமைப்பு 2

செய்திகளில் அதிகம் அடிபடுவது illicit affairs தான். சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்தப் பிறன்மனை விழைதல் இருக்கிறது. இதில் ஆண், பெண் பேதமில்லை. (Whatever problem I am trying to discuss about, I am always gender neutral. அனைவரும் முதலில் மனிதர்களே. பின்னர் தான் ஆண் பெண் எல்லாம்.) எதனால் இந்தப் பிரச்சினை பூதாகரமாக இருக்கிறது? இதற்கு என்ன தீர்வு? குடும்பம் என்ற அமைப்பைக் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியம்? இப்பிரச்சினையின் வேர் குறித்து ஆராயலாம்.
மனைவி மிகத்திறமையானவராக இருந்தால், சட்டென்று ஒரு தாழ்வு மனப்பான்மை கொள்வது ஆண்களின் இயல்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஒன்று மனைவியை எந்நேரமும் மட்டந்தட்டி அவர்களின் மனவுறுதியைக் குலைக்க முற்படுகின்றனர் அல்லது தங்களை விட குறைந்தவர்கள் என்று இவர்கள் கருதும் பெண்களின்பால் ஈர்க்கப்படுகின்றனர். டாக்டர் நர்சோடும், மேனேஜர் டைப்பிஸ்ட்டோடும் வரம்பு மீறிப் பழகுவது அகைன் க்ளிஷேக்களில் ஒன்று. But cliche is a cliche for a reason. இந்தப் பிரிவில் ஆயிரம் எடுத்துக்காட்டுகள் கொடுக்கலாம். வலிமையான உலகத் தலைவர்கள் துவங்கி நமக்குத் தெரிந்த நம் தெருவில் இருக்கக்கூடிய ஆட்கள் வரை.
வேலைக்குப் போகாத மனைவி இருந்தால், தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களோடு அவர்களை ஒப்பீடு செய்து ஏக்கம் கொள்வதும் நடக்கிறது. மொத்தத்தில் ஆளுமைமிக்கவராக இருக்கவேண்டும், அதே நேரத்தில் குடும்ப குத்துவிளக்காக இருக்கவேண்டும், படித்த, பெரிய வேலையில் இருப்பவராக இருக்கவேண்டும், குழந்தைகளைச் சிறப்பான முறையில் கவனிக்கவேண்டும், தன் தாய், தந்தையரைப் போஷிப்பவராக இருக்கவேண்டும், முக்கியமாகத் தவறாமல் ஒவ்வொரு வேளையும் சமைக்க வேண்டும்.
Come on. Give us a break. Its suffocating.
பெண்களும் இவ்வகை எதிர்பார்ப்புகளில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. என்ன சப்பான்ல கேட்டாஹோ அமெரிக்கால கேட்டாஹோ, அண்ட்டார்ட்டிகால கேட்டாஹோ. என் கெரகம் ஒன்ன கல்யாணம் பண்ணேன்னு நினைக்காத மனைவியர் உலகத்தில் இருக்கிறார்களா தெரியவில்லை. கணவன் அமைதியானவனாக இருந்தால் நீ சோஷியலா இல்ல. நன்றாகப் பேசினால் – தேவயில்லாம ஓவராப் பேசுற. அழகாக ட்ரெஸ் செய்துகொள்ளவேண்டும். ரொமாண்டிக்கா இருக்கணும் – இந்த prewedding photoshootல் நம்ம பசங்க படும் பாடிருக்கிறதே. Unrealistic goals வைத்துக்கொண்டு அதை அச்சீவ் செய்யவேண்டும் என்று படுத்துவது (செடன் கார் தான் வாங்கணும், கட்டாயம் ஃபாரின் டூர் கூட்டிட்டுப் போணும், 1Cக்கு கொறயாம அப்பார்ட்மெண்ட் வாங்கணும், மாமனார் மாமியாருக்குப் பணம் குடுக்கக்கூடாது இத்தியாதிகள்).
தன் எதிர்பார்ப்புகளைத் தன் வாழ்க்கைத்துணை பூர்த்தி செய்யாதபோது எழும் மனவருத்தம் குடும்பத்தில் ஒரு போர்க்களத்தை உருவாக்குகிறது. நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. குடும்பம் என்னும் அமைப்பைக் காப்பாற்றவேண்டியது நமது கடமை. என்ன செய்யலாம்?
உங்களின் வாழ்க்கைத்துணை கடவுளால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவர். ’தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்’ என்கிறது பைபிள். நாம் தனித்திருப்பது நல்லதல்ல என்று நமக்கான துணையை ஏற்படுத்திக்கொடுப்பது இறை. கடவுளால் கொடுக்கப்பட்ட இத்துணையின் பாசிட்டிவ் பாயிண்ட்ஸில் மட்டும் ஃபோகஸ் செய்யுங்கள். இது மிக மிகக் கடினம் என்பதை நான் அறிவேன். ஆனாலும் முயற்சி செய்யுங்கள். பாசிட்டிவே இல்லை என்று முடிவு கட்டுவதற்கு முன் நிதானியுங்கள்.
ஒன்றை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்பாலினத்தைச் சேர்ந்த மற்றவரிடம் உங்கள் வாழ்க்கைத்துணை குறித்த விமர்சனங்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் – அவர் எவ்வளவு நெருங்கிய தோழனாக, தோழியாக இருந்தாலும் சரி. You may talk to a counsellor or an awfully close friend of same sex. But not to a person of opposite sex. Meanwhile focus only on positive points of your spouse. Long years of marriage, midlife crisis etc. would have made you forget how wonderful your spouse is. ஒரு நாவலோ கவிதையோ சரியாக நினைவில்லை – நிலா, பழகிய பெண்டாட்டி போல் கேட்பாரற்று அழகைப் பொழிந்து கொண்டிருந்தது – என்ன ஒரு வருணனை. Look for the forgotten wonder in your spouse.

பணியிடத்தில் வரும் ஃபேட்டல் அட்ராக்ஷன்

 குடும்பம் என்னும் அமைப்பு

எப்பொழுதும், எதிலும் ஒன்றை விட ஒன்று பெட்டராகத் தோன்றுவது மனித இயல்பு. இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது க்ளிஷே வாக்கியமாகத் தோன்றினாலும், இங்கே அதை எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை. சாதாரண போன் மாடல், கார் துவங்கி எல்லாவற்றிலும் இப்படித் தோன்றும்போது, வாழ்க்கைத்துணை விஷயத்திலும் இப்படித் தோன்றுவது சில நேரங்களில் நடக்கிறது.
ஆணும், பெண்ணும் பணியிடத்தில் அல்லது வெளியிடங்களில் சந்திக்கும், பழகும் எதிர்பாலினத்தவரின் மேல் வரும் fatal அட்ராக்ஷன் குறித்தது இப்பதிவு.
ஒருவரின் திறமை வீட்டில் மதிக்கப்படாமல் இருக்கும் போது, அந்தத் திறமைக்கான அங்கீகாரம் வேறொருவரிடத்தில் கிடைத்தால் அப்போது வரும் ஒரு மகிழ்ச்சி வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. இதில் ஆண் பெண் பேதமேயில்லை. எட்டூருக்குப் பஞ்சாயத்துப் பண்ணுகிறவராயிருந்தாலும் பூங்காற்று திரும்புமா என்று பாடிக்கொண்டிருக்கிற ஆண்கள் தான் அதிகம். வெளியே ஒரு ராதாவைப் பார்த்தவுடன் பறக்கிறார்கள். இந்த ஈர்ப்பு மிக வலிமையானதாக இருக்கிறது. குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாவதற்கும் இந்த ஈர்ப்பே காரணமாக அமைந்துவிடுகிறது.
சரி இந்த ஈர்ப்பை எப்படி கையாளுவது? இப்படியொரு ஈர்ப்பே ஏற்படாமல் தவிர்க்கமுடியுமா? கடினம்தான். அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைக்கவே பெறாத, முற்றிலும் தகுதியான ஒருவருக்குக் கிடைக்கும் ஒரு சின்ன பாராட்டுதல் - பாராட்டு எங்கிருந்து வருகிறதோ அதை நோக்கி அவரை இழுத்துச் செல்கிறது. இது ஒரு சுழல்.
If you are in such a position, always remember, this is unreal. This will not take you anywhere. If you allow yourself to be pulled in that direction, the end will be disastrous. Whatever we have to say about our life partner, one person is not a substitute for another. As thalaivar says, எப்பவுமே ஒண்ண விடு ஒண்ணு பெட்டராத்தான் தெரியும். You never know what the other one is all about. So how to handle? Your life partner is God given to you. Marriages are made in heaven. At all costs, a family is to be protected. எப்படி?
பணியிடத்தில் கிடைக்கும் பாராட்டைப் பணியிடத்தோடு விட்டுவிட்டு வந்துவிடுங்கள். It's tough. That's why Bible says one with self-control is better than one who conquers a city (Proverbs 16:32).
நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்கிறார்களா? அது உங்கள் எழுத்துக்குரியது. அதைத் தாண்டிய உங்களுக்கல்ல. உங்கள் வேலை மிகத் தெளிவாக இருக்கிறது என்கிறார்களா? Again, it’s about your work and not about you. Don’t take that and compare with your spouse.
Build a healthy friendship in your workplace. Nothing more than that. So, what is a healthy relationship - a relationship which your life partner is not offended by. As simple as that. Never discuss your personal things with opposite sex. Whatever is happening in your marriage - its none of others business.
MARRIAGE - TO LOVE EACH OTHER EVEN WHEN YOU HATE EACH OTHER(Courtesy: Grey's Anatomy)

4

Friday, May 25, 2018

Drop out ஆனவங்க எல்லாரும் அறிவாளியா

இன்றைய மாணவர்களிடம், நல்லா படிங்கப்பா. படிச்சா தான் லைஃப்னு சொன்னா - நீங்க எப்டி மேம் அப்டி சொல்றீங்க. எவ்வளவோ ஃபீல்டு இருக்கு மேம், பெரிய அளவுல அச்சீவ் பண்ணவங்கலாம் Drop outs தான் மேம் அப்டின்னு நமக்கு அட்வைஸ் பண்றான். ஆ,ஊன்னா பில் கேட்ஸ் காலேஜ் முடிக்கலன்னு சொல்ல வேண்டியது.
ஆனால், இவங்க கவனிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. பில் கேட்ஸ் drop out தான். ஆனா செலவுக்கு வீட்ல பணம் வாங்கிட்டு சுத்தல. His SAT score was 1590/1600 when he was 18 and got a seat in Harvard. He devised an algorithm for a problem posed by his professor, which remained the fastest algorithm for 30 years.
அப்புறம் இருவது வயசுல மைக்ரோசாப்ட் கம்பனிய ஆரமிச்சாச்சு. நம்ம பசங்க க்ளாசுல உக்காந்துகிட்டு ஒரு Focus இல்லாம பில் கேட்சுன்னு ஆரமிச்சா செம கடுப்பாகுது.
சரி அமரிக்கா வர போக வேணாம். நம்ம காமராசர் - படிக்காத மேதை - school க்கு போல. எல்லாம் கரக்ட் தான். ஆனா நாட்டோட விடுதலைக்குப் போராடணும்ங்கிறது அவரோட aim.      இருவது வயசுல அரசியல்ல Full time involved. கொடி சத்யாக்கிரகத்த லீட் பண்ணிட்டு இருந்தார்.

உன் aim என்னனு முடிவு பண்ணிட்டியா? Girl/boy friend கிடைக்கணும், commit ஆகணும் - இதத் தவிர என்ன discuss பண்ற? (Exceptions are there. You can feel free to imagine yourself to be one among them. I don't mind 😜)

நம்ம என்ன செய்யப் போறோம்னு ஒரு தெளிவு இருக்கணும். அத நோக்கி வேல செய்ற மனத்திண்மை இருக்கணும். படிப்பு தேவயிலலன்னு சொல்றது ஒரு அரைவேக்காட்டு வாதம்.Even kamal hassan, dhanush have in many stages expressed their regrets over not completing their education though they are very successful in their professions.

Youngsters first ஒழுங்காப் படிங்க. Drop out ஆன Few handfuls கூட உங்கள Compare பண்ணிக்காதீங்க. சச்சின் டென்த்தோட படிப்ப விட்டுட்டு அம்மா கிட்ட பணம் வாங்கிட்டு ஊர் சுத்தல. நேரா பாகிஸ்தான் மேட்சுக்கு Ground போயாச்சு. அந்த அளவுக்குத் திறமயா இருந்தா மட்டும் அவங்க கூடலாம் உங்கள கம்பேர் பண்ணிக்கோங்க.

லவ் ஃபெயிலியரா - இதப் படிங்க

நம்மில் அனேகர் பதின் பருவங்களில் அழகான காதல் அல்லது காதல் போன்ற ஒன்றைக் கடந்து வந்திருப்போம்     (அவளும் சுண்டு விரல்ல நகம் பெருசா வளக்குறா, நாங்க ரெண்டு பேருமே ரெட் கலர்ல பிரஷ் வச்சிருந்தோம், இத்யாதிகள். என்ன ஒரு காதல் இணை    😜) ஆனால் அந்த வயதில் இது போன்ற  ஒற்றுமைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தெரிந்தன.
  ஒரு வேளை நம் காதல் சம்மந்தப்பட்ட ஆணாலோ பெண்ணாலோ  நிராகரிக்கப்பட்டிருக்கலாம் இல்லையெனில் வேறு ஏதோ காரணங்களால் திருமணத்தில் முடியாமல் போயிருக்கலாம்.  Anyway, life must go on. You could have ended up with a different life partner. But ஒரு கட்டத்தில் உங்கள் மனங்கவர்ந்த எல்லா பாடல்களின் நாயகன்/நாயகியாக உங்கள் வாழ்க்கைத்துணையே மாறுவார். எந்தப் புள்ளியில் இந்த ரசவாதம் ஏற்படுகிறது என்று புலப்படாமலே இந்த மிக அழகான transformation நடக்கும். இதற்குப்பின் உங்களுக்கு மிகப்பிடித்திருந்த (ஒரு காலத்தில் வேறொருவர் ஆக்கிரமித்திருந்த) பாடல் வரிகள் நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்  , உன் பேர் சொல்ல ஆசைதான், என் இன்பம், என் துன்பம் எல்லாமே நீ அன்பே   etc etc எல்லாவற்றிலும் your life partner will be sweetly occupying. நிராகரிப்பின் வலி, that immense pain you've undergone would have vanished forever. Karthik gets kicked out and Mohan occupies the throne, till your death.
So my dear youngsters, ஒரு வேளை காதல் தோல்வியிலோ, நிராகரிப்பிலோ மனம் வேதனையுற்றிருந்தால் அல்லது தீராத தனிமையில் வெந்து கொண்டிருந்தால், don't worry. One fine day, you will reach your wonderful destiny. At that time, your today's sufferings will become a distant past memory 😃

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes